"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 07

[கரிகால சோழன்]

முற்காலச் சோழர்களில் மிக முக்கியமான மன்னர்களில் ஒருவர் கரிகால சோழர். இவர் மௌரியப் பேரரசின் விரிவாக்கலை  தென் இந்தியாவில் தடுத்து நிறுத்திய மன்னர் இளஞ்செட்சென்னியின் மகன் ஆவார். மன்னர் கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பெயர்களும் உண்டு. சோழ அரசை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை கொண்ட பேரரசாக மாற்றிய பெருமை மன்னர் கரிகாலனையே சேரும்.

 

சங்ககால இலக்கியங்களில் மற்றும் கல்வெட்டுக்கள் வாயிலாக மன்னர் கரிகால சோழன் பற்றிய பல்வேறு தகவல்களை நாம் பெற முடிந்தாலும், அவருடைய ஆட்சி காலம் குறித்த சரியான தகவல்கள் ஏதுவும் இது வரையில் ஆதாரப் பூர்வமாக கிடைக்க வில்லை. கி.மூ 270ல் இருந்து கிபி 180க்கு இடைப் பட்ட காலத்தில இவர் ஆட்சி செய்து இருக்கலாம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

 

கரிகாலன் என்ற பெயர் ஒரு காரணப் பெயர் ஆகும். இந்த காரண பெயர் குறித்து இரு வேறு கருத்துகள் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இடையில் நிலவுகிறது. கரிகால சோழனுடைய சிறுவயதிலேயே அவருடைய தந்தை இளம்சேட்சென்னி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கரிகால சோழன் பாதுகாப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறினார். சரியான மன்னர் இல்லாது இருந்த சோழ நாடு பெரும் அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தது. சோழர் பரம்பரைக்கு ஆதரவாக இருந்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கருவூரில் இருந்த சோழ இளவல் கரிகால சோழனை நாட்டை ஆளக் கூட்டி வந்தனர். ஆனால் கரிகால சோழனுடைய அரசியல் எதிரிகள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரிகால சோழன் சிறையில் அடைக்கப் பட்டு இருந்தாலும் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அவருடைய செல்வாக்கு ஏறிக் கொண்டே இருந்தது. இதனால் கரிகால சோழனை கொல்ல நினைத்த அவருடைய அரசியல் எதிரிகள் கரிகால சோழன் அடைக்கப் பட்டு இருந்த சிறைச் சாலைக்கு தீ வைத்தனர். அந்தத் தீயில் இருந்து தப்பிச் செல்லும் பொழுது கரிகால சோழனுடைய கால்கள் கருகின. இதன் காரணம் கொண்டு பின்னர் இவர் கரிகாலப் பெருவளன்தான் என்று அழைக்கப்பட்டார். பின்னர் அதுவே மருவி கரிகால சோழனாக நிலைத்தது. சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கரிகால சோழன் அவருடைய மாமன் இருபிடர்தலையன் உதவியுடன் பெரும் படையை திரட்டி எதிரிகளை தோற்கடித்து சோழ அரியசானத்தில் [சிம்மாசனத்தில்] மன்னராக அமர்ந்தார். சில ஆராச்சியாளர்கள் கரிகாலன் என்ற பெயருக்கு வேறு காரணம் கருதுகிறார்கள். கரி என்றால் யானை காலன் என்றால் எமன், அதாவது யானைகளை கொன்றவன் என்கின்ற அர்த்தத்தில் வந்த பெயர்தான் கரிகாலன் என்று கருதுகிறார்கள்?

 

கரிகால சோழன் சோழ சிம்மாசனத்தில் மன்னராக அமர்ந்து அவரது ஆட்சியை நன்றாக வேரூன்ற செய்வதற்கு முன்பே, கரிகால சோழனை தோற்கடித்து சோழ நாட்டை வெற்றி பெறும் நோக்கத்துடன் பாண்டிய மன்னரும் சேர மன்னரும் மற்றும் 11 குறுநில மன்னர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே அணியாக பெரும் படை கொண்டு சோழ நாட்டின் மீது போர் தொடுத்தார்கள்.

