"இரத்தம் சிந்த வைக்கும் முட்களே
இரகசியமாக வருடும் மென் இதழ்களே
இதழ்கள் நடுவே மஞ்சள் மகரந்தங்களே
இத்தனையும் கொண்ட அழகு ரோசாவே!"
"மாசி தரும் காதல் மாதமே
மாதர் சூடும் ரோசாவின் வாசனையே
மாட்சிமை பொருந்திய காதலர் சிறப்பே
மாதவி - கோவலன் போற்றிய காதல் நட்பே "
"காதல் கடவுள் மன்மத அழகனே
காம தேவனின் இனிய ரதியே
காதல் பெருமை ரோமியோ ஜூலியட்டே
காதோரம் சொன்ன காதல் மொழியே!"
"ரோசா சிவப்பு சொல்லுது - காதலிக்கிறேன்
ரோசா மஞ்சள் சொல்லுது - மகிழ்கிறேன்
ரோசா இளஞ்சிவப்பு சொல்லுது - விரும்புகிறேன்
ரோசா செம்மஞ்சள் சொல்லுது -
பெருமைகொள்கிறேன்!"
"கனவாக இருக்கிறது நீல ரோசா
களவாக ரசிக்கிறது இளம் வண்டுகள்
கதிரவன் ஒளியில் கவரும் ரோசாவில்
கள்ளு குடித்து மயங்கி கிடக்கிறது!"
"மஞ்சத்தில் சாய்ந்து அழகு பொலிந்து
மல்லாந்து கிடந்தது வனப்பு கொட்டி
மருண்ட விழியால் சைகை காட்டி
மஞ்சள் ரோசா மனதை இழுக்குது!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment