"ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனத்தையும்"

 

"ஒவ்வொரு இதயத்தையும்

                ஒவ்வொரு மனத்தையும்

ஒவ்வொரு ஆன்மாவையும்

               பேராசை தொற்றுகிறது

ஒன்று ஒன்றாக 

              அவனை ஏமாற்றி

ஒய்யாரமாக அவனில் 

              வடுவாக மாறுகிறது"

👵

"சுயநல ஆசைகள்

            எங்கும் வளர்கிறது  

சுதந்திரமாக மனித 

            மனதிலும் பதுங்குகிறது

சுழன்று சுழன்று 

            அவனை கெடுத்து   

சுருக்கி விடுகிறது

           அவனின் இதயத்தை"

 👩

"எமக்கு வேண்டியதை

           நாங்கள் எடுக்கிறோம்

எம்மை பற்றி 

           மட்டுமே சிந்திக்கிறோம் 

எதுக்கு எடுத்தாலும்

           எம்மை முதல்நிறுத்தி

எடுத்த காரியத்துக்கு

          நியாயம் கூறுகிறோம்"

👴

"நாங்கள் மனமற்றவர்

         களாகத் தோன்றுகிறோம்

நாடி வருபவர்களுக்கு 

        கையை விரிக்கிறோம்

நாதியற்ற மக்களை

       வரவேற்பதும் இல்லை 

நாணம் எம்மை 

       வருந்துவதும் இல்லை"

 👼

"நாங்கள் காயப் 

          படுத்திய மக்களை

 நாம் அழித்த 

         எண்ணற்ற உயிர்களை

நாம் விட்டுச் சென்ற 

        அழிவின் பாதையை .

நாங்கள் எனோ 

        இன்னும் உணரவில்லை"

👧

"இருப்பதை விட்டு 

          இல்லாததுக்கு ஏங்குகிறோம்

இல்லாத இடங்களிலும் 

        தேடி பார்க்கிறோம்

இடுகாட்டின் இறுதியிலும் 

       மனிதத்தை புறக்கணிக்கிறோம்

இறுமாப்புடன் எம்மிடம்

       தவறில்லை என்கிறோம்"

 🙈🙉🙊

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]....

No comments:

Post a Comment