 

சங்ககால போர்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் இந்தப் போர் நடந்தது. அதிக படை பலம் கொண்டு கரிகால சோழனை எளிதாக போரில் வெற்றி கொள்ளலாம் என்று கருதி போர் தொடுத்து வந்த அத்தனை மன்னர்களையும் அவர்களின் பெரும் படைகளையும் கரிகால சோழன் நிர்முலமாக்கி போரில் வெற்றிவாகை கொண்டான். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே ஆகும். ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்து விட்டான். இப் போரில் கரிகால சோழன் எய்த அம்பினால் மார்பிலிருந்து பின் முதுகு வரை துளைக்கப் பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன், இது தனக்கு ஏற்பட்ட பெரும் அவமானம் எனக் கருதி வடக்கிருந்து உயிர் துறந்தார் என வரலாறு கூறுகிறது. இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானூற்றுப்புலவர் புறநானூற்றுப் பாடல் 65 மூலம் விளக்குகிறார்.

மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப

இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப,

சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப,

புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்

வாள் வடக்கிருந்தனன்…..”

(புறநானூறு 65)

 

வெண்ணி ஊரில் பிறந்த குயவர் தொழில் மரபில் வந்த பெண் புலவர் ஒருவர் கரிகால சோழனை புகழ்ந்து புறநானூறு 66 இல்:

 

நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!

களி இயல் யானைக் கரிகால் வளவ!

சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற

வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே,

கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை

மிகப் புகழ் உலக மெய்திப்

புறப் புண் நாணி வடக்கு இருந்தோனே”

(புறநானூறு 66)

 

காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே!  செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே! போருக்குச் சென்று உனது வலிமை தோன்றுமாறு வெற்றி கொண்டவனே!  மிகுந்த அளவில் புதிய வருவாய் உள்ள வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்ற போரில், முதுகில் புண்பட்டதற்கு நாணி, வடக்கிருந்து மிக்க புகழுடன் விண்ணுலகம் எய்திய சேரமான் பெருஞ்சேரலாதன் உன்னைவிட நல்லவன் அல்லனோ? என்று கேட்க்கிறார். இவற்றைவிட, அகநானூறு 55, மற்றும் சிலப்பதிகாரம் போன்ற வற்றிலும் இவனைப் பற்றிய குறிப்புக்கள் உண்டு.

 

இவனது படைப்  பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்க்காமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

 

இவன் தாய் வயிற்றில் இருக்கும் போதே தந்தை இறந்து விட்டார். எனவே, பிறக்கும் முன்பே அரசுரிமையை பெற்றவன் இவன் என்பதை

 

‘‘உருவப் பஃறேர்; இளையோன் சிறுவன்

முருகன் சீற்றத்து உருகெழு குரிசில்

தாய் வயிற்றிலிருந்து தாயம் எய்தி’’ (128 - 130)

 

என்று பெருநராற்றுப்படை கூறும்.  இவனுக்குப் பல குழந்தைகள் இருந்தனர் என்பதை

 

"……………………….. தன் ஒளி மழுங்கி

விசி பிணி முழவின் வேந்தர் சூடிய

பசு மணி பொருத பரு ஏர் எறுழ்க் கழல் கால்,

பொன் தொடிப் புதல்வர் ஓடி ஆடவும்," " (292 - 295) 

 

என்ற பட்டினப்பாலை  வரிகளால் அறியலாம். அதாவது தங்களின் மறம் குறைந்த, வார் இறுக்கமாகக் கட்டிய முழவினையுடைய வேந்தர்களின் பச்சை மணியையுடைய முடி, பருத்த அழகிய வீரக் கழலினைக் கட்டிய கரிகாலனின் கால்களைத் தொட, பொன்னால் செய்த தொடிகளை [வளையல்களை] அணிந்த அவனது புதல்வர்கள் ஓடி ஆடி விளையாடவும் என்கிறது.

 

கரிகாலன் இமயம் நோக்கி படை எடுத்தார் என்று சிலப்பதிகாரம் மட்டுமே கூறுகிறது. மற்றும்படி வேறு ஆதாரங்கள் ஒன்றும் இல்லை. அதேபோல இலங்கை மீது படையெடுத்தார் என்றும் கல்லணை காட்டினார் என்றும் செய்திகள் உண்டு.

