சானிடைசர்
கொரோனா
வைரஸ் தொற்றுநோயில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள,
தங்கள்
கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்வது, மாஸ்கை
பயன்படுத்துவது, சமூக இடவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை
மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதில் குறிப்பாக கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள,
அடிக்கடி
பயன்படுத்தும் பொருட்களின் ஒன்று சானிடைசர். அதனால், கைகளை
அடிக்கடி சுத்தப்படுத்துகிறார்கள்.
ஆனால்,
அளவிற்கு
மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. சானிடைசர்
பயன்படுத்துவதிலும் கவனம் வேண்டும். கொரோனா வைரஸிலிருந்து (Corona
VIrus) தப்பிக்க அதிகமாகப் பயன்படுத்துவதால் பல தோல்
பிரச்சினைகள் ஏற்படலாம். சருமத்தில் சானிட்டீசரின் தாக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்
சானிடைசரில்
உள்ள உட்பொருட்கள் என்ன ?
சானிடடைசரில் ஏராளமான எத்தில் ஆல்கஹால், ஐசோபிரைல் ஆல்கஹால் மற்றும் பாக்டீரியாவுக்கு எதிரான இரசாயனங்கள் உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர். இது நமது சருமத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களைக் கொல்லும். சானிடைசர் பல வகையான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
சருமத்தின்
மீது ஏற்படும் பாதிப்புகள் என்ன?
சானிடைசரை அடிக்கடி பயன்படுத்துவதால் நமது தோல் வறண்டு, சிவந்து போகும். இது தவிர, சருமத்தின் மீது அரிப்பு ஏற்படலாம். சானிடைசரில் எலுமிச்சை மற்றும் வினிகர் உள்ளன. அதனால், அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், உங்கள் சருமத்தையும் எரிச்சல் ஏற்படக் கூடும். உங்கள் சருமம் மிகவும் உணர்திறன் கொண்டதாக இருந்தால், நீங்கள் சானிடடைசரின் பயன்பாட்டை நிச்சயம் குறைக்க வேண்டும்.
இதற்கான
தீர்வுகள் என்ன?
சானிடைசரைப்
பயன்படுத்துவதால், உங்களுக்கு
தோல் தொடர்பான பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால், சானிட்டீசருக்கு பதிலாக சோப்பு
கலந்த நீரை பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும். சோப்பு நீரால்,
20 விநாடிகள் கைகளை கழுவுவது, உங்களை
கொரோனாவிலிருந்து நிச்சயம் பாதுகாக்கும்.
அது சானிடைசரை விட அதிக திறன் பெற்றது என்பது பல ஆய்வுகளில் தெரிய
வந்துள்ளது. உங்களுக்கு சரும பிரச்சினைகள் இருந்தால்,
விரைவில்
சருமத்திற்கான மருத்துவரை உடனே அணுகவும்.
உப்பின் பக்க விளைவு
புதிய
ஆய்வு ஒன்று,
உப்பின்
பக்க விளைவுகளை கண்டறிந்துள்ளது. உணவில் உப்பு சேர்த்துக்கொள்வது அவசியம்.
என்றாலும்,
இதுவே
அளவுக்கு மிஞ்சினால் கெடுதல். உதாரணமாக, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உப்பின்
அளவை மிகவும் குறைக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக, ரத்தக்
குழாய், சிறுநீரகம், இதயம்
மற்றும் மூளை போன்றவை, உப்பின் அளவு மீறினால் அதிகம் பாதிப்பாகலாம்
என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
உடல்
பருமன் உள்ளவர்களும், மிகையாக உணவு உண்ணும் சாப்பாட்டுப்
பிரியர்களும் உப்பின் அளவை வெகுவாக கட்டுப்படுத்த வேண்டும். அண்மையில், உப்பின்
அளவு மீறனால்,
மைட்டோகாண்ட்ரியாக்களின்
செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு செல்கள் செயலிழக்க நேரிடும்
என்பது தெரியவந்துள்ளது.
உப்பில்
உள்ள சோடியத்தின் அயனிகள், உடலின் பல செயல்பாடுகளை, செல்கள்
மட்டத்தில் பாதிக்க வல்லவை என்று, 'சர்க்குலேஷன்' இதழில்
வெளிவந்துள்ள ஆய்வு தெரிவிக்கிறது.இது ஒரு முக்கியமான மருத்துவ ஆய்வு முடிவு
என்றும், 'சர்க்குலேஷன்' இதழ்
கூறுகிறது.
பசி வந்துவிட்டால்…
மனிதனுக்கு
அதிக பசி வந்துவிட்டால் கோவம் அதிகமாகும் என்று புதிய ஆய்வில் தகவல்!
ஒருவருக்கு
உணவு தேவைப்படுகையில் பசி (hungry) என்ற உணர்வு ஏற்படுகிறது.
ஐப்போதாலமசு (Hypothalamus)
எனும்
நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர் (Hormone) நுரையீரலில்
உள்ள அறிமானிகளைக் குறி வைத்துச் சுரப்பதாலேயே அடிக்கடி விரும்பத்தகாத பசி உணர்வு
ஏற்படுகிறது.
ஆரோக்கியமான
ஒருவர் சில வாரங்களுக்கு உணவு எடுத்துக் கொள்ளாமலேயே உயிர்வாழ முடியும்.
சாப்பிடாமல் விட்டு சில மணி நேரங்களுக்குப் பிறகே மிகவும் விரும்பத்தகாத ஒரு விதப்
பசி உணர்வு ஏற்படுகிறது. பசி உணர்வு உணவு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகே
கட்டுப்படுத்தபடுகிறது.
பசி
வந்ததும் கோவம் அதிகமாக வருவது ஒரு உணர்ச்சி என்று சமீபத்தில் நடத்திய ஆய்வு
ஒன்றில் தெரியவந்துள்ளது. பசி வந்ததுட்டா.. நீ இப்படி தான் ஆகிடுவ என்று ஒரு
விளம்பரம் உண்டு. பலரையும் இந்த விளம்பரம் கவர்ந்ததற்கு காரணம் அனைவருக்கும் அந்த
விளம்பரத்தில் நேர்ந்தது போன்ற சம்பவம் நடந்திருக்கும்.
பசி
வந்ததும் வழக்கத்தை விட கோபம் வரும். அதனை நாம் பலமுறை உணர்ந்திருக்க மாட்டோம்.
சிலரோ அந்த கோபத்தை அப்படியே வெளிப்படுத்திவிடுவர். தற்போது இதுகுறித்து லண்டனை
சேர்ந்த நியூட்ரிஷியன் ஒருவர் ஆய்வு நடத்தி உள்ளார். அந்த ஆய்வின் முடிவில், ரத்தத்தில்
சக்கரை அளவு குறையும் போது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்த ஹார்மோன்கள்
மூளையை சென்றடையும்போது ஒருவர் கோப உணர்வை வெளிப்படுத்துகிறார் என்று
கண்டறிந்துள்ளார்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment