சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும்
சூரி
பல்வேறு திரைப்படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் "பரோட்டா சூரி" கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமாக பேசப்பட்டார். மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இதில் சூரியின் அற்புதமான நடிப்பில் உருவான "பரோட்டா காமெடி" இன்று வரை பலரையும் ரசிக்க வைத்து மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இவ்வாறு சூரியின் திரைவாழ்க்கையில் முதல் திருப்புமுனை அமைந்த திரைப்படம் 'வெண்ணிலா கபடி குழு'.அதன்பின் 'ரஜினிமுருகன்', 'தேசிங்கு ராஜா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' உள்ளிட்ட படங்களில் இவரின் காமெடி கதாபாத்திரங்கள் அதிகம் பேசப்பட்டது. தற்போது ரஜினியுடன் இணைந்து ‘அண்ணாத்த’ படத்திலும், சூர்யாவுடன் இணைந்து ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடித்து வருகிறார்.மேலும் வெற்றிமாறன் இயக்கி வரும் 'விடுதலை' படத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார்.
தேவர்மகன் 2-ம்
பாகத்தில் விக்ரம்?
‘தேவர்மகன்‘ 2-ம் பாகத்துக்கான கதையைத் தான் மகேஷ் நாராயணனுக்காக கமல் எழுதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
‘காசேதான்
கடவுளடா’ ரீமேக்....
சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘காசேதான் கடவுளடா’. தற்போது இப்படத்தை ரீமேக் செய்து35 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளனர். ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சிவா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடிக்க, யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பெரிய தொகை ''‘சாணிக்
காயிதம்’
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன், ‘சாணிக் காயிதம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பெரிய தொகைக் கொடுத்து அமேசான் பிரைம் ஓடிடி தளம் வாங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வடிவேலு-சுமூகத் தீர்வு
.முன்னதாக இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படப்பிடிப்பின்போது சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.இதனால் தனக்கு ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஷங்கர் தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.புகார் காரணமாக வடிவேல் புதிய படங்களில் நடிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இந்த பிரச்சினையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நடிகை சித்ரா
80'களில் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர். 300 படங்களுக்கு மேல் நடித்தவர் சித்ரா. 'சேரன் பாண்டியன்' படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்த இவரது கதாபாத்திரம் மிகவும் பிரபலம். தொடர்ந்து சினிமா, சீரியல்களில் நடித்துவந்தவர் ஒரு நல்லெண்ணய் விளம்பரத்தில் நடிக்க அதன்பிறகு நல்லெண்ணய் சித்ராவாகவே அடையாளப்படுத்தப்பட்டார். 20.08.2021 அன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.
'யுத்தசத்தம்'
எழில் இயக்கத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் ‘யுத்த சத்தம்’. முதல் முறையாக த்ரில்லர் கதையை இயக்குகிறார் எழில். இப்படத்தில் ரோபோ ஷங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படத்துக்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
‘தலைவி’
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’
தமிழ், தெலுங்கு, இந்தி
மொழிகளில்என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில்
ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி
நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.வருகிற செப்டெம்பர் 10 ம் தேதி தலைவி
படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். விப்ரி நிறுவனம் சார்பில் விஷ்ணு இந்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார். விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
’பீஸ்ட்’
விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு அரேபிய மொழி பாடல் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.சினிமா உட்பட அனைத்து ஊடகங்களும் தமிழினை அழித்து வரும் நிலையில், ஏற்கனவே தமிழ் திரைப்படம் ஒன்றில் ஆங்கில கலப்பினை செய்து பாடல் வெளியிட்ட இந்நடிகர் மேலும் இன்னொரு மொழியினை கலந்திருப்பது, மேலும் விஜய் மேல் தமிழ் ஆர்வலர் மத்தியில் கசப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment