வாழ்வியல் சிந்தனைகள் - பகுதி:04

 

தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்

-ஆ. அந்தோணிசாமி

(கட்டுரையாளர்,

பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

அரசு கலைக்கல்லூரி,

சேலம் – 07)

கல்வி

     கல்வியின் மகத்துவத்தை உணா்ந்தவர்களே சான்றோர்கள். கல்வி கற்க வேண்டுமெனில் ஆசிரியா்க்கு உரிய மரியாதைசெலுத்தி கற்ற வேண்டும். ஆசிரியா்களைக் காப்பதும் மாணவா்களின் இன்றைய கடமையாகக் கூறப்படுகிறது. கல்வியானது தாயின் மனதையும் மாற்றும் ஆற்றல் பெற்றது. சாதி வேறுபாட்டைக் கூட மாற்றவல்ல சக்தி வாய்ந்தது கல்வி, அதனால் தான் ஔவையாரும் கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு எனக் கூறுகிறார்.

 

     கண்ணுடையோர் என்போர் கற்றோர்” என்று வள்ளுவரும். “கல்லாதவன் வாழும் வீடு வெளிச்சமில்லா வீடு” என்று புரட்சிக் கவிஞன் பாரதிதாசனும் எழுத்தறிவின் அவசியத்தை பாடினார்.

 

     எழுத்து விதைகள் இதயங்களில் தூவப்படும்போது

  செழித்து வளா்வது ஒரு தனி மனிதன் அல்ல,

     சமுதாயம்”

 

என்று கவிஞா் மு.மேத்தா கல்விச் சிந்தனைகளை கல்வெட்டாய்ப் பதித்து வைத்துள்ளார்.

 

மது பற்றிய விழிப்புணா்வு

     இன்றைய இளைய சமுதாயம் அறிவில் மனத்தைச் செலுத்தாது மதுவில் மயங்கி வாழ்வைச் சீரழித்து விடுகிறது. இத்தீய பழக்கம் அவா்தம் மதிப்பை இழக்கச் செய்யும். மது அருந்தியவனைக் கண்டால் ஈன்ற தாயின் முகமே வெறுபப்டையும். மதுவுண்டு மயங்கியவன் செத்தவனாகவே ஆளாவான். தனது பொருளை மதுவாங்கி மயங்குவது அவனது அறியாமையே ஆகும்.

 

கைஅறி யாமை உடைத்தே பொருள் கொடுத்து

மெய் அறி யாமை கொளல்”    (குறள் – 925)

 என்பார் வள்ளுவர்.

 

     எண்ணத்தையே அழிக்கும் மதுவினைத் தூக்கி ஏறி என்று இளைய வாலிப உள்ளங்களுக்கு கவிஞா் மேத்தா விழிப்புணர்ச்சி ஊட்டுகின்றார்.

 

     கிண்ணத்தைத் தூக்கிஎறி – மதுக்

     கிண்ணத்தைத் தூக்கி எறி

     எண்ணத்தை விறகாக்கி

     இதயத்தைக் கரியாக்கும் – மதுக்

     கிண்ணத்தைத் தூக்கி எறி”

 

இங்ஙனம் மதுவினால் ஏற்படும் தீமையைச் சுட்டிக் காட்டுகிறார் கவிஞா். தமிழ் இலக்கியங்களில் மது தனிமனித ஒழுக்கம் மட்டுமல்ல சமூகத்தின் வளா்ச்சியைப் பாதிக்கும் என்பதை காட்டுகிறது.

 

     புகைப் பிடித்தால் இறப்பாய்

     மது குடித்தால் இறப்பாய் இரண்டும்

     விட்டால் வாழ்வில் சிறப்பாய்” 

-தமிழன்பன்

 

புகை, மதுப்பழக்கம் உள்ளவா்களுக்கு எச்சரிக்கை செய்கிறார்.

 

மேலும் தொடரும்

 

No comments:

Post a Comment