
கடலுக்குச்
சென்ற திமிங்கிலம்
நிலத்தில் வாழும் விலங்குகளில் யானைதான் மிகப் பெரியது. ஆனால், கடலில் வாழும்
நீலத் திமிங்கிலத்தைப் பிடித்து, யானைக்கு அருகில் கிடத்த முடிந்தால்
திமிங்கிலம்தான் பெரியதாக இருக்கும். பூமியில் வாழும் விலங்குகளில் நீலத்
திமிங்கிலம்தான் பெரியது. அதன் நீளம் 30 மீட்டர். எடை 180 டன்கள் (1,80,000 கிலோ). யானையின்
எடை அதிகபட்சம் 7 டன்கள் (7000 கிலோ).
நீலத் திமிங்கிலம் கடல் வாழ் விலங்குதான். ஆனால், யானையைப் போல அது
காற்றைச்...