6] துணிவு கொள்
"வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பிலே
ஒடுங்கினாய் போ போ போ
. . . . .
ஒளி
படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி
கொண்ட நெஞ்சினாய் வா வா வா"
பாரதியார் வலிமை, வீரம், துணிவு முதலியனவற்றைப் பல்வேறு பாடல்களில்
வலியுறுத்தி, அன்றைய கால
கட்டத்தில், மக்களுக்கு
"எழுந்து நில், துணிவு கொள், வலிமையுடன்
இரு" என்று உபதேசம் செய்தார்.
சுவாமி விவேகானந்தர், காசியில் ஒரு முறை நடந்து கொண்டிருந்தார். அப்போது அவரை
அங்கிருந்த ஒரு குரங்குக் கூட்டம் பெரும் கூச்சலுடன் அவரை சூழ்ந்து கொண்டது. இதை
கண்ட விவேகானந்தர் கொஞ்சம் தயக்கத்துடன் பின்வாங்கினார். குரங்குகள் அதை தமக்கு
சாதகமாக கருதி, அவர் மீது
கடுமையாக பாய்ந்தன. எனவே விவேகானந்தர், குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்கு அங்கிருந்து
ஓட ஆரம்பித்தார்! ஆனால், குரங்குகளும் அவரை விடாமல் துரத்தின. இதை கண்ட ஒரு
சந்நியாசி, அவரை பார்த்து, "நில்! குரங்குகளை
எதிர்த்து நில்!" என்று உரத்த குரலில் கூவினார். இதனால், ஊக்கம் பெற்ற
விவேகானந்தர், ஓடுவதை நிறுத்தி, துணிவுடன் நின்று
குரங்குகளை நோக்கி ஒரு ஆவேசத்துடன் ஒரு உறுதியுடன் போகத் தொடங்கினார். அவ்வளவுதான்!
அவரது தோற்றத்தைப் பார்த்து குரங்குக் கூட்டம் பயந்துவிட்டது! அவைகள் பின்வாங்க
தொடங்கின.
ஆகவே, இந்த
நிகழ்ச்சியின் மூலம் நாம் கற்றது, "பயங்கரத்தை எதிர்த்து நில்! தைரியமாகப்
பிரச்னைகளை எதிர்த்து நில்! ஒருபோதும் அவற்றுக்கு பயந்து ஓடாதே!" என்பதேயாகும்.
அந்தக் குரங்குக்கூட்டம் போலவே துன்பங்களும் நம்மிடமிருந்து விலகி ஓடிவிடும்.
அதாவது, மனிதனைக்
கீழ்நிலைக்கு இழுத்துச் செல்லும் இயற்கையின் வேகங்களையும், பிரச்னைகளையும்
நாம் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றிற்கு ஒருபோதும் பணிந்துவிடக் கூடாது
என்பதாகும்.
"அச்சத்தை
எதிர்த்து நில்லுங்கள்! துன்பங்களை எதிர்த்து நில்லுங்கள்! அறியாமையை எதிர்த்து
நில்லுங்கள்!"
உலகில் உள்ள விலங்குகளில் மிகவும் துணிவு, வலிமை மற்றும்
தாக்குப்பிடிக்கும் தன்மை [courage, strength, and resilience] கொண்டது சிங்கம் ஆகும். அது மட்டும் அல்ல, ஒரு சவாலில்
இருந்து பின்வாங்கவும் மாட்டாது. தனது
கூடத்துக்காக இரையை ஆக்கிரமிப்பாக வேட்டையாடும். சிங்கம் நிழல்களில்
பதுங்குவதில்லை - தங்கள் இருப்பைத் தெரியப்படுத்துவதுடன் தான் விழும் ஒவ்வொரு
முறையும், திரும்பி
எழுகின்றன. பின் வாங்குவதில்லை. ஒருவர் உங்களை பார்த்து, நீங்கள்
சிங்கத்தின் இதயம் [heart of a lion] கொண்டுள்ளீர்கள் என்று கூறினால், அதன் பொருள், தீவிர துன்பங்களை
அல்லது சவால்களை எதிர்கொள்ள நீங்கள் நம்பமுடியாத வலிமையையும் தைரியத்தையும்
காட்டுவீர்கள் [ you
show incredible strength and bravery in the face of extreme adversity] என்பதாகும்.
7] "வாழ்க்கையில்
உங்கள் சொந்த பாதையைப் பின்பற்றுங்கள்" : ---
"உங்கள் கனவுகளைத்
தொடருங்கள். உங்கள் சொந்த பாதையை பின்பற்றுங்கள். என்ன விரும்புகிறாயோ அதனை
செய்."
