எம் குறும் படமும் திரையின் புதினமும்

📽குறும்படம்'கண்களைத் திற' 

இக்கால பெற்றோர்கள் சிலர்  பணம் பணம் என்று சேர்த்துக்கொண்டு பிள்ளைகளுக்கும் செலவழியாது ,தாமும் அனுபவிக்காது அர்த்தமற்று வாழும் வாழ்வினை இக்குறும்படம் விளக்குகிறது.



📽திரையின் புதினம்

டாக்டர்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்திற்கு  யூ ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அனால் எப்போது என முடிவுகள் வெளியாகவில்லை.

குற்றமே குற்றம்

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள குற்றமே குற்றம் தற்போது ஓ.டி.டி.யில் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ரிலீசாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதில் திவ்யா நாயகியாக நடித்துள்ளார். சும்ருதி வெங்கட, ஹரிஷ் உத்தமன், காளி வெங்கட் ஆகியோரும் நடித்து உள்ளனர்.

ஓடிடி’

நடிகை நடிகை நமீதா ஒரு ‘ஓடிடி’ தளத்தை தொடங்கி இருக்கிறார். அதற்கு, ‘நமீதா தியேட்டர்ஸ்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

ஆனந்தம் விளையாடும் வீடு

கவுதம் கார்த்திக், சேரன் இருவரும் இணைந்து நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் விக்னேஷ், சரவணன், டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், நமோ நாராயணன், சினேகன், சிவாத்மிகா, மவுனிகா, சூசன், மதுமிதா உள்பட 40 நடிகர்-நடிகைகள் இணைந்து நடிக்கிறார்கள். நந்தா பெரியசாமி டைரக்டு செய்கிறார்.இந்த படத்தில் கவுதம் கார்த்திக், ‘லாரி செட்’டில் வேலை செய்பவராகவும், சிவாத்மிகா டி.வி. ஆங்கராகவும் நடிக்கிறார்கள். இது ஒரு குடும்ப கதை. பிரிந்து கிடக்கும் 2 குடும்பங்களை கதாநாயகன் எப்படி ஒன்று சேர்க்கிறார்? என்பது கதை.’’

25-வது படம்

மைனா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விதார்த், இதுவரை 24 படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய 25-வது படம் திகில் கதையம்சத்துடன் தயாராகி இருக்கிறது.

படத்தில் கதாநாயகியாக தன்யா பால கிருஷ்ணன் நடித்து இருக்கிறார். ஜோதி முருகன், சீனிவாசன் ஆகிய இருவரும் படத்தை தயாரித்துள்ளனர்.

தொகுப்பு :செமனுவேந்தன் 


No comments:

Post a Comment