சித்தர் சிந்திய முத்துக்கள் ............... 3/49

 


சித்தர் சிவவாக்கியம் - 375

மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே

மந்திரங்கள் கற்ற நீர் மரித்தபோது சொல்வீரோ

மந்திரங்கள் உம்முளே மதித்த நீறும் உம்முளே

மந்திரங்கள் ஆவது மனத்தினைத் தெழுத்துமே.

 

மாந்திரங்கள் யாவையும் செம்மையுற கற்று மனப்பாடம் செய்தும் உண்மை உணராது மயங்குகின்ற மாந்தர்களே! இத்தனை சாத்திர மந்திரங்கள் கற்ற நீங்கள் மரணமடைந்த போது அதனை சொல்லி மீண்டு வர முடியுமா? மந்திரமாக இருப்பதும் உனக்குள்ளே உள்ள ஊமையெழுத்தே. அதுவே யாவரும் மதிக்கும்படி நீராக உள்ள உயிர் நின்றதும் உனக்குள்ளே உள்ள ஒரேழுத்து மந்திரமே. மந்திரங்கள் ஆவது மனதின் திடமாகி நினைவான ஒரெழுத்தில் உள்ள பஞ்சாட்சரமே என்பதை அறியுங்கள்.

 

சித்தர் சிவவாக்கியம் -387

என்குமேங்கு மொன்றலோ வீரேழு லோக மொன்றலோ

அங்கு மிங்கு மொன்றலோ அனாதியான தொன்றலோ

தங்கு தாபரங்களுந் தரித்த வார தொன்றலோ

உங்களெங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே.    

 

எங்கெங்கும் ஈரேழு உலகத்திலும் அங்கும் இங்கும் அனாதியாக என்றும் நித்தியமாக உள்ளது ஒன்றுதான். இப்பூமியில் விளையும் தாவரங்களிலும் உயிர் தரிப்பது ஒன்றுதான். அந்த ஒன்றாகிய பரம்பொருளே உங்களிடமும் எங்களிடமும் உடம்பில் பங்கு கொண்டு சோதியாக உதித்து நின்றது சிவமே என்பதை அறிந்து கொள்ளுங்கள்.    

 

சித்தர் சிவவாக்கியம் -401

சத்தியாவது உன்உடல் தயங்கு சீவன் உட்சிவம்

பித்தர்காள் இதற்கு மேல் பிதற்றுகின்ற தில்லையே

சுத்தி ஐந்து கூடமொன்று சொல்லிறந்த தோர் வெளி

சத்தி சிவமு மாகி நின்று தன்மையாவது துண்மையே. 

  

சக்தியாக இருப்பது உன் உடம்பு, அதிலே தங்கி இயங்குவது உன் உயிர். அந்த உயிருக்குள் உட்சோதியாக இருப்பது சிவம். இதையறியா பித்தர்களே! இதற்குமேல் ஒன்று இருப்பதாக சொல்லி பிதற்றுவதற்கு ஏதும் இல்லையே. இதுவே பஞ்சபூதங்களாய் ஐந்து புலன்களாக சுற்றி அமைந்து சொல்லிறந்த மௌன வெளியில் ஒரேழுத்தாக விளங்கும் வாலையை தியானியுங்கள். அச்சக்தியே சிவம் ஆகி நின்ற தன்மையை உணருங்கள். அச்சோதியே உண்மை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

-அன்புடன் கே எம் தர்மா &

0 comments:

Post a Comment