எரிகற்கள்

 


 சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் பூமியும் ஒன்று என்பது நாமறிந்ததே. பூமி உட்பட ஒன்பது கோள்களும்  சூரியனை மையமாகக்கொண்டு சுற்றி வருகின்றன. அவைகளுடன் ஆஸ்டிராய்டுகள் (Asteroids) எனப்பபடுக் குறுங்கோள்களும் கதிரவனைச் சுற்றி வருகின்றன. மற்ற கோள்களைவிட மிகச் சிறிய வடிவுடை இவை செவ்வாய்க் கோளுக்கும் வியாழன் கோளுக்குமிடையே வளையமாக அமைந்து சூரியனைச் சுற்றி வருகின்றன. நுண்கோள்களான இவைகள் பலநூறு கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட மாபெரும் பாராங்கற்களாகும். இஃது வால் நட்சத்திரம் போன்றவைகளிலிருந்து வெளிப்படும் தூசி, வாயு ஆகியவற்றால் உருவானவைகளாகும்.

 

மாபெரும் கல் மலைகள் போன்ற இவை வளையமாகச் சுற்றி வரும்போது ஒன்றோடு ஒன்று மோதுவதுண்டு. அம்மோதலின் விளைவாக அவை சிதறுண்டு பூமியை நோக்கிவீழும். பூமிக்கோளை நெருங்கும்போது அவை புவியீர்ப்பு விசையால் பூமியை நோக்கி விரைந்து ஈர்க்கப்படும். இவ்வாறு பூமியை நோக்கி வேகமாக வரும் இவ்விண் கற்கள் காற்று மண்டலத்துள் புகும்போது காற்றின் உராய்வால் உண்டாகும் வெப்பத்தால் எரிந்த நிலையில் பூமியை அடையும். இவற்றின் எரிநிலை சில சமயம் 4,0000 பாரன்ஹீட் இருக்கும்.

 

விண்கற்கள் சிறியனவாக இருந்தால் காற்று மண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும். அது பெருங்கற்களாக இருந்தால் காற்று உராய்வால் எரிந்து தேய்த்து கரைந்தது போக எஞ்சிய பகுதி நெருப்புத் துண்டமாக பூமியில் வந்துவிழும். அவ்வாறு விழுந்தவைகளில் சிலவற்றை அருங்காட்சியகங்களில் சேகரித்து வைத்துள்ளார்கள். அவற்றுள் மிகப் பெரியது கிரீன்லாந்தில் விழுந்த எரிகல்லாகும். இதன் எடை 36½ டன்னாகும்.

மேலும் நமீபியா, அர்ஜென்டீனா,  ஆர்மேனிய ஆகிய நாடுகளிலும் பாரிய எரிகற்கள் வீழ்ந்ததாக பதிவுகள் குறிப்பிடுகின்றன.


இவ் விண்கற்கள் சூரியனைச் சுற்றும்போது 'ஆஸ்டிராய்டுகள்' எனக் கூறப்படுகிறது. அதுவே காற்று மண்டலத்தைக் கடந்து பூமிப் பகுதியை அடையும்போது 'மீட்டியோரைட்' (Meteorite) என அழைக்கப்படுகிறது. இவ்விண் கற்கள் பாறைகளாக மட்டும் அமைந்திருக்கவில்லை. அதில் இரும்பு, சிலிகா, கார்பன், மெக்னீசியம் போன்ற தாதுப் பொருட்களும் கலந்துள்ளன.

 

இத்தகைய மாபெரும் விண்கற்களில் ஒன்று சுமார் ஐம்பதினாயிரம் ஆண்டுகட்கு முன்பு அமெரிக்க நாட்டிலுள்ள அரிசோனா எனுமிடத்தில் விழுந்தது. அது விழுந்த இடத்தில் மாபெரும் பள்ளம் ஏற்பட்டது. அதன் அகலம் இரண்டு கிலோ மீட்டர். ஆழம் பல கிலோ மீட்டர். அதே போன்றதொரு விண்கல், 1989ஆம் ஆண்டு ஐம்பது மாடி அளவு கொண்ட விண்கல் பூமிக்கருகில் பறந்து சென்றதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டார்கள். அது பூமியைத் தாக்கியிருந்தால் பல அணுகுண்டுகள் ஏற்படுத்திய சேதத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். சுமார் மூன்று இலட்சம் ஆண்டுகட்கு முன்பு விண் கற்கள் பூமியை முழு வீச்சில் தாக்கியதால்தான் அப்போது ராட்சத வடிவில் வாழ்ந்த டைனோசிரஸ் போன்ற மிருகங்கள் அழிந்தன என்பது கடந்த கால வரலாறாகும். 2004ஆம் ஆண்டில் ஒரு பெரும் விண்கல் பூமியைத் தாக்கலாம் என விஞ்ஞானிகள் கருதினார்கள். அதிஷ்டவசமாக அது வேறுதிசையில் சென்றதால் பூமியில் விழவில்லை.


 

நாள்தோறும் இலட்சக்கணக்கான விண் கற்கள் எரி கற்களாகப் பூமியை நோக்கி வருகின்றன. அவை காற்று மண்டலத்தில் எரிந்து சாம்பலாகின்றன. ஒரு சிலவே எரிந்த கருமை நிறக் கற்களாக பூமியில் வீழ்கின்றன.


👉Arularasan. G

No comments:

Post a Comment