சிரி..சிரிக்..சிரிக்கச் சில நிமிடம்

01

மனைவி: என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க ?

கணவன்: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான் .

02

டொக்ரர்: நீங்க உடனடியா மீன் , ஆடு , கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்

நோயாளி: அதுகள்  சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர் .

03

வந்தவர்: டாக்டர் என் மனைவி ஓவரா டி . வி . பாக்குறா.

டாக்டர்: எந்த அளவுக்கு பாக்குறாங்க ?”

வந்தவர்: கரண்ட் கட்டானாலும் , டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு !!!

04

மனைவி: நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க ”

கணவன்: அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை …. பத்திரமா இருக்கும் ”

05

டாக்டர்: உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு .

நோயாளி: நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும் .

06

ராமு : நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?

சோமு : ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க

07

ராமு : கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க?

சோமு : புருசன் சமயல் பண்ண கத்துக்கிறான்.

ராமு : பொண்டாட்டி சண்டை போடக் கத்துக்கிறா.

08

அலுவலகப் பையன்: எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க் இருக்காங்க . . .

பக்காத்துகாரர்: இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?

அலுவலகப் பையன்: நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.

09

நண்பர் 1 : "பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் கல்யாணத்தை ஆனாலும் தள்ளி வச்சுகிட்டே போறாங்க?"

நண்பர் 2 : "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்த முடிக்கணும்னு பெரியவங்க சொன்னத சீரியசா எடுத்துகிட்டாங்க. அதனால இன்னும் 300 பொய் சொன்னப் பிறகு தான் கல்யாணமாம்.

10

வந்தவர்: என்னப்பா சர்வர் மெதுவடைல ஓட்டை இவ்வளவு பெரிசா இருக்கே."

சமையற் காரர்: "நான்தான் சார் தவறுதலா கால் கட்டை விரலால ஓட்டை போட்டுட்டேன்"

   தொகுப்பு:செ.மனுவேந்தன் 

"சோதிடம் பற்றி ஒரு அலசல்" / பகுதி: 03

 


காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். வேத சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக் கோள்களாகும் [சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி / sun moon mars mercury jupiter venus saturn] ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் அல்லது கற்பனை கோள்கள் [இராகு, கேது] ஆகும். அத்துடன் கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, வேத சோதிட நூல், பூமி பிரபஞ்சத்தின் மையம் என்ற கருத்தை அடிப்படையாக கொண்ட 'புவியை மையமாகக் கொண்ட முறைமை' [Geocentric model] ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும், சரிசமனாக, 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மேடம் (மேஷம்), இடபம் (ரிஷபம்), மிதுனம், கர்க்கடகம் (கடகம்), சிங்கம் (சிம்மம்), கன்னி, துலாம், விருச்சிகம், தனு (தனுசு), மகரம், கும்பம், மீனம் [Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpius, Sagittarius, Capricornus, Aquarius and Pisces.] ஆகும். இவைகள் ஒவ்வொன்றும் ஒரு விண்மீன் குழாம் [Constellation] ஆகும். உத்தியோகபூர்வமாக 88  விண்மீன் குழாம்கள் இருக்கின்றன [There are 88 “official” constellations]. உண்மையில் ஒரு விண்மீன் குழாமில் பல நட்சத்திரங்கள், பூமியில் இருந்து வெவ்வேறு தூரங்களில், வெவ்வேறு அளவுகளில், மூன்று பரிமாணங்களில் விண்வெளியில் பரவி இருக்கின்றன. என்றாலும் அங்கு காணும் எல்லா நட்சத்திரங்களும், நாம் அவைகளை மிக மிக மிக தொலைவில் இருந்து பார்ப்பதால், ஒரே தளத்தில் இருப்பது போல் தோன்றுகிறது [Each constellation is a collection of stars that are distributed in space in three dimensions – the stars are all different distances from Earth. The stars in a constellation appear to be in the same plane because we are viewing them from very, very, far away & vary greatly in size too]. அங்கு இன்னும் பில்லியன் நட்சத்திரங்கள் உண்டு. ஆனால் சாதாரண கண்ணுக்கு தெரியக்கூடியதாகவும்  மற்றும் ஒரு வடிவத்தை அமைக்கக் கூடியதாகவும் காணப்படவையே இந்த 88 ம் ஆகும். இதில் பூமிக்குச் சார்பான சூரியனுடைய சுற்றுப்பாதையின் தளத்தில் காணப்படும் 12 விண்மீன் குழாம்கள் மட்டுமே இராசியாக சோதிடத்தின் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. ஞாயிற்றின் தோற்றுப்பாதை (முழுவதுமாக 360 பாகை) 131⁄3 பாகை இடைவெளியில் 27 விண்மீன் குழுக்களாக கூறு செய்யப்பட்டுள்ளது. 'அசுவினி' ஞாயிற்றின் தோற்றுப்பாதையில் முதற் கூறாகும், 'ரேவதி' கடைக்கூறாகும். ஒவ்வொரு விண்மீன் குழுவையும் மேலும் 31⁄3 பாகைகள் கொண்ட 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவு 'பாதம்' எனப்படும். இதுதான் வேத சோதிடத்தின் முக்கிய கூறுகளாகும்.

