2 மொழிகளில் படம்
ஷங்கர் படம் என்றாலே நீண்ட கால தயாரிப்பில் பிரமாண்ட அரங்குகளும், பிரமிப்பை
ஏற்படுத்தும் காட்சிகளும்தான் நினைவுக்கு வரும். இதற்கு நேர்மாறாக அவருடைய
இயக்கத்தில் ஒரு படம் தயாராகிறது.
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில்
தயாராகும் இந்த படத்தில், ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார். தில்ராஜு தயாரிக்கிறார்.
குறுகிய கால தயாரிப்பாக படத்தை திரைக்கு கொண்டுவர ஷங்கர் திட்டமிட்டு இருக்கிறார்.
‘எம்.ஜி.ஆர். மகன்’
பொன்ராம் இயக்கியுள்ள ‘எம்.ஜி.ஆர். மகன்’ படம், அப்பா-மகனை
பற்றிய கதை. அப்பாவாக சத்யராஜ், மகனாக சசிகுமார் நடிக்கிறார்கள். மகன்
சசிகுமாரை வக்கீலாக பார்க்க வேண்டும் என்று சத்யராஜுக்கு நீண்டநாள் ஆசை. அது
நிறைவேறியதா? என்பதே கதை.``சசிகுமாரின்
ஜோடியாக மிருணாளினி, தாயாக சரண்யா
பொன்வண்ணன், தாய்மாமனாக
சமுத்திரக்கனி, சித்தப்பாவாக
சிங்கம்புலி ஆகியோர் நடிக்கிறார்கள்.
‘பகைவனுக்கு அருள்வாய்’
‘சுப்பிரமணியபுரம்’, ‘நாடோடிகள்’, ‘குட்டிப்புலி’, ‘சுந்தரபாண்டியன்’, ஆகிய படங்களில்
உயிரோட்டமான கதாபாத்திரங்களில் நடித்த சசிகுமார், அடுத்து
‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை அனீஸ்
டைரக்டு செய்துள்ளார்.பரந்த மனம் கொண்ட ஜெயில் கைதியாக சசிகுமார் நடித்துள்ளார்.
தைரியமான துணிச்சல் மிகுந்த பெண்ணாக பிந்துமாதவி, மென்மையான
குணாதிசயம் கொண்டவராக வாணிபோஜன் ஆகிய இருவரும் நடிக்க, முக்கிய
வேடங்களில் நாசர்,
ஜெயப்பிரகாஷ் நடித்து இருக்கிறார்கள்.
‘வாசுவின் கர்ப்பிணிகள்’
சேவியர் பிரிட்டோ. இவர் தற்போது, ‘அழகிய கண்ணே’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இதையடுத்து இவர் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’
என்ற படத்தை தயாரிக்கிறார். மணி நாகராஜ் டைரக்டு செய்கிறார்.ஒரு மருத்துவர்
தனது வாழ்க்கையில் சந்திக்கும் வினோதமான 4 கர்ப்பிணிகளை பற்றிய கதை. மருத்துவராக
கோபிநாத் நடிக்க, முக்கிய
கதாபாத்திரங்களில் அபிஷேக், அனிகா, சீதா, வனிதா விஜயகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ராஜ்கிரணும்
அதர்வாவும்
இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் ராஜ்கிரண், அதர்வாவும்
இணைந்து நடிக்க, இவர்களுடன் ராதிகா
சரத்குமார், ஆர்கே சுரேஷ், பிரகாஷ், சிங்கம் புலி ரவி, காலே சந்துரு, பாலசரவணன், ஜிஎம் குமார், உள்ளிட்ட பலர்
நடிக்கும் புதிய படத்தை, யோகநாதன் ஒளிப்பதிவு செய்ய,ஜிப்ரான் இசை அமைக்கிறார். விவசாயத்தை பின்னணியாக கொண்டு
தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான உறவை வித்தியாசமான கோணங்களில் விவரிக்கும்
இத்திரைப்படம் படப் பிடிப்பு வேலைகள் ஓகஸ்ட் முதல் ஆரம்பமாக உள்ளது.
சந்தோஷ்
பி ஜெயகுமார், பிரபுதேவா
நடிகரும் இயக்குனருமான சந்தோஷ் குமார்
இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் நாயகனாக பிரபுதேவா நடிக்க அவருடன் நடிகைகள்
வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். டி.இமாம்
இசையில் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
விஜய்யின்
வரி வழக்கு
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லக்ஸரி காருக்கு நுழைவு வரி
விதிக்க தடை கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்த
குற்றத்திற்காக ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மக்களிடம் கோடிக்கணக்கில் உழைக்கும் இவ்வகையான நடிகர்கள் ,மக்கள் சேவைக்கு
நேரடியா உதவாவிட்டாலும் ,மக்கள் சேவைக்கு பயன்படவேண்டிய வரியையாவது கட்டினால் என்ன சமூகவலைத்தளங்களில் கேள்விகள் எழுகின்றன.
''சூர்யா 40''
சூர்யாவின் 40 ஆவது படத்தை
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி
இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தற்போது
நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க
முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.
''பொன்னியின் செல்வன்''
இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பை துரிதமாக முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment