வர்ணத்திரைக்காக இவ்வாரம் ....

 


நயன்தாராவின் வில்லன்

மிஷ்கின் இயக்கி வெளிவந்த ‘அஞ்சாதே’ படத்தில் அறிமுகமானவர், அஜ்மல். கதாநாயகனாக நடித்து வில்லனாக மாறிய இவர், மீண்டும் சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். இப்போது நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் மீண்டும் வில்லன் ஆகியிருக்கிறார்.

 

28 வருடங்களைத்  தாண்டி

டைரக்டர் ஷங்கர் திரையுலகுக்கு வந்து 28 வருடங்களை தாண்டி விட்டார்.முதலில் அவர் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பவித்ரன் ஆகிய இருவரிடமும் உதவி டைரக்டராக இருந்தார். ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அந்தப் படம் 1993-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி திரைக்கு வந்தது.

 

பின்னணி பாடகி மரணம்

பிரபல சினிமா பின்னணி பாடகி கல்யாணி மேனன் (வயது 80) மூப்பு காரணமாக சென்னை  உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்  சிகிச்சை பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார்.கல்யாணி மேனன் தமிழில் 1979-ல் வெளியான நல்லதொரு குடும்பம் படத்தில் செவ்வானமே பொன் மேகமே பாடலை பாடி அறிமுகமானார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.

சுஜாதா படத்தில் நீ வருவாய் என, முத்து படத்தில் இடம்பெற்ற குல்வாலிலே முத்து வந்தல்லோ, புதிய மன்னர்கள் படத்தில் வாடி சாத்துக்குடி, காதலன் படத்தில் இந்திரையோ இவள் சுந்தரியோ, அலைபாயுதே படத்தில் அலைபாயுதே, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஓமணப்பெண்ணே உள்ளிட்ட பல பாடல்களை பாடி உள்ளார். இறுதியாக 96 படத்தில் காதலே காதலே பாடலை பாடி இருந்தார். மலையாளத்திலும் ஏராளமான பாடல்களை பாடி இருக்கிறார். இவருக்கு  ராஜீவ் , கருணாகரன்  ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் ராஜீவ்  பிரபல ஒளிப்பதிவாளராக இருக்கிறார்.

 

‘2000’  ஒரு படம்

1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால் ஏற்பட்ட விளைவுகளை கருவாக வைத்து, ‘2000’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி இருக்கிறது.

இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படம் மத்திய அரசை விமர்சிப்பதாக கூறி, சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர். அதனால், மறுபரிசீலனை குழுவினருக்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. கவுதமி தலைமையிலான மறுபரிசீலனை குழுவினர் படத்தை பார்த்து, 105 இடங்களில் வெட்டுகள் சொல்லப்பட்டது.

வெட்டுகள் கொடுக்கப்பட்ட காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் ஆதாரங்களும், ஆவணங்களும் கொடுக்கப்பட்டதால், 24 வெட்டுகளாக குறைக்கப்பட்டது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தில் கராத்தே வெங்கடேஷ், மூர்த்தி, பிர்லா போஸ், ரஞ்சன், தர்சன், கற்பகவல்லி, பிரியதர்சினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். கோ.பச்சியப்பன் தயாரிக்க, ருத்ரன் பராசு கதாநாயகனாக நடிக்க ருத்ரன் டைரக்டு செய்துள்ளார். கதாநாயகி, சர்னிகா.

 

மூன்று படங்களும் திரைக்கு

தமிழ் திரையுலகில் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர், அருண்விஜய். இவர் இப்போது ‘சினம்’, ‘அக்னி சிறகுகள்’, ‘பார்டர்’ ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். மூன்று படங்களும் ஒன்றன் பின் ஒன்றாக திரைக்கு வர உள்ளன.

 

அருண்விஜய்யும், டைரக்டர் ஹரியும்

அருண்விஜய்யும், பல வெற்றி படங்களை கொடுத்த டைரக்டர் ஹரியும் ஒரு புதிய படத்தில் இணைந்து இருக்கிறார்கள். இருவரும் (மச்சான்-மைத்துனர்) நெருங்கிய உறவினர்கள்.இந்தப் படத்தில் அருண்விஜய் ஜோடியாக,கல்லூரி மாணவியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், ராஜேஷ், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, போஸ் வெங்கட், ‘தலைவாசல்’ விஜய், இமான் அண்ணாச்சி, ஜெயபாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

 

யாவரும் வல்லவரே’

வால்டர்’, ‘பாரீஸ் ஜெயராஜ்’,  பார்டர்’  ஆகிய படங்களை கொடுத்த பிரபு திலக், சமுத்திரக்கனி, யோகி பாபு இணைந்து நடித்த ‘யாவரும் வல்லவரே’ என்ற படத்தை வழங்க உள்ளார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, மேலும் போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ.மல்லூரி, ரித்விகா, தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜோசப் ராஜ் தயாரிக்கிறார்.’’

 

கன்னித்தீவு’

திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ஜனை’ படத்தை இயக்கியவர், சுந்தர்பாலு. இவர் அடுத்து இயக்கிய படத்துக்கு, ‘கன்னித்தீவு’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னாசவேரி, சுபிக்‌ஷா ஆகிய 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

 ஒரு தீவில் நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு பிரச்சினையை தீர்க்க 4 கதாநாயகிகள் போராட்டத்தில் குதிக்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள். அந்த வெற்றியே அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறுகிறது. அதை தோழிகள் 4 பேரும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதே கதை.

 

பீஸ்ட்’

விஜய், தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். வில்லனாக செல்வராகவன்   நடிக்க மேலும் யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது.

 

குறிப்பு:‘பீஸ்ட்’ , ‘வால்டர்’, ‘பாரீஸ் ஜெயராஜ்’,  பார்டர்’ :ஆகா தமிழகமே ,தமிழ் வாழ்க! ,தமிழ் வளர்க!/தொகுப்பு:-செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment