‘ராஜா மகள்’
ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும், மகளுக்கும் இடையே
நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து, ‘ராஜா மகள்’ என்ற படம், ஹென்றி
இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘கன்னிமாடம்’
வெலினா, ‘நடுவுல கொஞ்சம்
பக்கத்த காணோம்’ பக்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பி.முருகேசன் தயாரிக்கிறார்.
விஜய்
சேதுபதி ‘மால்’
விஜய் சேதுபதி 10 மாடிகளை கொண்ட
பிரமாண்டமான ‘மால்’ ஒன்றை கூடுவாஞ்சேரியில் கட்டுகிறார்.
இதற்கு அதிக பணம் தேவைப்படுவதால் தனது சம்பளத்தை கூட்டி விட்டார். ஒரு
காட்சியில் தலையை காட்ட ரூ.3 கோடி, கவுரவ வேடத்தில் நடிக்க ரூ.5 கோடி, கதாநாயகனாக
நடிக்க ரூ.10 கோடி, வில்லனாக நடிக்க
ரூ.20 கோடி என தனது
சம்பளத்தை வரிசைப்படுத்தி இருக்கிறார்.
ஓ
மணப்பெண்ணே
காதலுக்கும், காமெடிக்கும்
முக்கியத்துவம் உள்ள ‘பெல்லி சூப்புலு’
என்ற தெலுங்கு படம் , ஹரீஸ் கல்யாண்-பிரியா பவானி சங்கர் நடிப்பில், ‘ஓ மணப்பெண்ணே’
என்ற பெயரில், தமிழில் தயாராகி
வருகிறது. கார்த்திக் சுந்தர் டைரக்டு செய்கிறார்.
5 படங்களில்
கமல்ஹாசன் தற்போது அடுத்தடுத்து தொடர்ந்து 5 படங்களில்
நடிக்க தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் ஏற்கனவே நடித்து வந்த
இந்தியன்-2 படம் கோர்ட்டு
வழக்கில் சிக்கி உள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவும்
ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது.
மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷயம் 2-ம் பாகத்தை தமிழில் பாபநாசம் 2 என்ற பெயரில்
ரீமேக் செய்து நடிக்கவும் கமல்ஹாசன் திட்டமிட்டு உள்ளார். இதில் கமல்ஹாசன் ஜோடியாக
நடிக்க நதியாவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. 4-வது படமாக
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல். இது துப்பாக்கி படத்தின் 2-ம் பாகமாக
இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் 5-வது படமாக வெற்றி
மாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக புதிய தகவல் பரவி
வருகிறது.
சமுத்திரக்கனியின்
மகன்
நடிகர், டைரக்டர்
சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஸ்வரன், முதன்முதலாக ஒரு குறும் படத்தை டைரக்டு செய்து
இருக்கிறார்.
‘‘இது, சமூக அக்கறையுடன்
கூடிய கதையம்சம் கொண்ட படமாக இருக்கும்’’ என்கிறார், டைரக்டர் ஹரி
விக்னேஸ்வரன்.
மீரா மிதுன்
‘பேய காணோம்’ என்ற
திகில் படத்தில், மீரா மிதுன் 2 விதமான
தோற்றங்களில் நடிக்கிறார். அதில் ஒரு வேடம், பாம்படம் அணிந்த பாட்டி. ஒரு சினிமா டைரக்டரின்
வாழ்க்கையை மையப் படுத்தி, இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
தாயான
சினேகா
2 குழந்தைகளுக்கு
தாயான சினேகாவுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழி பட உலகில்
இருந்தும் புது பட வாய்ப்பு கள் வருகின்றன.
‘‘என் உலகமே
குழந்தைகள்தான்’’ என்று சினிமாவை விட்டு சற்றே ஒதுங்கியிருந்த அவர், குழந்தைகள்
விஹான், அத்யந்தா
இருவரும் வளர்ந்து விட்டதால் மீண்டும் ‘பிஸி’யாக நடிக்கத்தொடங்கிவிட்டார்.
அவருடைய கணவர் பிரசன்னாவும் 4 மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.
மானேஜர்
ஜெயசித்திரா
நடிகை ஜெயசித்ராவின் மகனும், இசையமைப்பாளருமான அம்ரிஷ், கர்ஜனை, பாம்பாட்டம், ரஜினி, சண்டக்காரி, வீரமாதேவி ஆகிய 5 படங்களுக்கு
இசையமைத்து வருகிறார்.அவருக்கு மானேஜராக இருந்து நிர்வாகத்தை கவனிக்கிறார், ஜெயசித்ரா.
டெடி
2
ஆர்யா நடித்துள்ள டெடி படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. டெடி
படம் கடந்த மார்ச் மாதம் ஓ.டி.டி.யில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆர்யா, சாயிஷா ஜோடியாக
நடித்து இருந்தனர். டிக் டிக் டிக், மிருதன் படங்களை இயக்கி பிரபலமான சக்தி
சவுந்தரராஜன் டைரக்டு செய்து இருந்தார். குழந்தைகளை படம் கவர்ந்த நிலையில் டெடி படத்தின் 2-ம் பாகம்
தயாராவதை ஆர்யா தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.
தடுப்பூசி
போட்ட பின்னரே...
நடிகர் சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலமாக் இப்போது இரண்டு படங்களைத்
தயாரித்து வருகிறார். அதில் ஒன்றில் அவரும் நடிக்கிறார். இந்நிலையில் கொரோனா
தளர்வுகளுக்குப் பின்னர் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்
தனது தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகும் படங்களில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா
தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளாராம். தடுப்பூசி போட்ட பின்னரே
படப்பிடிப்புகளில் அனைவரும் கலந்துகொள்ள முடியும் என முடிவெடுத்துள்ளாராம்.
தமிழ்
ஓடிடி
இயக்குனர் சேரன் தமிழ் மொழிப் படங்களுக்கு என தனியாக ஓடிடி தொடங்க வேண்டும் என
தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
--------------தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment