மிகுந்த ஆசையுடன் உன்னை நாடுகிறேன்!"

 

 

"பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன்"

 

"தூங்கையிலே உன் சிந்தனை வந்து

தூதுவிட்டு என்னிடம் உன்னை அழைக்க

தூண்டில் போட்டு இதயத்தை பறிக்க

தூரிகை எடுத்து கவிதை வடிக்கிறேன் !"

 

"வில் புருவமும் கயல் கண்களும்

விரிந்த இதழும் சங்குக் கழுத்தும்

விந்தை காட்டும் உடல் எழிலும்

வியந்து நான் வரிகளில் எழுதுகிறேன் !"

 

"மினுங்காத வைரத்தை மினுங்க வைக்க

மிருதுவான கையை கோர்த்து பிடிக்க

மிதலை பொழியும் அழகில் மயங்கிட

மிகுந்த ஆசையுடன் உன்னை நாடுகிறேன் !"

 

"உன்னழகை ரசிக்க வரம் கேட்டு

உன்னுடலை அணைக்க தவம் இருந்து

உன்சுகம் நாடி நான் வந்து

உன் முணு முணுப்பை இசையாக்கிறேன் !"

 

"வாலிப்பதை தூண்டும் சிறு இடையும்

வாட்டம் காட்டாத நிலா முகமும்

வாசனை கொட்டும் கரும் கூந்தலும்

வாக்கியமாய் இங்கே வரைந்து காட்டுகிறேன் !"

 

"பருவ பெண்ணை முழுதாக ரசிக்க

பளிங்கு கன்னத்தில் முத்தம் இட

பரவசம் கொஞ்சம் என்னை தழுவ

பல்லவி தொடங்கி சரணம் பாடுகிறேன் !"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

மிதலை - navel, கொப்பூழ், தொப்புள்

No comments:

Post a Comment