கடலில் உடைந்து மிதக்கும் ...



மிகப்பெரிய பனிப்பாறை

அண்டார்டிகாவில் மிகப் பெரிய பனிப்பாறை உடைந்து கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளது. புதுடெல்லி நகரத்தைப் போன்று, 3 மடங்கு பெரிதான அந்த பனிப்பாறை உடைந்துள்ளது சூழல் ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பூமியின் தென் பகுதியில் உள்ள மிகப் பெரிய கண்டமான அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் நிறைந்து காணப்படுகின்றன. புவி வெப்பமயமாதலை இந்த பனிப்பாறைகள் தடுத்து வருகின்றன. எனினும், மனிதனின் நவீன வாழ்வியல் முறைகளால், காலநிலையில் வெப்பம் அதிகரித்து இந்த பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகத் தொடங்கியுள்ளன. இதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்து பலகடற்கரையோர பகுதிகள் நீரினுள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், அண்டார்டிகாவில் 4.320 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று, பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளது. அதாவது புதுடெல்லி நகரைப் போன்று 3 மடங்கு பெரிதான பனிப்பாறை வெட்டெல் கடலில் மிதக்கிறது.

 

ஏ-76 என பெயரிடப்பட்டுள்ள அந்த பாறை 170 கிலோ மீட்டர் நீளமும், 25 கிலோ மீட்டர் அகலமும் உடையதாக, அண்டார்டிகா கடலில் மிதப்பதால், சூழல் ஆர்வர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.


நீளமான நடை பாதை

உலகின் மிக நீளமான நடை பாதை கேப் டவுன் (தென்னாப்பிரிக்கா) முதல் மகடன் (ரஷ்யா) வரை உள்ளது.விமானங்கள் அல்லது படகுகள் தேவையில்லை, பாலங்கள் உள்ளன.

இது 22,387 கி.மீ தூரமுள்ளது. பயணம் செய்ய 4,492 மணி நேரம் எடுக்கும்.

இது நிறுத்தப்படாமல் 187 நாட்களில் செல்லலாம்.

இந்த பாதை உங்களை 17 நாடுகள், ஆறு நேர மண்டலங்கள் மற்றும் ஆண்டின் அனைத்து பருவங்கள் வழியாக அழைத்துச் செல்கிறது.


கடல் மைல்


நாடுகள் இடையே நிலத்தில் எல்லைகள் பிரிக்கப்படுவதற்கும்
கடலில் எல்லைகள் பிரிக்கப் படுவதற்கும். நிறைய வித்தியாசம் உண்டு. வழமையாக நிலப்பரப்பில் 1மைல் =1.6 கிலோமீட்டர் ஆகும். ஆனால் கடலில் அப்படியல்ல.  ஒரு   'கடல் மைல்என்பது 1.852 மீற்றர் ஆகும்.

 

கடல் மைல் - ஆங்கிலத்தில் 'நாட்டிக்கல் மைல்' (NAUTICAL MILE) அல்லது 'ஸீ மைல்' (SEA MILE) என்று அழைக்கப்படுகிறது.

 ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது சர்வதேச விதிகளின் படி, கரையிலிருந்து 12 'கடல் மைல்' - அதாவது 22.2 கி.மி தொலைவுக்கு உட்பட்ட கடல் பகுதி ஆகும். நாடுகள் அடுத்தடுத்து இருந்திருந்தால் கடலின் அகலத்தில் சரி பாதியே எல்லைக்கோடுகளாக கொண்டிருக்கும். 

தனுஷ்கோடி தலைமன்னாருக்குமான இடைவெளி, 19 கடல் மைல் தூரம் தான். இதில், இந்தியாவுக்கு  8 கடல் மைல் தூரமும், இலங்கைக்கு, 11 கடல் மைல் தூரமும் என, பிரிக்கப்பட்டுள்ளது.

-தொகுப்பு :செ . மனுவேந்தன் 



No comments:

Post a Comment