தங்கமான வீடு
மனிதன் 1 :உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
மனிதன் 2 :ஓட்டுவீடு, அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... 'தங்க' வீடெல்லாம் கிடையாது.
வியாதி
ஆசிரியர்: "நான் பாடம் நடத்தும்போது அவன் ஏன்டா வெளியில போறான்...?"
மாணவன்: "அவனுக்குத் தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு
சார்...!"
மகா கஞ்சன்
மகன் : கஞ்சன் அப்படின்னா என்னப்பா?
தந்தை : கண்ணிலே காசையே காட்டாத வந்தாண்டா கஞ்சன்
மகன் : காசுன்னா என்னப்பா???!!!!
தழும்புகள்
சீடன்: "சுவாமி! நீங்கள் திருமணமான பின் தான் துறவி ஆனீர்களா?"
சுவாமி: "சீடனே! எப்படிக் கண்டுபிடித்தாய்?"
சீடன்: "உடம்பெல்லாம் காயம்பட்ட தழும்புகள் நிறையத் தெரியுதே!"
ஏழுமலை
ஆசிரியர்:இது யாரோட கையெழுத்து?"/\/\/\/\/\/\/\"
பையன:என் அப்பாவோட கையெழுத்து ?
ஆசிரியர் :உன் அப்பா பெயர் என்ன ?
பையன் :ஏழுமலை..
மரியாதை
தந்தை: "அப்பாங்கற மரியாதை இல்லாம என் முன்னாடியே 'தண்ணி' அடிக்கிறியா?"
மகன்: "நான் உனக்குப் பின்னாலதான் நின்னு குடிச்சிட்டிருந்தேன், நீதான் படார்னு திரும்பிட்ட!"
தேவாங்கு
Man 1:எதுக்குடா அவன அடிச்சே”
man2:“ஆறு வருஷத்துக்கு முன்ன என்ன தேவாங்குன்னு
சொன்னான்”
... Man1:“அதுக்கு இப்போ ஏன் அடிக்கிறே?”
Man2:“நான் நேத்து தான தேவாங்க பாத்தேன்!”.
Man1:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?????????
துடைப்பம்
அவன்: என்னது, இன்னிக்கு வீட்டுக்குப் போயி உன் பொண்டாட்டிக்
கிட்டே தைரியமா எதிர்த்துப் பேசப்போறியா? எப்ப இருந்துடா இப்படி மாறினே.
இவன்: காலையில நான் துடைப்பத்தை ஒளிச்சி
வெச்சதிலிருந்து.
பத்துத்தலை
வேலு: ஒரு தலைக்கு கட்டிங் செஞ்சா பத்து தலைக்கு
இலவசம்னு அந்த சலூன்ல போட்டிருந்தாங்களே போய்ப்பாத்தியா?
பாலு: பத்து தலையும் ஒரே உடம்புல இருக்கணுமாம்
புத்திசாலி
போலீஸ் : உனக்கு நாளை காலை 5 மணிக்கு தூக்கு தண்டனை
கைதி : ஹ ஹ ஹ
போலீஸ் : ஏன் சிரிக்கிற.?
கைதி : ஐயோ ஐயோ நான் எழுந்திருகிறதே 8 மணிக்கு தான்.!
திருட்டு
நோயாளி: "உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்சினையா டாக்டர்?"
டாக்டர்: "ஆமா.. ஏன் கேட்கிறீங்க?"
நோயாளி: "என்னோட சொத்தைப் பல்லை எடுக்கச் சொன்னா, நைஸா தங்கப் பல்லை எடுத்துட்டீங்களே!"
அவன்தான்
தேவி: நம்ப டைப்பிஸ்டை நிமிர்ந்து பார்க்காதவன் புதுசா
வந்த கிளார்க்தான்!
மாலதி: அதிசயமாயிருக்கே!
தேவி: காரணம். அவன்தான் அவ புருஷன்.
பாப்பா
காதலன்: டார்லிங்! நம்ம மேரேஜ் இப்ப வேணாம். ஆடி போய்
ஆவணி வந்தா…நான் ‘டாப்’பா வந்துருவேன்!
காதலி: ம்ஹூம்..அதுக்குள்ளே நமக்கு ‘பாப்பா’ வந்திடும்
டியர்…!
தேடுதல்
பாலு;இன்ஸ்பெக்டர் இண்டர்நெட் பைத்தியம் போல..
வேலு :எதை வெச்சு சொல்றே?
பாலு:கொலைகாரனை கூகுள் சர்ச்-ல போய்த்
தேடுறாரே..!
குப்பை
வாத்தியார்: தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும், கீழே விழுது, ரெண்டையும் கூட்டினால் என்ன வரும்?
மாணவன்: குப்பை தான் சார்.
சுத்துதே
"என்னடா விட்டத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கே?"
"இரண்டு இறக்கை உள்ள பறவை எல்லாம் வானத்தைச் சுத்தி வருது! இந்த ஃபேனுக்கு மூணு இறக்கை இருந்தும் வீட்டுக்குள்ளேயே சுத்துதே!"
பரிகாரம்
ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும்
கடைசி வரை சேர்ந்து நல்லா
இருப்பீங்க..................
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லையா, ஜோதிடரே ...........
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment