வர்ணத் திரையில் இவ்வாரம்...

 


வெப்’ தொடர்களில்  வடிவேல்

வடிவேல் திரைப்படங்களில் நடிப்பது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருப்பதால், ‘வெப்’ தொடர்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார். அவருக்கு பின்னால் நின்று சில அரசியல்வாதிகள் உதவுவதாக வாக்குறுதி அளித்து இருக்கிறார்களாம்.

புலிக்குட்டியின் கதை

வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாகவும், குணச்சித்ர வேடங்களிலும் நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ், பெயர் சூட்டப்படாத ஒரு புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதில் திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார், வாசு மித்ரன். பல்லடம் தியாகராஜன் தயாரிக்கிறார். ‘‘இது, நவீன ராவணனை எதிர்க்கும் ஒரு புலிக்குட்டியின் கதை.

மீண்டும் ஆங்கில பெயர்கள்

தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில், தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டது. அதனால் எல்லா படங்களுக்கும் தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டன. சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு மீண்டும் ஆங்கில பெயர்கள் வைக்கப்படுகின்றன. அந்த வகையில், 4 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘4 ஸாரி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 4 சாதாரண மனிதர் களின் வாழ்வியலை இந்த படம் சித்தரிக்கிறது. காளி வெங்கட், ஜான் விஜய், ரித்விகா, சாக்‌ஷி அகர்வால் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

‘கருங்காப்பியம்’

ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி, ஒரு ‘சைக்கோ’ வாக  திகில் படத்தில் நடிக்கிறார்.‘கருங்காப்பியம்’ என்ற படம்  இதில் 4 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இந்த படத்தில் காஜல் அகர்வால், ஜனனி, ரெஜினா கசன்ட்ரா, ரைசா வில்சன், ஈரான் நாட்டைச் சேர்ந்த நொய்ரிகா, கலை யரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய்  ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ஹாரூன் டைரக்டு செய்கிறார்.

அதிக படங்கள் கையில்

இன்றைய நிலவரப்படி, மற்ற கதாநாயகர்களை விட அதிக படங்களை கையில் வைத்திருக்கும் கதாநாயகன், விஜய் சேதுபதிதான். இவர் பெரிய பட அதிபர்களை விட, சிறு முதலீட்டில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கே முக்கியத்துவம் கொடுக் கிறார்.இதைத்தான் ராமராஜனும் செய்து வந்தார்.

ஆதார்’ கருணாஸ்

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பல படங்களில் நடித்த கருணாஸ், அடுத்து நகைச்சுவை நாயகனாக உயர்ந்தார். அரசியலில் இருந்து கொண்டே அவர் படங்களில் நடித்து வருகிறார். அவர் கதை நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பெயர், ‘ஆதார்.’ இதில் அவருக்கு ஜோடியாக ரித்விகா நடிக்கிறார்.

இவர்களுடன் அருண்பாண்டியன், ‘வத்திக்குச்சி’ பட புகழ் திலீப், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், மனிஷா யாதவ் ஆகியோர் நடிக்கிறார்கள். ‘அம்பாசமுத்திரம் அம்பானி, ’ ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய ராம்நாத் டைரக்டு செய்கிறார்.

நிதி அகர்வால்

ஜெயம் ரவி ஜோடியாக பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து பிரபலமானவர் நிதி அகர்வால்.

தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

அசின் -நிபந்தனைகள்

தெலுங்கு பட அதிபர்கள் மும்பை சென்று அசினை சந்தித்து பேசியிருக்கிறார்கள். அவர்களிடம், அசின் சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறார்.‘‘இனிமேலும் நான் கதாநாயகியாகத்தான் நடிப்பேன். அக்காள், அண்ணி, அம்மா வேடங்களில் நடிக்க மாட்டேன்...’’ என்பது அந்த நிபந்தனைகளில் ஒன்று.

தொகுப்பு: செ.மனுவேந்தன்

No comments:

Post a Comment