'தேவதை புகைபோக்கிகள்'
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, துருக்கியின் கப்படோசியாவில் உள்ள மக்கள் இப்பகுதி முழுவதும் எழுந்திருக்கும் 'தேவதை புகைபோக்கிகள்' எனும் ஒரு இருப்பை செதுக்கியுள்ளனர். இந்த கோபுரங்கள் மென்மையான இயற்கையான எரிமலை சாம்பலில் இருந்து உருவாகின்றன. ஏரிமலையின் பாறை மென்மையானது, கப்படோசியர்கள் எண்ணற்ற குகைகளைத் மலையில் தோண்டினர். அவர்கள் இந்த குகைகளை அடைக்கல வீடுகளாக, தேவாலயங்களாக, முழு நிலத்தடி சமூகங்களாக கூட அடிக்கடி எதிரிகளிடமிருந்து தமக்குப் பாதுகாப்பை வழங்கினர். நகரத்திலிருந்து விலகி, இந்த கல் கோபுரங்கள் நிலப்பரப்பைச் சூழ்ந்துள்ளன. ஆனால் உஹிசார் நகரத்தில், அவை மலையில் உள்ள பல குகைகளுடன் கலக்கின்றன, அவற்றில் சில இன்றும் குடியிருப்புகளாகப்பயன்படுத்தப்படுகின்றன.மடகாஸ்கர் தீவுக்கே தனித்துவமான
லீமெர்ஸ் விலங்கு உலகப்
புகழ்பெற்றது. ஒரு திமிங்கலம் (இந்திரி) போல பாடுவதிலிருந்து ஒரு பாலே நடனக்
கலைஞர் (சிஃபாகா) போல மணலில் குறுக்கே குதிப்பது வரை பல சுவாரஸ்யமான நடத்தைகளைக்
காட்டுகின்றன. அவை சிறிய உடல், நீண்ட மூக்கு மற்றும் பெரிய கண்களால்
வகைப்படுத்தப்படுகின்றன.
புதைபடிவ பதிவின்படி லீமெர்ஸ்போன்ற
முதன்மையான விலங்குகள் சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின்
பிரதான நிலப்பரப்பில் தோன்றி, கண்ட அசைவுகளால் பிரிந்த மடகாஸ்கருக்கு சென்றதால் தனிமையான
தீவில் இவை தங்கள் இனத்தினை தக்க வைத்துக்கொண்டன. குரங்குகளின் சில சமூக மற்றும்
நடத்தை பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன
அதாவது,பாலூட்டிகளாக , சமூகக் குழுக்களை
உருவாக்குதல், பழங்கள் மற்றும்
தாவரங்களை உண்பது மற்றும் பகலில் சுறுசுறுப்பாக இருப்பது, மரங்களில்
வாழ்வது என்பதாகும்.
யுத்த காலத்தில் ஹம்டன் என்னும் நீர்மூழ்கியின் பெயரை கேட்டாலே பிரிட்டிஷ்
காரர்கள் பயந்து நடுங்கினர்.(ஜெர்மனியுடையது). 1914 செப்டெம்பர் 22 ,ஹம்டன் எனும்
பிரமாண்ட நீர்மூழ்கி சென்னை சென் ஜோர்ஜ் கோட்டையை தாக்கி பிரிட்டிஷ் அரசை கலங்க வைத்ததது. இதனை செலுத்தியவர் இந்த கப்பலின் பொறியியலாளரும் இரெண்டாவது கமாண்டருமான
செண்பக ராமன். ஒரு தமிழர்.
🛸🛸🛸🛸🛸🛸🛸🛸🛸
மனித முக சுறா
இந்தோனேஷியாவில் மனித முகத்துடன் காணப்பட்ட சுறா ஒன்று பிடிபட்டுள்ளது.
கிழக்கு நியூஷா டென்காரா கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்த போது அவர்களின்
வலையில் மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சுறா ஒன்று சிக்கியது. அதனைக் கண்ட
அவர்கள் ஆச்சரியத்துடன் கரைக்கு கொண்டு வந்தனர்.கரைக்கு வந்த சிறிது நேரத்தில்
இறந்து விட்ட அந்த வெள்ளைச் சுறா மரபணு குறைபாட்டினால் இதுபோன்று பிறந்திருக்க
வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
🐟🐟🐟🐟🐟🐟🐟
உடலை வளர்த்த கடல் அட்டை
ஜப்பானில் உள்ள நாரா மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சாகோக்ளோசான்
என்ற கடல் அட்டை குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.அப்போது ஒரு நாள், தங்கள் லேப்பில்
இருந்த கண்ணாடி மீன் தொட்டியில், இருந்த ஒரு கடல்
அட்டையின் தலை மட்டும் தனியே நீந்தியபடி இருந்தது. அதன் உடல் தனியே மிதந்து சில
மணி நேரத்தில் இறந்துவிட்டது. ஆனால், தலை இறந்து
விடாமல், மெல்ல மெல்ல தனது உடலை வளர்த்துக்கொண்டே வந்தது. அடுத்த சில
நாட்களில், அந்த அட்டைக்கு, இதயம் உள்பட
உடலின் அனைத்து உள் அங்கங்களும் கொண்ட புதிய உடல் முளைத்துவிட்டது.அட்டைகளுக்கு
இப்படி ஒரு சக்தி இருக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி
விட்டது. அட்டைகள் உலகில் இப்படி ஒரு நிகழ்வு பதிவாவதும் இதுவே முதல் முறை என நாரா
பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.
👈👈👈👉👉👉
No comments:
Post a Comment