வர்ணத்திரையில் இவ்வாரம்....

 


ஈழத் தமிழர்கள் - ‘ஆறாம் நிலம்’

ஒரு டாக்குமெண்டரி படமாக இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கத்தில் ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும், துயரங்களையும் மையமாக வைத்து வெளியான படம். முதன்மை கதாபாத்திரத்தில் நவயுகா, சிறுமி அன்பரசி, நடிகர் மன்மதன் பாஸ்கி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை நேரடியாக யூடியூபில் வெளியிட்டு உள்ளனர்.

 

பிரண்ட்ஷிப்

மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் 4 நண்பர்களை சுற்றி நடக்கும் கதை. அதில் லாஸ்லியா வித்தியாசமானவர் என்பதையும், ஆண் நண்பர்களுடன் விரசமின்றி பழக முடியும் என்பதையும் நிரூபிக்கிறார்.மேலும் இப்படத்தில்  ஹர்பஜன் சிங், அர்ஜுன் சர்ஜா, சதீஷ், பாலா, எம் எஸ் பாஸ்கர் உட்பட பலர் நடிப்பில் வெளியாகிய படம்.

 

கோடியில் ஒருவன்

கொலைகாரரால் விதவையாகப்பட ஒரு தாயின் கனவை நிறைவேற்றும் மகனின் கதை. அதிரடி மற்றும் திரில்லர் நிறைந்த இப்படத்தில்  விஜய் ஆண்டனி, ஆத்மிகா, திவ்ய பிரபா, ராமச்சந்திர ராஜு, கோபி ஜி பி ஆர், சச்சின் கஹெடேகர் உட்பட பலர் நடிப்பில் வெளியாகிய படம்.

 

டிக்கிலோனா

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், அனகா, ஸ்ரின் காஞ்வாலா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் மேலும் யோகி பாபு, ஆனந்தராஜ், முனீஷ்காந்த் ராமதாஸ்

ராஜேந்திரன், ஷா ரா, நிழல்கள் ரவி, சித்ரா லக்ஷ்மணன், பிரஷாந்த்,

ஹர்பஜன் சிங் உட்பட பலர் நடிப்பில் வெளியாகிய படம்.

விரக்தியில் வாழ்ந்து வரும்  சந்தானத்திற்கு மின்சாரம் சரி செய்ய போன இடத்தில் டைம் மிஷின் ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம் 2020 ஆம் ஆண்டுக்கு சென்று தன்னுடைய திருமணத்தை தடுத்து நிறுத்த முற்படுகிறார். இறுதியில் தனது திருமணத்தை தடுத்து நிறுத்தினாரா? 2027 ஆம் ஆண்டிற்கு திரும்பி வந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

தலைவி

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுக்  கதையில் வெளியான படம். ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்,  எம்.ஜி.ஆராக அரவிந்தசாமி, ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனி, வி.என்.ஜானகியாக மதுபாலா, சரோஜாதேவியாக ரெஜினா கசன்ட்ரா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் கருணாநிதியாக நாசர்,

சந்தியாவாக பாக்கியஸ்ரீ, ஜானகி ராமசந்திரன் ஆக மது, சோபன் பாபு ஆக ஜிஸ்ஸு செங்குப்தா, மாதவனாக  தம்பி ராமையா, சசிகலாவாக பூர்ணா, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

 

லாபம்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்  வெளியாகிய படம். கிராமத்தில் விவசாய நிலங்களை அபகரித்து, மக்களை அடிமையாக்கி, விலை நிலங்கள், விவசாயத்தின் நன்மை, விவசாயிகளின் நிலைமை, விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை விளக்கி அவ் அநியாயங்களை வெற்றிகொள்ளும் நாயகனின் கதை. இப்படத்தில் விஜய் சேதுபதி, சுருதி ஹாசன்,

கலையரசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா, ரமேஷ் திலக், டேனியல் ஆன்னி போப், பிருத்வி ராஜன், மாரிமுத்து, வின்சென்ட் அசோகன்,

சண்முகராஜன், ஓ.எ.கே. சுந்தர் ஆகியோர் நடிக்கின்றனர்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்


1 comment:

  1. வேந்தன்Sunday, September 26, 2021

    கைபேசி கமரா கூட இன்று தெளிவாக படம் எடுக்கும். சூரிய ஒளி நிறைந்த இலங்கையில் எப்படி ஒரு இருட்டான படத்தினை எடுக்கமுடிந்தது ஆச்சரியம் தான்.வழக்கம்போல் பல இடங்களில் மெளனம். மொழி உண்டு.வாய் உண்டு. மாறா வலிகளும் நிறைய உண்டு. நிறையப் பேசியிருக்கலாம். முதுகுப்பக்க படப்பிடிப்பு அதிகம். அப்பம்மா முகம் சரியாக தெரிய 30 நிமிடம் சென்றது.திடீரென்று ஒரு வெள்ளைக்காரன் நேர்காணல்.40 நிமிடத்தின் பின்னரே அம்மணியின் பிள்ளை அச்சிறுமி என புரிகிறது.அப்பொழுதே அம்மணியின் கவலைக்குரிய காரணமும் புரிகிறது. கடந்து வந்த வலிகளுடன் புதிய நிகழ்கால வலிகளும் நெஞ்சில் பாரத்தினை கொடுத்தது.ஈழ திரைப்பட வரலாறில் இப்படத்தில் அனைவரும் பேசும்போது முகபாவம் மட்டும் முன்னேற்றம். வலிகளை நினைந்து கொள்ள தமிழர்கள் பார்க்கலாம்

    ReplyDelete