 

அணை எனப்படுவது ஒரு நீரோட்டத்தின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இது நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன்படுகின்றன.

 

முதலாம் பராந்தகச் சோழனின், கி பி  932 ஆண்டை சேர்ந்த  வேலஞ்சேரி செப்பேடு ஒன்று திருத்தணிக்கு [Thiruttani] அருகில் உள்ள வேலஞ்சேரியில் [Velanjeri]  6-10-1977 அன்று கண்டு பிடிக்கப்பட்டது. இதில் கரிகாலனை பற்றிய குறிப்பில்:

 

"அவனுடைய [கரிகாலனின்] ஆணையாலே காவேரியின் இரு மருங்கும் கரை எழுப்பியது . காஞ்சி நகரத்தில் மேகம் தழுவும் மாளிகைகள் நிறைந்தன" [He raised embankments on either side of river Kaveri and controlled its flood and  he made Kanchi a city of palaces] என்று குறிக்கப்பட்டுள்ளது. அதாவது காவேரி பெருக்கெடுப்பதை தவிர்க்க இரு கரையும் ஆணை எழுப்பப்பட்டது தெரியவருகிறது. ஆனால் நீரோட்டத்தைத் தடுத்து சேமித்து வைக்கவில்லை போல் தோன்றுகிறது. மேலும் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப் பாலையில் கல்லணை பற்றி ஒன்றுமே கூறப்படவில்லை. ஆகவே கரிகாலன் உண்மையில்  கல்லணை கட்டினானா என்ற ஒரு கேள்வி எழுகிறது?

 

எனினும்

"காடுகொன்று நாடாக்கி

குளந்தொட்டு வளம்பெருக்கி"

என்ற பட்டினப்பாலை 283 - 284 அடிகள், அவன் காடுகளை அழித்து விளை நிலங்களாக மாற்றினான், மழை நீர் தேங்கும் குளங்கள் அமைத்து நீர் வளத்தை பெருக்கினான் என்கிறது. ஆகவே காவிரி ஆற்றின் கிளை ஆறான, கொள்ளிடம் ஆற்றின் (Coleroon)  ஊடாக கடலில் தண்ணீரை சேர்ப்பதிலும் பார்க்க, அதிக தண்ணீரை காவிரி ஆற்றிற்க்குள் திருப்பி விட்டு வெள்ளத்தை கட்டுப்படுத்த வில்லை என்றால், காவிரியின் இரு பக்கமும் கரைகளை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது? அது மட்டும் அல்ல, வயல்களுக்கு பாசனம் செய்ய அதிக தண்ணீர் சேமித்து வைக்கவில்லை என்றால், எதற்க்காக அவன் காடுகளை அழிக்க வேண்டும்? இவைகளையும் கவனத்தில் எடுத்து, கரிகாலன் கட்டினானா இல்லையா என்பதை நாம் அலசவேண்டும் என்று கருதுகிறேன்  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 08 - "முடிவுரை" தொடரும்.

மேக்-அப்பு மாஸ்க்-அப்பு அலங்கார, வர்ண முகக் கவசங்கள்-தமிழ் நகைச்சுவை by Santhiragasan -comedy

[04]-Tamil Comedy-

மேக்-அப்பு மாஸ்க்-அப்பு அலங்கார, வர்ண முகக் கவசங்கள்-தமிழ் நகைச்சுவை





[03]-Tamil Comedy

-Thanglish TharmaRasar 4TR-by Santhiragasan



தங்லீஷ் தர்மராசர் -நகைச்சுவை-

 நடிப்பு ,குரல் :செ-சந்திரகாசன் 

👦👧👨👩👰👱👲👳👴👵👶👷👸👼💁

[02]-Tamil Comedy Old Vs New Songs தமிழ் நகைச்சுவை-பழைய பாடல்களா, புதிய பாடல்களா சிறந்தவை? -Santhiragasan



இயக்கம் ,குரல்,நடிப்பு :செல்வதுரை சந்திரகாசன்


👦👧👨👩👰👱👲👳👴👵👶👷👸👼💁

[01]:-Tamil Comedy Dum Dum Funeral Services:தமிழ் நகைச்சுவை - டும் டும்




தமிழ் நகைச்சுவை - டும் டும்



புகையில்லா புதுவாழ்வு!

