தியேட்டர்
அதிபர்களுக்கு அதிர்ச்சி
கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் பல மாதங்களாக மூடிக்கிடப்பதால் ஓ.டி.டி.
தளங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் திரைக்கு வர தயாராக இருந்த
முன்னணி நடிகர்களின் பல படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி தியேட்டர்
அதிபர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றன.
தியேட்டர் தொழில் முடங்கி விடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே தமிழில் சூரரை
போற்று, பூமி, க.பெ.ரணசிங்கம், பொன்மகள் வந்தாள், பென்குயின், லாக்கப். டேனி
உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. சமீபத்தில் ஆர்யா நடித்துள்ள
சார்பட்டா பரம்பரை படமும் ஓ.டி.டி.யில் வெளியானது. நயன்தாராவின் நெற்றிக்கண், ஐஸ்வர்யா
ராஜேசின் திட்டம் இரண்டு படங்கள் ஓ.டி.டி.யில் வருகின்றன. அடுத்து விஜய்சேதுபதி
நடித்துள்ள லாபம்,
ஜி.வி.பிரகாசின் ஐங்கரன், சிவகார்த்திகேயனின்
டாக்டர் உள்ளிட்ட மேலும் பல படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள்
நடக்கின்றன.
‘பிச்சைக்காரன்-2’
இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வெற்றிபெற்ற விஜய் ஆண்டனி, அடுத்து டைரக்டர்
ஆகியிருக்கிறார்.
தனது சொந்த பட நிறுவனம் சார்பில், ‘பிச்சைக்காரன்-2’ என்ற படத்தை
டைரக்டு செய்கிறார். இந்த தகவலை அவரே தெரிவித்தார்.
‘தாதா 87' ரீமேக்கை
எதிர்த்து வழக்கு
சாருஹாசன், ஜனகராஜ், பாலாசிங், மாரிமுத்து
ஆகியோர் நடித்து 2019-ல் வெளியான படம்
தாதா 87. இந்த படத்தை
விஜய் ஸ்ரீ இயக்கி இருந்தார். தற்போது தனது அனுமதி இல்லாமல் தாதா 87 படம் தெலுங்கில்
ரீமேக் செய்யப்படுவதாக இயக்குனர் விஜய் ஸ்ரீ வழக்குத் தொடுக்க உள்ளார்.
''மின்னல் முரளி''
தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகளில்,
டோவினோ தாமஸ் நடிப்பில் பசில் ஜோசப் இயக்கத்தில் உருவாகும்
படம் ''மின்னல் முரளி''.இதை சூப்பர் ஹீரோ
படமாக எடுக்கின்றனர். அஜூ வர்கீஸ், குரு சோமசுந்தரம், ஹரிஶ்ரீ அசோகன்
ஆகியோரும் நடிக்கின்றனர்.ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் மின்னல்
முரளி படப்பிடிப்பு நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து போலீசார்
மின்னல் முரளி படப்பிடிப்பு தளத்துக்கு சென்று படப்பிடிப்பை நிறுத்தினர்.
படக்குழுவினர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.
மீண்டும்
சாய் பல்லவி
தற்போது தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி ட்ரீம் வாரியர்
நிறுவன தயாரிப்பில்,
கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில்,
தமிழில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது. மேலும் தமிழில் தற்போது நயன்தாரா எப்படி நடிகைக்கு மட்டும்
முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரோ அதேபோல் சாய்பல்லவி கதை
தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தடுமாறும்
காவல் அதிகாரி
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முரளி. இவர் விரைவில்
வெளியாகவுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய பகுதியில், இயக்குனர்
சர்ஜுன் இயக்கியுள்ள "துணிந்த பின்" கதையில் அனுபவமில்லாமல் தடுமாறும்
காவல் அதிகாரி 'வெற்றி' கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார்.
கமல்ஹாசன்&விஜய்
சேதுபதி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில்
பிரபல நடிகர் இணைந்து இருக்கிறார்.
மாநகரம், கைதி, மாஸ்டர் என
ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் படம் ‘விக்ரம்’.
நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர்
முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு
சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் விக்ரம் படத்தில் இணைந்திருக்கிறார். இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதிபடுத்தி இருக்கிறார். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக காளிதாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
-தொகுப்பு: செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment