'அ' கரமே பல உலக மொழிகளின் முதல் எழுத்து.
"அகர
முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவான் முதற்கே உலகு"
என்பது பொய்யாப் புலவரின் மெய்வாக்கு.
அவர் இருந்த காலத்தில் உலக மொழி என்று எந்த ஒன்றையும் அவர் அறிந்திருக்கும்
வாய்ப்பில்லை என்றாலும், அவரின் ஞான திருஷ்ட்டியினாலோ என்னவோ 'அ' ஒலிதான் மொழிககு
முதல் எழுத்தாக அமையும் என்று எழுதி வைத்துவிட்டார்.
உலகின் 6500 க்கும் அதிகமான
பேசப்படும் மொழிகளில் பெரும்பாலானவை 'அ ' ஒலியைத்தரும் எழுத்தையே தத்தம் நெடுங்கணக்கின்
முதல் எழுத்தாக ஏற்படுத்தி இருப்பது மிகவும் வியக்கப்படக்கூடிய விடயமே! அப்படித்
தொடங்காதவை ஒரு சில மட்டுமே!
தமிழ் எழுத்துக்களின் ஆரம்ப காலம் எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பானது என்பது
துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. எழுத்துக்கள் எழுத்து மொழிக்கான
அடிப்படைத் தேவையாகும், தமிழர் நாகரிக வெற்றிக்கு எழுத்து ஒரு முக்கிய கருவியாக
இருந்து, காலத்தோடு
சேர்ந்து எழுத்து வடிவங்களும் மாறிக்கொண்டு வந்திருக்கின்றது. நாகரிகங்கள்
அழிக்கப்பட்ட போது,
அவர்களின் மக்கள், சிதறடிக்கப்பட்டு, இடம் பெயர்ந்து
புதிய சூழல்களில் வாழ வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டி இருந்த போது, எழுத்துக்கள் சில
சேர்க்கப்பட்டு, சில
விலக்கப்பட்டு இருந்தாலும், பிரதானமான எழுத்துத் தொகுதி அவர்களுடன் கூடவே
சென்றது. அத்தோடு 'அ' மட்டும் மாறாது
முதன்மையாகவே நின்றது.
பெருபாலான ஆசிய,
ஐரோப்பிய மொழிகளும், பிற சில ஆபிரிக்க மொழிகளும் 'அ' கரத்தையே
முதல் எழுத்தாகக் கொண்டிருப்பதன்
மர்மம்தான் என்ன?
குழந்தை பிறந்தவுடம் எழுப்பும் முதல் ஒலி 'ஆ ...' என்பதால் இருக்குமோ? ஒருவருக்கு
ஏதாவது அடி பட்டால் 'ஆ ..' என்பார், அதனால் இருக்குமோ?
எல்லா மொழிகளுமே தமிழில் இருந்து வந்தவை என்று வாதிடுபவர்களும் உள்ளனர்.
அதனால்தான் தமிழ் போலவே 'அ ' வை முதலில் வைத்துக்கொண்டனர். இல்லை, இது பண்டைய
செமெட்ரிக் என்ற ஆபிரிக்க-ஆசிய மொழியிலிருந்து பின்பற்றப்பட்டவை என்று
கூறுபவர்களும் இருக்கின்றார்கள்.
இந்த செமெட்ரிக் மொழிகள் சுமேரிய நாகரீக காலத்தினது என்று கூறுவார்கள்.
இந்தச் சுமேரிய மொழி தமிழின் முன்மொழியே என்று வாதிடவும் சான்றுகள் உள்ளன.
திருக்குறள் உலகின் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதால், அதிகமான
மொழிகளுக்கு முதலாவது குறள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பது ஓர் ஆச்சரியமே!
எது, என்னவோ! எமக்குத்
தெரிந்தது எல்லாம் ஒன்றுதான், தமிழ் மொழிக்கு மட்டும் அல்ல, பெரும்பாலான உலக
மொழிகளுக்கும் 'அ' கரம்தான் முதல்
எழுத்து என்பதுதான்.
ஆக்கம்:- செல்வத்துரை சந்திரகாசன்
No comments:
Post a Comment