வர்ணத்திரைக்காக இவ்வாரம்.....

 


சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா

பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள ‘சந்திரமுகி’ படத்தின் 2-ம் பாகத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். நகைச்சுவை வேடத்தில் நடிக்க தன்னை படக்குழுவினர் அணுகி இருப்பதாக வடிவேலு அண்மையில் தெரிவித்திருந்தார்.படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

'பொன்னியின் செல்வன்'

சோழர்களின் காலத்தில் நிகழ்ந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கல்கி எழுதிய புனைவுக் கதையில் மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில்  வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தியும்  அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம்ரவியும், அவரது சகோதரி குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடிக்கிறார்கள்.பொன்னியின் செல்வன்-1  இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 'சினேகா'

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த சினேகா நீண்ட இடைவெளிக்கு பிறகு  ‘சா பூட் திரீ’ என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.  இதில் சினேகா அம்மா கதாபாத்திரத்தில் வருகிறார்.இதில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குழந்தைகளின் யதார்த்த வாழ்வியலை சித்தரிக்கும் படமாக தயாராகிறது.

 

ருத்ர தாண்டவம்’

தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘திரெளபதி’. இப்படத்தை இயக்கிய இயக்குனர் மோகன்.ஜி, அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி, மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

சூ மந்திரகாளி’

கடவுள் சக்தி, மாய மந்திர சக்தி என நம்புகிற ஒரு கிராமத்து கதையே, ‘சூ மந்திரகாளி’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது.

இதில் புதுமுகங்கள் கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்லி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். ஈஸ்வர் கொற்றவை டைரக்டு செய்திருக்கிறார். அன்னக்கிளி வேலு தயாரித்துள்ளார்.

 

உடன்பிறப்பே’

 நடிகர்  சூர்யா தயாரிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘உடன்பிறப்பே’. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் சசிகுமார் அண்ணனாகவும், ஜோதிகா தங்கையாகவும் நடித்துள்ளார். கத்துக்குட்டி படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் இரா.சரவணன் இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும் சூரி, சமுத்திரக்கனி, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

 

வடிவேலு பாடல்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் வடிவேலு, அடுத்ததாக சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளாராம். மேலும் இப்படத்தில் வடிவேலு 2 பாடல்கள் பாட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 'டாக்டர்'

நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயன், யோகிபாபு, வினய் இவர்களுடன் தெலுங்கு  படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன்  தமிழில் அறிமுகமாகிறார். நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

 

 'கொரொனா குமார்'

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸான படம் ஈஸ்வரன். இதையடுத்து,விரைவில் வெளியாக இருக்கும்  'பத்து தல', 'மாநாடு' உள்ளிட்ட படங்களில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். அடுத்து, 'வெந்து தணிந்தது காடு' மற்றும் 'நதியிலாடும் சூரியன்' உள்ளிட்ட படங்களில் நடித்த சிம்பு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.இந்நிலையில், கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு 'கொரொனா குமார்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

சினிமா ஆசிரியர் மரணம்

சினிமா பாடலாசிரியரும், எழுத்தாளருமான பிரான்சிஸ் கிருபா உடல்நலக்குறைவால் சென்னையில் மரணம் அடைந்தார்.காமராஜர் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்துக்கு திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களையும் எழுதி இருந்தார். அந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார். பிரான்சிஸ் கிருபா திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பத்தினிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர். மல்லிகை கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம், வலியோடு முறியும் மின்னல், சம்மனசுகாடு, நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள் உள்ளிட்ட கவிதை தொகுப்புகளை வெளியிட்டு உள்ளார். இவர் எழுதிய கன்னி நாவல் இலக்கியவாதிகளால் பாராட்டப்பட்டது. பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். சொந்த ஊரில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடந்தது.

 

தொகுப்பு:செமனுவேந்தன்

No comments:

Post a Comment