உணவிலிருந்து தவிர்க்க வேண்டிய விஷங்கள்

 

உருளைக்கிழங்கு

பெரும்பாலானோருக்கு பிடித்த உருளைக்கிழங்கு கூட ஆபத்தானவை தான். அதுவும் இந்த உருளைக்கிழங்கின் விஷமானது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும். மேலும் உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதனைத் தவிர்த்த்துக் கொள்ளுங்கள்.  அதில் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருக்கும். அப்போது அதனை உட்கொண்டால், உடலின் சக்தியானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கோமா வரை கொண்டு செல்வதோடு, சில நேரங்களில் திடீரென்று இறப்பிற்கு வழிவகுக்கும்.

தக்காளி

தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுத்தப்பட்ட தக்காளியை சாப்பிடுவது உங்களை நோய்வாய்ப்படுத்தும். அழுகிய  தக்காளி சால்மோனெல்லாவால் ஏற்படும் உணவு விஷம் கொண்டது.

அப்பிள்

அப்பிள் விதைகளில் அமிக்டலின் என்ற தாவர கலவை உள்ளது, இது ஒரு நச்சு விளைவை ஏற்படுத்தும்.  ஒரு விதை அப்படியே இருக்கும்போது அது பாதிப்பில்லாதது, ஆனால் ஒரு விதை மெல்லும்போது அல்லது சேதமடையும் போது, அமிக்டாலின் ஹைட்ரஜன் சயனைடாக மாறுகிறது.. 150 லிருந்து 1000 விதைகளென உடலில் சேரும்போது அப்பிள் வகைகளைப் பொறுத்து அவை ஆபத்தினை அதிகரிக்கிறது.

செர்ரி

செர்ரி பெரும்பாலான மருத்துவர்கள் செர்ரி பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்வார்கள். இருப்பினும் இந்த பழங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் செர்ரிப் பழங்களில் இலை மற்றும் கொட்டைகளில் தான் விஷம் உள்ளது. அதுமட்டுமின்றி,  ப்ளம்ஸ், ஆப்ரிக்காட் மற்றும் பீச் போன்றவற்றை சாப்பிடும் போது, அதன் விதையை வாயில் போட்டு மெல்ல வேண்டாம்.

பாதாம்

பாதாம் ஆபத்தான உணவுப் பொருள் என்று சொன்னால், உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா என்று பலர் கேட்கலாம். ஆனால் உண்மையில் கசப்பாக இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அதில் சையனைடு உள்ளது என்று அர்த்தம். ஆகவே பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, அதனை ஊற வைத்து அல்லது வறுத்து சாப்பிடுவது தான் சிறந்தது. இதனால் அதில் உள்ள விஷம் வெளியேறிவிடும். அத்துடன் அதிக அளவு உட்கொள்வது சுவாசப் பிரச்சினை, நரம்பு முறிவு, மூச்சுத் திணறல் காரணமாக மரணத்திற்கு கூட வழிவகுக்கும்!

காளான்

காளான் மிகவும் பிரபலமான மற்றும் சுவைமிக்க உணவுப் பொருள். இத்தகைய காளானில் பல வகைகள் உள்ளன. அதில் சில காளான்களில் விஷமானது. அதிக அளவில் இயற்கையாகவே நிறைந்துள்ளது. ஆகவே காளான் வாங்கி சாப்பிடும் போது, சரியான காளானை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், புத்தர் போல் உயிரை விட நேரிடும்.

தொகுப்பு:செ.மனுவேந்தன் 

No comments:

Post a Comment