தூங்கடி யம்மா தூங்கு -இப்படியும் ஒரு தாலாட்டு

மரபுக் கவிதை
ஒலி வடிவில் கேட்க வீடியோ பட்டினை அழுத்தவும் 
click to play👇

 

 தூங்கடி யம்மா தூங்கு உன் களையும் தீர நன்கு  தூங்கு

வீங்கலில்லா அழுத்தத்துடன் விரும்பியபடி தூங்கிடுவாய்    

நீங்கலில்லா நிம்மதியுடன் நினைவுகள் மறந்து நீ தூங்கு 

ஓங்காரியாய் உழைத்தவளே ஒய்யாரமாயே தூங்கிடுவாய்!

(நீங்கல் -பிளவு)


மணமகளா நீ மலர்ந்தநாள் என் இல்லறத்தின் தோற்றமடி

குணவதனியாய் கவர்ந்தெனைக் கொண்ட காலமென்ன?  

இணக்கமே இல்லாத இரண்டாம் பத்து வருடத்தில் நாம் 

ரணகளத்தில்  வாழ்ந்ததினை  மறந்து தூங்கிடுவாய்!


சான்றோர் சாதனைகள் சாதித்த போதனைகள் எங்கள் 

மூன்றாம் பத்தினிலே மூழ்கிநின்ற   பொன்மொழிகள் நல் 

ஈன்றாராய்  மெளனித்த காலங்களாய் கடந்துவிட்ட 

ஆண்டுகளை மறந்தென் ஆரணங்கே  தூங்கிடுவாய்.


(அறுபகை-காமம்குரோதம் உலோபம்மோகம்மதம்பொறாமை ஆறுவகை உட்பகை)

அறுபகையும் அருகி  அறுபதையும் அடைந்தபின்னர் 

இறுகிவிட்ட அன்பினிலே இருவருமே ஒன்றானோம் 

மறுதந்தையா யெனை மண்ணில் மதிப்பவளே, என்  

பெறுதாயே   போற்றி,  பெருமையுடன்  தூங்கிடுவாய்.


✍செ.மனுவேந்தன் 

No comments:

Post a Comment