வர்ணத் திரைக்காக இவ்வாரம் ....



‘ராஜா மகள்’

ஹென்றி இயக்கத்தில் ஆடுகளம் முருகதாஸ், வெலினா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா மகள்’. ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும், மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து, ‘‘பிள்ளைகள் ஆசைப்பட்டு கேட்கும்போது நம் இயலாமையை காரணம் காட்டி, ‘‘முடியாது’’ என்று சொல்லி வளர்த்தால், அதன் பிறகு பிள்ளைகள் எதற்கும் ஆசைப்படவே தயங்குவார்கள் என்ற கருத்தை மையமாக கொண்ட கதை இது.

'என்ன சொல்லப் போகிறாய்'

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் அஸ்வின். இவர் தற்போது திரைத்துறையில் அடியெடுத்து வைக்கிறார்.அஸ்வின் நடிக்கும் புதிய படத்திற்கு 'என்ன சொல்லப் போகிறாய்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

'வாழ்'

 சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'வாழ்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர்களாக பிரதீப் ஆண்டனி, டி ஜே பாணு, திவா தவான், யாத்ரா எனப் பலர் தோன்றுகின்றனர்.

'சபா' 

 விகேஸ்டார்  குமணனின்  படைப்பாக ஈழத்துக்கு கலைஞர்களின் 'சபா' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

'அன்புள்ள கில்லி'

ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘அன்புள்ள கில்லி’. நடிகை சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா, இதில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விசேடம் என்னவெனில் நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. கில்லி என பெயர் கொண்ட லாப்ரடார் வகை நாயின் மனக்குரலில் திரைக்கதை நகர்வது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு நகைச்சுவை நடிகர் சூரி குரல் கொடுத்துள்ளமை மேலும் கவரத்தக்கது.

'சார்பட்டா பரம்பரை'

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்திருக்கும் 'சார்பட்டா பரம்பரை' படம் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் தற்போது உள்ளது.ஆர்யாவின் 30வது படமாக உருவாகியுள்ள 'சார்பட்டா' படத்திற்காக மிக கடுமையான உடல் பயிற்சிகள் செய்து, நடித்துள்ளார் ஆர்யா. இவர் மட்டும் இன்றி, இவருடன் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பல்வேறு கடுமையான உடல் பயிற்சிகள் மற்றும் பாக்ஸிங் கற்று கொண்டுதான் நடித்துள்ளனர்.

மாயத்திரை’

பிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் அசோக்குமார். இவர் ‘மாயத்திரை’ என்ற ஒரு பேய் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.டூலெட், திரவுபதி ஆகிய படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.

தொகுப்பு:செ.மனுவேந்தன் 

No comments:

Post a Comment