புகைப்பவருக்கு புகை பல்வேறு நோய்களை தருவது மட்டுமின்றி, அருகில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இலவசமாக மரணத்துக்குரிய நோய்களைத் தந்து விடுகிறது என்பதுதான் புகைப்பவர்கள் தன்னையும் அறியாமல் செய்யும் கொடும் செயல்!


அப்படி என்னதான் புகையால் தீமைகள் ஏற்படுகின்றன? என்றால், முதலில் புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே தீய எண்ணம்தான்! ஒரு வெண் சுருட்டில் மட்டும் தார், நிக்கோட்டின், துத்தநாகம், சல்பர் போன்ற 148 வகையான வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒரு சேர பாதிக்கும். நச்சுகளின் மொத்த நாசகாரக் கலவைதான் இந்த வெண் சுருட்டுகள்!

 

உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுபடி ஒரு நாளைக்கு 20 வெண் சுருட்டுகள் வீதம், 20 வருடங்களுக்கு தொடர்ந்து புகைத்தால் நுரையீரலில் புற்று நோய் வர வாய்ப்புள்ளது. ஆனால் இது பல வருடங்களுக்கு முன்பு வரையறை செய்யப்பட்ட ஒரு கணிப்புதான்! ஆனால் இப்போது காலம் மாறி கிடக்கும்போது, பத்து வருட அளவிலேயே பெரும் கேடுகள் நிகழ்ந்து விடுகின்றன.

 

முதலில் பாதிக்கப்படுவது சுவாச மண்டலம்தான். ஒவ்வாமை, தும்மல், சளித் தொந்தரவுகள், இடைவிடா இருமல், இழுப்பு போன்றவை வரும். பிறகு இது ஆஸ்துமாவாக, மூச்சிரைப்பாக மாறும். சிலருக்கு காசநோயும் வரலாம். இவற்றின் தொடர்ச்சியாக நுரையீரல் புற்றுநோயும் வரலாம்.

 

இது விளையாட்டான செயல் அல்ல. கடும் விளைவுகளில் சிக்கிக்கொண்டு சிதறுண்டு போவதற்கான ஒரு முன்னோட்டமாக அமைந்து நம்மை அழித்து விடும். பிறகு பாதிக்கப்படுவது இதயம். இதயத்தின் ரத்தக் குழாயில் நச்சுக்கள் படியும்போது இதயத்தில் சுவர்கள் தடித்து வீங்கி, ரத்தக்குழாயின் அளவு சுருங்கி மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.

 

சுருங்கச் சொன்னால் சுத்தமான குடிநீரில் அசுத்தமான கழிவு நீர் இரண்டறக் கலப்பது போலத்தான் இங்கும் நடக்கிறது. இதயத் தமனியின் வீக்கம், நுரையீரல் நீர்க்கோவை, இதயத் தசைகளின் செயலிழப்பு என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகின்றன. சில சமயங்களில் மூச்சு மண்டல - இதய செயலிழப்பும் ஒரு சேர ஏற்பட்டு அது உயிரை உடன் பறித்து விடுகிறது.

 

புகைப்பவர்கள், தேநீர் குடித்துக்கொண்டே புகைக்கும்போது பசி உணர்வு இல்லாமல் போகிறது. இப்படி தொடர்ந்து வினைகள் நடக்கும்போது எதிர்வினையாக குடற்புண்ணும், குடற் சுருக்கமும் ஏற்பட்டு பசி இல்லாமல் போகிறது. இந்நிலை நீடித்தால் குடற்புற்று நோய் வரும்.

 

இதில் சிக்கல் என்னவென்றால் ஒரு முறை புகையை உள்ளிழுத்து வெளியில் ஊதிய பிறகு மனம் முழுவதாக நிறைவடைவதில்லை. மூளையின் முன் பக்க செல்கள் வேதிப் பொருட்களை தொடர்ந்து சுரந்து மீண்டும், மீண்டும் புகைக்கும் ஆவலை ஏற்படுத்துகின்றன.

 

இல்லை என்றால் ஒரு விதமான பயம் - பதட்ட உணர்வு நிலைக்கு அழைத்து செல்கின்றன. இந்த நரம்பு சார்ந்த வேதிகளின் அதாவது 'கார்ட்டிசால்', 'அட்ரீனலின்' போன்றவை பழக்கத்திற்கு அடிமையாக்குகின்றன. மனம் குழம்பிய நிலையை தற்காலிகமாக தோற்றுவித்து விடுகின்றன.