 

நடப்பவை அனைத்தும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவையே” என கூறும் வேத அல்லது இந்தியா சோதிடம், ஒருவர் பிறப்பதில் இருந்து அல்லது பூமியினுள் வரும் பொழுதில் இருந்து, அந்த நபர் இறக்கும் வரை அல்லது பூமியில் இருந்து வெளியேறும் வரை, அந்த நபருக்கு நடக்கும் அனைத்துச் சம்பவங்களும் முன்பே உறுதி செய்யப்பட்டவை என்று எடுத்துரைக்கிறது. இவ்வற்றை துல்லியமாக கூறவேண்டுமாயின், பனிரெண்டு ராசிக் கட்டங்களில் அடங்கிய ஒன்பது கிரகங்கள், இருபத்தேழு நட்சத்திரங்களின் இருப்பைச் சரியாக கணிக்க வேண்டும் என்று கூறுகிறது. மேலும் வேத சோதிடம்  மனித வாழ்வை பிறந்ததிலிருந்து இறுதிவரை பகுதி பகுதியாய் பிரித்துப் பலன் சொல்லும் தசா,புக்தி கணக்கீடுகளையும் கொண்டுள்ளது. வேத சோதிடம் ஒரு மனிதனின் ஆயுட்காலம் சராசரியாக 120 ஆண்டுகளாக எடுத்து, அதை ஒன்பது கோள்களுக்கும் [கிரகங்களுக்கும்] அவை அவைகளின் சோதிட  தன்மை மற்றும் காரகத்துவத்தை [பொறுப்பை] மையமாக கொண்டு அவைகளுக்கு அந்த 120 ஆண்டுகளையும் பிரித்தனர். உதாரணமாக, சூரிய தசை ----   6 வருடங்கள் & சுக்கிர தசை ---  20 வருடங்கள் ஆகும். ஒரு நபரின் ஆரம்ப தசையை தீர்மானிப்பது சந்திரன் மட்டுமே. உதாரணமாக, ஒரு நபர் பிறக்கின்ற பொழுது ஆகாயத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தின் மேல் சென்று கொண்டு இருக்கின்றதோ அது தான் அவரின் ஜென்ம நட்சத்திரம் ஆகும். அந்த ஜென்ம நட்சத்திர அதிபதியின் தசை தான் ஆரம்ப தசையாக வரும். அதாவது, ஒருவர் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அதன் அதிபதியான சுக்கிரனின் தசை அவருக்கு ஆரம்ப தசையாக வரும். இங்கு மொத்தம் உள்ள  27 நட்சத்திரங்களையும், மூன்று மூன்றாக 9 கோள்களுக்கும் பிரித்துள்ளார்கள் என்பதை கவனிக்க. எனவே, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதியாக வருவார்கள். உதாரணமாக, பரணி, பூரம், பூராடத்திற்கு சுக்கிரன் அதிபதி ஆகும். அடுத்தாக ஒரு கிரகத்தின் தசை நடத்துகிறது என்றால் அந்த கிரகத்தின் ஆதிக்கம் சற்று ஓங்கி இருக்குமே தவிர சாதகத்துக்குரிய அந்த நபரின் மேல் முழு ஆதிக்கம் செலுத்தாது. அதாவது ஒவ்வொரு கிரகத்தின் தசையிலும் மற்ற எட்டு கிரகங்களும் தசாநாதருடன் கைக்கோர்த்து தன் பங்கிற்கு அவர் மேல் ஆதிக்கம் செலுத்தும். இந்த பங்குகள் தான் புத்தி என்று அழைக்கப்படுகிறது. ஒரு தசையில் உள்ள மொத்த ஆண்டுகளை சரி சமனாக பிரிக்காமல் ஒவ்வொரு கிரகங்களின் தசா வருடங்களை கணக்கில் கொண்டு ஒன்பது பங்குகளாக பிரிப்பது தான் புத்தி ஆகும். எனவே, அனைத்து கிரகங்களின் புத்திகளையும் உள்ளடக்கியதே ஒரு கிரகத்தின் தசை என நாம் கூறலாம்  இது தான் வேத சோதிடத்தின் முக்கிய கட்டமைப்பு ஆகும், என்றாலும் இன்னும் நுணுக்கமாக மேலும் சில உள் அமைப்புக்கள் உண்டு. அவ்வற்றை வேத சோதிடத்தை விரிவாக படிக்கும் பொழுது அறிந்து கொள்ளலாம் 

