ஏற்பதும் ,மறுப்பதும்...

 


கனவுகள்

ஏற்பு

கனவுகள் சுமந்து கண்கள் பாயட்டும்

காணும் காட்சிகளிலெல்லாம் கற்பனை விடியட்டும்

சுகம் தரும் சுகமான எண்ணங்களில்

பசுமையும் துள்ளி வாழ்வு செழிக்கட்டும்

மின்னும் அழகில் மானிட சக்தி

பூமியை மகிழவைத்து ஒளியாய் திகழட்டும்

 

மறுப்பு

கற்பனைகள் மனிதனின் கண்களை கட்டும்

காதல் அவன் சிந்தனையை சிதறடிக்கும்

எண்ணங்கள் அவன் அடையாளத்தை காட்டும்

எதிர் எதிரே உணர்வுகள் வந்தாலும்

உதிர்ந்த ஒளியும் ஏக்கங்களை வெளிப்படுத்தும்

உள்ளத்தின் ஒளியும் திசையறியாது நகரும்

 

உறவுகள்

ஏற்பு:

உறவுகள் நிறைந்த உன்னத வாழ்க்கை

உருவாக்கி கொள் உருக்குலைந்து போகமாட்டாய்

அற்புத ஆற்றலையும் அன்பால் புரி

ஆறடி செல்லும்வரை அழகாய் இருப்பாய்

சந்தோச பறவைகள் சாய்ந்து நிற்க

சந்தோஷமும் வாழ்ந்துவிட சாமர்த்தியம் கொள்

மறுப்பு:

தான் இருப்பார் தரம் குறைப்பார்

தாழ்த்தி பேசியே தண்டனை கொடுப்பார்

தாழ்ந்து போவேன் தரம்கெட்ட உறவுகளால்

தடம் புரள்வேன் தள்ளிவிடும் உறவுகளால்

நம்மை நாமே நலம்பெற வைக்க

நித்தம் உறவுகளை பிரிந்து செல்வோம்

 

திருப்பம்

ஏற்பு:

திருப்பம் வந்தால் திறமை கொள்ளு

தீர்மானிக்கப்படும் இலக்கும் திரிபு கொள்ளாது

தீர்வும் வந்து நிம்மதியை தரவும்

திருப்பம் கொள் தடைகளையும் உடைக்கும்

தன்னை தேடி தாழ்ந்து செல்லாது

நம்பிக்கை கொள் திருப்பம் வந்துவிடும்

 

மறுப்பு:

திருப்பம் வந்து கற்று கொடுத்ததால்

தெளிவான நானும் தேய்ந்து கொண்டேன்

திருப்பம் தொடங்கிவிடும் இடம் எதுவோ

அதுவே வாழ்வை தொலைக்கும் இடம்

திருப்பம் வேண்டாம் திரிசூலமும் வேண்டாம்

கனவுகளை சுமந்து களிப்புடன் வாழ்வோம்

🖎-அகிலன் ராஜா, காலையடி\கனடா


0 comments:

Post a Comment