 

இந்த நிலைமைகளை சமாளிக்க முடியாத மனிதன் மீண்டும் அந்த நெருப்பை பற்றவைத்து விடுகிறான். அதே நெருப்பிலேயே வெந்தும் சாகிறான். மன உறுதி, தியானம், உடற்பயிற்சி, மனநல ஆலோசனை, சுயக் கட்டுப்பாடு, யோகா போன்றவற்றால் மட்டும்தான் இந்த பழக்கத்தை விட்டொழிக்க முடியும். புகை பிடிக்காமல் இருந்தால் எப்போதும் நிம்மதி கிடைக்கும்.

புகைக்கு அடிமையாகாமல் இருக்க! புகையை அடியோடு மறப்போம். ஆனால்... 

மறவாதீர்கள்!! புகைத்தல் உங்களை மட்டுமன்றி, உங்களுடன் வாழ்வோரையும் மரணத்தை நெருங்கச்செய்யும்.

ஆதாரம் : கூடல் இணையத்தளம்

பூமி என்னும் சொர்க்கம் 11:

பனி யுகம்

சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தில் மக்கள் வசித்துவந்தார்கள். அவர்கள் எப்படி வசித்தார்கள் என்று தெரியாவிட்டாலும் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.


ஆனால் ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நார்வே, ஸ்வீடன், டென்மார்க், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் அப்போது இருக்கவில்லை. கனடாவும் இல்லை. ஏனெனில் அவை அனைத்தும் பனிக்கட்டிக்கு அடியில் இருந்தன. அமெரிக்காவின் வட பகுதியும் இதேபோல பனிக்கட்டிக்கு அடியில் இருந்தது. ரஷ்யாவின் வட பகுதியும் இப்படித்தான் இருந்தது.


பனிக்கட்டி என்றால் சாதாரணப் பனிக்கட்டி அல்ல. தரையிலிருந்து 3 முதல் 4 கிலோ மீட்டர் உயரத்துக்குப் பனிக்கட்டி மூடியிருந்தது. எங்கு பார்த்தாலும் ஒரே பனிக்கட்டிதான். சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை 3 கிலோ மீட்டர் உயரத்துக்குப் பனிக்கட்டி மூடியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.


பூமியில் இப்படிச் சில பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்த காலத்தை பனி யுகம் என்கிறார்கள்.


வட துருவப் பகுதியில் உள்ள கிரீன்லாந்தின் நிலப் பகுதி இப்போது 80 சதவிகித அளவுக்குப் பனிக்கட்டியால் மூடப்பட்டதாக உள்ளது. பூமியானது திடீரென்று குளிர்ந்து போனால் கிரீன்லாந்தின் பனிக்கட்டி தெற்கு நோக்கிப் பரவி பழையபடி மேலே குறிப்பிட்ட நாடுகளை எல்லாம் மூடிவிடும். அமெரிக்காவின் நியூயார்க் நகரமும் பனிக்கட்டியால் மூடப்பட்டுவிடும்.

 

கடந்த காலத்தில் பல நாடுகள் பனிக்கட்டியால் மூடப்பட்டிருந்ததற்குப் பூமி குளிர்ந்து போனதே காரணம். சூரியனிடமிருந்து பூமியானது வெப்பத்தைப் பெறுகிறது. இந்த வெப்பம் குறைந்து போனால் பூமி குளிர்ந்து போகிறது. இதற்குச் சூரியன் காரணமல்ல, பூமிதான் காரணம்.


சூரியனை பூமி சுற்றி வருவதை நாம் அறிவோம். பூமியானது ஒரு பக்கமாகச் சாய்ந்த நிலையில்தான் சூரியனைச் சுற்றிவருகிறது. இந்தச் சாய்மானம் காரணமாகத்தான் பூமியில் கோடைக்காலம், குளிர்காலம் ஆகிய பருவங்கள் ஏற்படுகின்றன. ஆனால் இந்தச் சாய்மானம் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. இப்போது சாய்மானம் 23.5 டிகிரி அளவில் உள்ளது.