 

"நவ கிரகங்கள் எனக்கு சாதகமாம்

மணவாழ்க்கையில் பிரச்சனை இல்லை

அடித்து கூறினான் சோதிடன் 

ஆனால் சோதிடருக்கு தெரியுமா

நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று

பார்த்துக் கொள்ளுவதில்லை என்று?"

 

"எனக்கு கடும் செவ்வாய் தோஷமாம் 

வாழைமரத்திற்கு தாலி கட்டு என்றான் சோதிடன்.

நான் கட்டிவிட்டு, மண்டபம் போனேன்.

மண்டப முகப்பில் வாழை மரங்கள்

என்னை ஏக்கத்துடன் பார்த்தன."

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 04 வாசிக்க அழுத்துங்கள் 

👉Theebam.com: "சோதிடம் பற்றி ஒரு அலசல்" / பகுதி: 04:

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள் 

👉Theebam.com: "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 01

குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?


குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.

* குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.
* குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.
* இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரி 'நியுரோமா' எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.
* குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.

இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர்கள் சொல்லும் ஆலோசனை:-
* உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள்.
* பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலைமுடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்தமானது.
* நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
* 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.
* குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் 'சோல்' ரப்பரில் ஆனது தானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல் தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும்.
* குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களின் லைனிங் செயற்கையான வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல் இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.
* தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.
* குதிகால் செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடியிராமல் அங்கங்கே காற்று புகும்படி திறந்த வெளியாக இருக்க வேண்டும்.
* அதிகநேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
* குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும் அதுவே ஆரோக்கியமானது.

நடக்கும்போது கவனிக்க வேண்டியவை:

* குதிகால் செருப்பணிந்தவர்கள் நடக்கும்போது குதிரை நடக்கும் குளம்பொலி சத்தம்போல் கேட்கும். பொருத்தமான குதிகால் செருப்பணிந்த பெண்கள் நடனம் கூட ஆடலாம். ஆனால் பழக்கமில்லாத சில பெண்கள் குதிகால் செருப்புடன் நடப்பதற்குச் சிரமப்படுவர். இத்தகைய பெண்கள் நடப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும்.
* கைகளை முன்னும் பின்னும் நீட்டியசைத்து உடல் எடையைச் சமநிலை செய்து விட்டு நடந்து பழக வேண்டும்.
* குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்து வைக்க வேண்டும்.
* மாடிப்படியேறும்போது முன்னங்காலும் குதிகாலும் படியில் ஒன்றுபோல் சமமாகப்பதித்து ஏறவேண்டும்.
* மாடிப்படியில் இருந்து கீழிறங்கும்போது காலின் முற்பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.
* குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது.
* அதிகாலையில் குதிகால் செருப்பணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும். இம்மாதிரியான வீக்கம் ஏற்படாமலிருக்க குதிகால் செருப்பணிந்து நடந்தவர்கள் 45 டிகிரி கோணத்தில் காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடநேரம் ஓய்வு எடுத்தல் அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் பிற இடங்களுக்குப் பரவி வீக்கம் குறையும்.
* கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால் குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும்.

* கால்நீட்டி கீழே உட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதியில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு அவற்றை கால் பாதங்களின் முற்பகுதி விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்றவை குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க..



குழந்தைகள் நன்றாக படிக்க, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது.

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாதநிலை ஏற்படுகிறது.

 

கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த  சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.

 

கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுவதும், தகவல்  தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

 

மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது  நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.

 

மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. இதில்  உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை அதிகரிக்கும்.

 

வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக  இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது.

 

பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

படித்ததில் பலன் உடையது