இலங்கை ,இந்தியாவில்
அண்மைக்காலங்களில் 1990-களைவிட மின்னல் தாக்கும் சம்பவங்கள்
அதிகரித்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இயற்கை வளம் அதாவது குறைந்த அளவு மரங்கள் இருக்கும் பகுதிகளில் மின்னல்கள்
தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால், அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து
அதிகமாக உள்ளது என அதிகாரிகள் கூறுகின்றன.
மின்னல் தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி?
பெரிய கட்டடங்கள் அல்லது காருக்குள் தஞ்சமடைய வேண்டும்.
மிகப் பரந்த திறந்த வெளிகள் மற்றும் உயரமான மலைப் பகுதிகளில் இருந்து வெளியேற
வேண்டும்.
பதுங்கிக் கொள்ள இடம் ஏதும் இல்லையென்றால், கால்களை
ஒன்றிணைத்து, குனிந்தபடி
முழங்காலைக் கட்டிக்கொண்டு முடிந்தவரை உடலைக் குறுக்கிக் கொள்ள வேண்டும். அதன்
மூலம் மின்னல் தாக்குதலுக்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.
தனியாக இருக்கும் ஒற்றை மரம் அல்லது உயரமான மரத்துக்குக் கீழே நிற்கக் கூடாது.
நீருக்குள் இருந்தால், உடனடியாகக் கரைக்குத் திரும்பி விட வேண்டும். ஏனென்றால்
நீர் இன்னும் தொலைவில் இருந்து மின்னலைக் கடத்தும் திறன் கொண்டது.
வீட்டுக்குள் இருந்தால் தொலைக்காட்சிக்கான இணைப்புகள், குழாய்
இணைப்புகள் போன்றவை மூலம் மின்னல் கடத்தப்படக் கூடும். அவசர தேவையின்றி தொலைபேசிகளையும்
திறன்பேசிகளையும் தவிர்க்கலாம்.
உடலில் நேரடியாக மின்னோட்டம் நுழையும் உலோகங்கள், மற்றும் குடை
ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்.
கடைசி மின்னல் வெளிச்சத்துக்கு பிறகு 30 நிமிடங்கள் காத்திருப்பது சிறந்தது. ஏனெனில், மின்னல்
தாக்குதல் தொடர்பான பாதிக்கும் மேலான உயிரிழப்புகள் இடியுடன் கூடிய மழை பெய்து
முடிந்தவுடனே நிகழ்ந்துள்ளன.
மின்னல் தாக்கினால் உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும்?
யாருக்காவது மின்னல் தாக்குதல் ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் மருத்துவரை அழைக்க
வேண்டும்.
மின்னல் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களை தொடுவதில் எந்த ஆபத்துமில்லை.
மின்னலில் எந்த மின்சார சக்தியும் இல்லாததால், அதன் மூலம்
யாருக்கும் மின்சாரம் பரவாது.
மின்னல் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களின் நாடித் துடிப்பினை உடனடியாக சோதிக்க
வேண்டும். எவ்வாறு முதலுதவி தர வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்தால் பாதிப்படைந்தவருக்கு
நீங்கள் முதலுதவி தரலாம்.
பொதுவாக பாதிப்படைந்தவர்களின் தலை பகுதியும், கால் பாத
பகுதியும் மின்னல் தாக்குதலில் எரிந்து விட வாய்ப்புண்டு. மின்னோட்டம் நுழையும்
மற்றும் வெளியேறும் பகுதிகள் இவை தான்
மின்னல் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களுக்கு எலும்புகள் உடைதல், காது கேளாமை மற்றும் பார்வை,உயிர் இழப்பு ஆகியவை ஏற்படலாம்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment