இவ்வாரம்
வெளியான திரைப்படங்கள்
படம்: ஜகமே
தந்திரம்
நடிகர்: தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி,கலையரசன், சஞ்சனா நடராஜன், ஷரத் ரவி, சௌந்தராஜன், வடிவுக்கரசி, ராமசந்திரன்
துரைராஜ்
இயக்கம் : கார்த்திக் சுப்பராஜ்
விமர்சனம்
சுருக்கம்:உலககெங்கிலும் தலைவிரித்தாடும் நிறவெறி, இனவெறி, பாசிச அரசியல்
மற்றும் ‘அகதிகள்’ என்றும் ‘வந்தேறிகள்’ என்றும் வசைபாடப்படும் ஏதிலிகளின்
துயரங்களைக் கமர்ஷியல் சினிமாவில் பேச முயன்றதற்கு வாழ்த்துகள். ஆனால் படத்தில்
காட்டப்படும் புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே துப்பாக்கியும் வெடிகுண்டுமாக அலைவது
நெருடலை ஏற்படுத்துகிறது.
வெளியான
திகதி :'நெட்ப்ளிக்ஸ்' தளத்தில் 18 Jun 2021
மதிப்பு:2.5/5
………………………………………….
படம்: மேதகு
நடிகர்: குட்டி
மணி, ஈஸ்வர் பாஷா
இயக்கம் : கிட்டு டி
வெளியான
திகதி : 25 ஜூன் 2021
விமர்சனம்:
வேலுப்பிள்ளை
பிரபாகரனின் பயோபிக்கா `மேதகு'? உண்மையும், வன்முறையும், சில
திருத்தங்களும்!
பிரபாகரனின்
பிறப்பு முதல் அவரின் முதல் புரட்சிகர அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவான
காரணம் வரை இந்த முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
90-களில் மதுரையில் நடக்கும் ஒரு தெருக்கூத்து
வழியாக பிரபாகரனின் வாழ்க்கைச் சொல்லப்படுகிறது. பிரபாகரனின் பிறப்பு முதல் அவரின்
முதல் புரட்சிகர அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவான காரணம்வரை இந்த முதல்
பாகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. செல்வாவின் காந்திய வழி போராட்டங்கள், பண்டாரநாயகேவின்
ஒப்பந்தங்கள், இலங்கை மண்ணில்
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் என TNT (Tamil new Tigers) உருவானதற்கான
காரணம்வரை படம் வரலாற்றின் பக்கம் நின்று சிற்சில சினிமாத்தனங்களுடன் கதை
சொல்கிறது.
பின்னணி இசையில்
பிரவீன்குமாரின் உழைப்பு தெரிகிறது. ரியாஸின் ஒளிப்பதிவும் சிறப்பு. நூறு நிமிட
சினிமா என்பதால், சுவாரஸ்யமான
காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. பண்டாரநாயகே, அல்ஃபிரெட் துரையப்பா போன்ற
கதாபாத்திரங்களுக்கான முக அமைப்பு தேர்வுகளில், மெனக்கெடல்கள்
தெரிகின்றன. குறிப்பாக பிரபாகரனாக நடித்திருக்கும் சிறுவன். பிரபாகரனின் வாழ்க்கை
வரலாற்றுப் படத்துக்காக உருவாக்கப்பட்டது போன்றதொரு முகம் அவனுடையது. படத்தில்
நிறைய புதுமுகங்கள். தெருக்கூத்து நடிகர்களான ராஜவேலும், பெருமாளும்
சிறப்பான கதை சொல்லிகள்.
பிரபாகரன்
வன்முறையின் பாதை நோக்கி நகர்ந்ததற்கான காரணங்கள் தர்க்க ரீதியில்
முன்வைக்கப்பட்டாலும், சில காட்சிகளில் வெற்றியை விடவும், வன்முறையின்
மீதான ஆர்வமே மேலோங்குகிறது. படத்தின் களம் பெரிது. ஆனால், பட்ஜெட் சிறிது.
அது பல இடங்களில் புருவம் உயர்த்த வைக்கிறது. குறிப்பாக தமிழ் ஆராய்ச்சி மாநாடு
காட்சிகளும், பண்டாரநாயகே
காட்சிகளும்! படத்தில் சில இடங்களில் வரலாற்று பிசகுகளும் இருக்கின்றன.
ஒருவரின் பயோபிக்
என்பதால், மற்றவர்களை
சிறுமைப்படுத்த வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. செல்வநாயகத்தின் காட்சிகள்
அப்படித்தான் காட்சியமைக்கப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர்த்திருக்கலாம்.
அடுத்தடுத்த பாகங்களில் இன்னும் முழுமையான வரலாற்று ஆவணமாக இது மாறும் என்கிற
நம்பிக்கை இருக்கிறது. படத்தின் ஆரம்ப அனிமேஷன் காட்சிகளும், படத்தில்
ஆங்காங்கே வரும் வாய்ஸ் ஓவர்களும் படத்துக்கு வலுசேர்க்காமல் அந்நியப்பட்டு
நிற்கின்றன.
தொகுப்பு:செ,மனுவேந்தன்
No comments:
Post a Comment