 

 

 

இது 24.5 டிகிரியாக அதிகரிக்கும். பின்னர் சாய்மான அளவு குறைய ஆரம்பித்து பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, சாய்மானம் 22.1 டிகிரியாக மாறும். பிறகு மறுபடி சாய்மானம் அதிகரிக்கும். தவிர, பூமியின் அச்சு வானில் ஒரு வட்டம் போடுகிறது. அந்த அளவில் சாய்மானம் நேர் மறுபுறத்துக்கு மாறி விடும். அப்படி மாறினால் என்ன ஆகும்? தமிழகத்தில் டிசம்பரில் வெயில் பொசுக்கும். மே மாதம் குளிர்காலமாக இருக்கும்.

 

இப்படியான மாறுதல்கள் மட்டுமின்றி, பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரமும் மாறுபடுகிறது.

 

பூமியானது சூரியனைச் சற்றே நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஆகவே ஜனவரி மாதத்தின்போது சூரியனுக்கு உள்ள தூரம் 147 மில்லியன் கிலோ மீட்டராக உள்ளது. ஜூலையில் இது 152 மில்லியன் கிலோ மீட்டராக உள்ளது. எனவே சூரியனுக்கு உள்ள தூரத்தில் ஏற்படும் மாறுபாடு 5 மில்லியன் கிலோ மீட்டராக உள்ளது. இது பெரிய வித்தியாசம் இல்லை.

 

எனினும் இந்த வித்தியாசம் சில நேரங்களில் அதிகரித்துவிடுகிறது. இதுவரை கூறப்பட்ட அம்சங்களின் விளைவாக சூரியனிலிருந்து பூமிக்குக் கிடைக்கும் வெப்பம் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்து போகிறது.

 

செர்பியா நாட்டைச் சேர்ந்த மிலுடின் மிலன்கோவிச் என்னும் நிபுணர்தான் 1913-ம் ஆண்டில் இந்த மாறுபாடுகள் குறித்த தமது கொள்கையை வெளியிட்டார்.

 

பூமியின் வட கோளார்த்தத்தில் கோடைக்காலத்தில் வெயில் நன்கு உறைக்கிற அளவுக்கு இருக்குமானால் குளிர்காலத்தில் சேர்ந்த பனிக்கட்டிகள் உருகிவிடும். கோடைக்காலங்களில் தொடர்ந்து வெயில் அளவு குறையுமானால் பனிக்கட்டிகள் மேலும் மேலும் சேர்ந்து இறுதியில் பனி யுகம் தலைகாட்ட ஆரம்பிக்கும்.

 

வருகிற ஆண்டுகளில் மறுபடி பனியுகம் தலைகாட்ட வாய்ப்பில்லை. இப்போது பூமியின் சராசரி வெப்பம் அதிகரித்து வருவதாகவே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதன் விளைவாக துருவப் பகுதிகளில் குறிப்பாக வட துருவத்தில் பனிக்கட்டி அளவு குறைந்துவருகிறது.

கட்டுரையாளர்,எழுத்தாளர்-தொடர்புக்கு: nramadurai@gmail.com

 


சித்தர் சிந்திய முத்துக்கள் .....3/56

 


****************************************************

சித்தர் சிவவாக்கியம்-471

வாயில் எச்சில் போகவே நீர் குடித்து துப்புவீர்

வாயிருக்க எச்சில் போனவாற தென்ன தெவ்விடம்

வாயிலெச்சில் அல்லவோ நீருரைத்த மந்திரம்

நாதனை அறிந்தபோது நாடும் எச்சில் ஏதுசொல்.                

வாயில் எச்சில் போக வேண்டும் என்று நீரைக் குடித்து வாய் கொப்புளித்து துப்புவீர். வாய் இருக்க அதைவிட்டு எச்சில் போவது எவ்வாறு? நீங்கள் ஓதுகின்ற போதெலாம் மந்திரங்கள் வாயிலுள்ள எச்சிலால் அல்லவோ உருவாகி வெளிவருகின்றது. ஆதலால் எச்சிலால் ஆன நீரே ஈசன்தான் என்பதை அறிந்து அவனையே நமக்குள் நாடி தவம் புரியும் இடமே எச்சிலால் ஆனது. அது எது என்பதைச் சொல்லுங்கள்.

