"மனித மனம் திருப்தி
அடையாது
மகிழ்ச்சி கொள்ள உள்ளம் விடாது
மஞ்சம் இல்லையெனில் படுக்கை வராது
மற்றவரை தாழ்த்தாமல் வாழ முடியாது"
"கதிரவன் கடுமையானால் முறை
இடுகிறான்
கடும் மழை பொழிந்தால் திட்டுகிறான்
கங்கை வற்றினால் பஞ்சம் என்கிறான்
கங்கை பெருக்கெடுத்தால் அழிவு என்கிறான்"
"இறைச்சி இல்லையெனில் உணவு
இறங்காது
இல்லாமல் இருப்போருக்கு எல்லாம் இறங்கும்
இல்லமே இல்லாதவனுக்கு எல்லாம் படுக்கை
இச்சை கொண்டவன் இருந்தும் படுக்கான்"
"சிலருக்கு அணிய ஆடைகள்
இல்லை
சிலருக்கு வைக்க இடமே இல்லை
சிக்கனம் தெரிந்தவனுக்கு வாழ்வு மகிழ்வு
சிம்மாசனம் தேடுபவனுக்கு மகிழ்ச்சி இல்லை"
"பணக்காரன் மூட்டை
முடிச்சு பதுக்குகிறான்
பஞ்சம் பிடித்தவன் போல் அலைகிறான்
பட்டினி கிடக்கிறான் சாதாரண மனிதன்
பங்கிட்டு அதையும் கொடுத்து சாப்பிடுகிறான்"
"உன்னிடம் எவ்வளவு
இருக்கிறது என்பதல்ல
உன்னிடம் என்ன இருக்கிறதுதான் முக்கியம்
உலோபியாக சேர்த்து வைப்பதை விட
உரிமையுடன் கொஞ்சத்தையும் சரியாக அனுபவி !"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment