வர்ணத்திரையில் இவ்வாரம் வந்ததும் ,வரவிருப்பதுவும்...

 

'ஜெய் பீம்'

இயக்குனர் ஞானவேல் டி.ஜே இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 39-வது  திரைப்படம்- 'ஜெய் பீம்' தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் சூர்யா சிவகுமார், ராஜீஷா விஜயன், பிரகாஷ் ராஜ், லிஜிமோல் ஜோஸ், கே. மணிகண்டன் உட்பட பலர் நடிக்கிறார்கள் . இப்படம்  நவம்பர் 2-ந் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும்.

 

காத்துவாக்குல ரெண்டு காதல்’

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். லலித் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது.

 

'சிவகுமாரின் சபதம்' விமர்சனம்

இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் ஒரு இயக்குநராகவரும் தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் ஆதி. 'மீசையமுறுக்கு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், மீண்டும் 'சிவகுமாரின் சபதம்' படத்தை இயக்கி, நடித்து வெளியிட்டுள்ளார். பணம் முக்கியமல்லை, மனித உறவுகள்தான் முக்கியம் என்பதைத் தாத்தாவின் வழியில் நிரூபிக்கும் பேரனின் கதையே 'சிவகுமாரின் சபதம்'.கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம், தயாரிப்பு, நாயகன் என எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்திருக்கிறார்  ஆதி. டி.ராஜேந்தருக்கு அடுத்து இவ்வளவு உழைப்பைக் கொடுத்திருக்கும் ஆதியைப் பாராட்டலாம். ஆனால், கதை - திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டுள்ளார்.

 

'சிண்ட்ரெல்லா' விமர்சனம்

 இயக்குனர் வினூ வெங்கிடேஷ் இயக்கத்தில் ராய் லக்ஷ்மி 2 வேடங்களில் நடித்து வெளியான  த்ரில்லர் மற்றும் திகில்/பேய்  திரைப்படம். மேலும் சாக்ஷி அகர்வால், ரோபோ ஷங்கர், அன்புதாசன், கல்லூரி வினோத் உட்பட பலர் நடிக்கின்றனர்.பேய் கதைகளில் கொஞ்சம் வித்தியாசம் காண்பித்து எடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் வினோ வெங்கடேஷ். முதல் பாதி விறுவிறுப்பாகவும், திகிலாகவும் நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் மெதுவாகவும், சுவாரஸ்யம் இல்லாமலும் நகர்கிறது. திகில் காட்சிகள் கைகொடுத்த அளவுவிற்கு காமெடி காட்சிகள் கைகொடுக்கவில்லை.

 

''பேய்மாமா'' விமர்சனம்

இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில்  நடிகர் யோகி பாபு கதாநாயகனான  நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படம். மேலும்

கோவை சரளா, ரேகா,மாளவிகா, மொடடை ராஜேந்திரன், சிங்கம்புலி, எம் எஸ் பாஸ்கர், பிரியங்கா தேஷ்பாண்டே, லொள்ளு சபா மனோகர் உட்பட பலர் நடித்துள்ளார்கள்.வழக்கமான பேய் கதை. பெரிய அளவில் முன்னைய படங்களிலிருந்து வித்தியாசம்  இல்லை. சொல்லும்படியான காமெடி காட்சிகள் ஒன்றும் வரவில்லை.

 

'ருத்ர தாண்டவம்' விமர்சனம்

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, கெளதம் மேனன், ராதா ரவி, தம்பி ராமையா, ராமசந்திரன் துரைராஜ், தீபா ஷங்கர், மாளவிகா அவினாஷ், மாரிமுத்து, வொய் ஜி மகேந்திரா,மனோபாலா நடிப்பில் ,  சமுதாய கருத்துக்கள் உள்ளடங்கிய ஒரு அதிரடி - திரில்லர் கதை களத்தில்  தீய சக்திகளான போதை,சாதி இரண்டினையும் சாடியே குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள மக்களுக்கு தேவையான கருத்துக்களுடன் வெளிவந்த படம்

 

'லிப்ட்' விமர்சனம்

லிப்ட் இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் கவின் மற்றும் அம்ரிதா ஐயர், பாலாஜி வேணுகோபால் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த  திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஹேப்சி தயாரிக்க, இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல்.ஒரே அலுவலகத்தில் மொத்தப் படத்தையும் முடித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் மிக மெதுவாகத்தான் நகர்கிறது படம். ஆனால், சுமார் அரைமணி நேரத்திற்குப் பிறகு வேகமெடுக்கிறது திரை(பேய்)க்கதை. கவினின் நடிப்பு, சில திகில் காட்சிகள், சிறிய அளவிலான சஸ்பென்ஸ் ஆகியவற்றுக்காகப் பார்க்கக்கூடிய படம்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்


No comments:

Post a Comment