இது போன்ற அறிவுரைகளை எத்தனை முறை
கேட்டிருக்கிறீர்கள் அல்லது படித்திருக்கிறீர்கள்? அவை அற்புதமான
யோசனைகள். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு
அவர்களின் உண்மையான ஆர்வம் என்னவென்று தெரியாது, நீங்கள் தேடுவது
என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் ஒரு கனவைத் தேட முடியாது. உங்கள்
கனவுகளை நீங்கள் இன்னும் வரையறுக்கவில்லை என்றால், உங்கள் பாதையை
நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாகிவிடும்.
குதிரை பொதுவாக தன்பாட்டில் வாழவே விரும்புகிறது.
உதாரணமாக, குதிரை ஒன்றுக்கு
சொந்தமாக ஆராய, ஒரு புது இடத்தை
தேட, ஒரு உந்தல்
ஏற்படும் பொழுது, பெரும்பாலும்
தனது கூடத்தில் இருந்து விலகி தன சொந்த பாதையில் செல்கின்றன. அவை பெரும்பாலும் ஒரு
கம்பீரமான, அழகுமிக்க தோற்றம் கொண்டு இருந்தாலும், அவை உக்கிரமான
பிடிவாதமான தன்மையையும் கொண்டுள்ளன. இந்த தன்மை அதற்க்கு வழிவகுக்கிறது எனலாம். எனவே
நீங்கள் குதிரை மாதிரி, காற்றில் சுதந்திரமாக ஓடுங்கள் - உங்கள் இதயம், சக்கரத்தை
எடுத்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு, உங்களை ஒட்டி செல்லட்டும்
8] "வேடிக்கை
அல்லது குறும்பு செய்தல்" : ---
உலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு சுபாவம் உள்ளது. வீட்டு வாசலை காப்பது, எஜமானருக்கு
நன்றியாய் இருப்பது நாயின் சுபாவம். பசுமாடு சாதுவான சுபாவம், இப்படியே
மற்றவையும். சுபாவத்தை மாற்ற முடியாது. நாய்
வாலை நிமிர்த்த முடியாது. சுபாவம் என்ற குணத்தை, மாற்றுவது
கடினம். சுகம் மட்டுமே மனிதனின் எதிர்பார்ப்பாக உள்ளது; ஆனால், லாபம் நஷ்டம், இன்பம் துன்பம், குளிர் வெயில் என
மாறி மாறி வரும் என்பதை மறந்து விடுகிறான்.
அவன், தனக்கு எப்போதும்
சுகம் மட்டுமே வேண்டும் என விரும்புகிறான். அது அவனின் சுபாவமாக இருக்கிறது. சுகம்
வந்தால் பின்னால் துக்கம் வரும்; துக்கம் வந்தால், அதன் பின்னால்
சுகம் வரும். இன்பம், துன்பம் கலந்ததே வாழ்க்கை. இதுதான் இயற்கையின் நியதி என்பதை
மறந்து விடுகிறான். இப்படி மாறி மாறி வரும் வாழ்க்கையில், துன்ப நேரத்தில்
- வேடிக்கையான குறும்புத்தனம் - அதை மறக்க கட்டாயம் உதவி செய்யும்.
முயல்கள் மிகவும் வேடிக்கையான, விளையாட்டுத்தனமான
ஆளுமைகளை [silly,
playful personalities] பெரும்பாலும் கொண்டுள்ளன. ஆகவே இது மனிதனுக்கு
ஒரு பாடம் கற்பிக்கிறது, அதாவது தமது துன்பங்களில் இருந்து சிறிது தளர்வு கொள்ள, ஒவ்வொரு முறையும்
மனிதனின் வாழ்க்கையில் சிறிது வேடிக்கை அல்லது குறும்புகள் தேவை என்பதை சுட்டிக்
காட்டுகிறது எனலாம். முயலை பாருங்கள், அவை எங்கள் கவனத்தை விரும்பும் போது எங்கள்
கால்களை நக்கி, சுற்றி
ஓடுகின்றன. அது மட்டும் அல்ல, ஒருபோதும் அதிக நேரம் ஒரே இடத்தில்
உட்காருவதும் இல்லை. சிலர் இதை, இயற்கை மீறிய சுறுசுறுப்பும் [மிகையான
இயக்கமுள்ள] மற்றும் எரிச்சலூட்டும் சிறிய உயிரினங்கள் [as hyperactive, annoying little
creatures] என கருதினாலும், அது உண்மையில், தங்களுக்குத்
தெரிந்த விதத்தில் தங்களை மகிழ்ச்சி படுத்தி, வாழ்க்கையை அனுபவிக்கின்றன என்பதே உண்மை!
குறிப்பு:ஆரம்பத்திலிருந்து வாசிக்க தொடுங்கள்
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] -பகுதி: 04 வாசிக்கத் தொடுங்கள் Theebam.com: "மிருகங்களிருந்து மனிதர்கள் கற்கவேண்டியவை" / பகுதி..4
No comments:
Post a Comment