***************************************************

சித்தர் சிவவாக்கியம் --473

மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில்

சாதிபேதமாய் உருத்தரிக்குமாறு போலவே

வேதமோது வானுடன் புலைச்சி சென்று மேவிடில்

பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே.                  

எருமைக் கெடாவும் பசுமாடும் இணைந்து புணர்ந்தால் அதனால் ஏற்படும் பசுவின் சூலில் இரண்டுங் கெட்ட தன்மையான உருத்தரித்து பிறந்து இறக்கும். ஏனெனில் அவை இரண்டும் வேறு வேறு சாதி. ஆனால் அதைப் போல மனிதர்களில் சாதி பேதம் பேசும் மதியில்லாதவர்களே! வேதம் ஓதும் மேல் சாதி எனக் கூறும் பிராமணன் கீழ் சாதி எனக் கூறும் புலைச்சியுடன் இணைந்து புணர்ந்தால் அதனால் அப்பெண் கருவுற்று பிறக்கும் குழந்தை எந்த சாதி பேதமும் இல்லாமல் தானே பிறந்து வளர்கிறது. இயற்கை இப்படி இருக்கும் போது இதில் எங்கிருந்து வந்தது சாதி? ஆதலால் மனிதகுலம் யாவும் ஓரினம்தான் என்பதை உணருங்கள்.   

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 474

வகைக் குலங்கள் பேசியே வழக்குரைக்கு மாந்தர்கள்

தொகைக் குலங்கலான நேர்மை நாடியே யுணர்ந்தபின்

மிகைத்த சுக்கிலமன்றியே வேறுமொன்று கண்டிலீர்

நகைத்த நாதன் மன்றுள் நின்ற நந்தினியாரு பேசுமே.     

எங்கள் குலமே உயர்ந்தவகை என்று விதண்டவாதம் பேசி வழக்குரைக்கும் மனிதர்களே எல்லா மனிதர்களும் ஒரே வகைதான் என்ற உண்மையை உணர்ந்து அவையாவும் நீரினில் தோன்றிய நேர்மையை அறிந்து எல்லோர்க்கும் பொது நீதியாக உள்ள அதையே நாடி தியானித்திருங்கள். இதுவரையில் அதை அறியாமல் இரைத்த சுக்கிலத்தால் வரும் இன்பத்தை யன்றி வேறு ஒன்றையும் நீங்கள் கண்டதில்லை. சோதியான விந்தி லிருந்தே அனைத்தும் வந்தது என்பதையும் அதைச் சேர்வதுவே மெய்யான பேரின்பம்  என்பதையும் அறிந்துணர்ந்து அதியே நாடியிருந்து பிறவிப் பிணியை ஒழியுங்கள். சிரித்துத் திரிபுரம் எரித்த ஈசன் நம்புருவ நடுவில் நின்று ஆடுவதையும் முத்தீயும் ஒன்றாகி நம் தீயான நந்தியாக நின்றதையும் அறிந்து தியானித்திருங்கள். நந்தியே நம் குருவாக வந்து பேசுவதை உணர்ந்து கொள்ளுங்கள்.          

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 475

ஓதும் நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும்

பூதத் தத்துவங்களும் பொருந்தும் ஆகமங்களும்

சாதி பேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும்

பேத பேத மாகியே பிறந்துழன்று இருந்ததே.            

ஓதுகின்ற நான்கு வேதங்கள் கூறும் உண்மையும், அனைத்து சாஸ்திரங்களில் உரைத்த உண்மையும், ஐந்து பூத தத்துவங்களில் உள்ள உண்மையும், ஒன்றான மெய்ப்பொருளை அறிவதற்கே அமையப் பெற்றுள்ளது. அதுவே சாதி பேதம் இல்லாத உண்மையாக இருப்பது. அதைப் பற்றியே அனைத்து நூல்களும் பலவிதமான பேதமாக கூறி வருகின்றது. அந்த மெய்ப்பொருளே உலகம் எங்கினும் பலவிதமான சாதி பேதங்களாக பிறந்து உழன்று கொண்டிருக்கின்றது.                 

***************************************************

..அன்புடன் கே எம் தர்மா.