"சயனகோலம் அவளின் அழகு கோலம்
சரிந்த படுக்கையில் தேவதை
கோலம்
சங்கு கழுத்து சிவப்பாய்
ஒளிர்ந்து
சங்கடம் தருகிறது அவளின்
பார்வை"
"சயந்தி அவள் இந்திரன் மகள்
சந்திரன் போன்ற அழகு நிலா
சரீரம் தரும் கவர்ச்சி
மயக்கத்தில்
சற்று நானும் என்னை
மறந்தேன்"
"சக்கர தோடு கழுத்தை தொட
சடை பின்னல் அவிழ்ந்து
விழ
சலங்கை கால் இசை எழுப்ப
சங்காரம் செய்யுது இள
நகை"
"சகுனம் பார்த்தே வெளியே வருவாள்
சஞ்சலம் தந்து பலரை
வருத்துவாள்
சகிதமாய் தோழிகள் சூழ
உலாவுவாள்
சந்தோசம் பொங்க நானும்
ரசிப்பேன்"
"சங்கீதம் பொழியும் அவள் குரல்
சந்தனம் மணக்கும் அவள்
உடல்
சச்சரவு தரா அவள் நடத்தை
சம்மதம் கேட்க இதயம்
ஏங்குது"
"சதாசிவன் மகிழ்ந்த நடன மகள்
சரஸ்வதி ரசித்த இசை மகள்
சந்திக்க நானும் தினம்
கேட்கிறேன்
சத்த மின்றி அவள்
ஒதுங்குகிறாள்"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
0 comments:
Post a Comment