விந்தை உலகில் வினோத விலங்குகள்

         


         அச்சுறுத்தும் மீன்கள்:

 மீன்களிலே சுறா மீன்கள்தான் அனைவரையும் அச்சுறுத்தும் மீன் வகைகளில் முதன்மை வகிக்கின்றன . இந்த மீன்கள் பொதுவாக மனிதர்கள் மற்றும் தினமும் தங்களுக்கு உணவாக்கிக்கொள்ளும்  மீன்களின் இருபிடங்களை எளிதில் கண்டுபிடித்துவிடும் திறமை அதிகம் பெற்றிருக்கின்றனவாம் .

         பலருக்கு இந்த சுறா மீன்கள் எப்படி மனிதர்கள் இருக்கும் இடங்கள் மற்றும் மீன்கள் அதிகமாக இருக்கும் இடங்களை சரியாக அறிந்துகொள்கின்றன என்ற மிகப்பெரிய சந்தேகம் தோன்றலாம் . சொல்கிறேன் உலகத்தில் எந்த ஒரு   மீன் இனத்திற்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த சுறா மீன்களுக்கு இருக்கிறதாம் . அதுதான் இதயத் துடிப்பை உணரும் சிறப்பு . ஆம் நண்பர்களே இந்த சுறா மீன்கள் ஒரு குறிப்பிட்ட தொலைவில் நீந்தும் மனிதர்கள் மற்றும் மீன்களின் இதயத் துடிப்பை உணர்ந்து எளிதில் அந்த இருப்பிடத்தை அடைந்து தங்களுக்குத் தேவையான உணவுகளை தினமும் பிடித்துக் கொள்கின்றனவாம் .

        

பறக்கும் பாம்புகள்:

         கிரிசொபெலியா எனும் இனத்து பாம்புகள் பொதுவாக பறக்கும் பாம்புகள் என அழைக்கப்படுகின்றன. இவை தென்கிழக்கு ஆசியா, மெலனீசியா, இந்தியா, இலங்கை ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவை தமது உடலை பக்கவாட்டாக நீட்சியடையச்செய்வதன் மூலமும் விழா எலும்பைத் தட்டையாக மாற்றுவதன் மூலமும் வழுக்குகின்றன. இவை நூறு மீட்டர் வரை வழுக்கவல்லன. இலங்கை பறக்கும் பாம்பு இவ் வகையைச் சார்ந்ததொன்றாகும்.

 

நீந்தாத மீன் :

 கலாபகோஸ் என்ற தீவில் இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சிகப்பு நிற வாய் தான் இதனுடைய அடையாளம். இதற்கு நீச்சல் தெரியாது. இந்த மீன் நடக்க மட்டுமே செய்யும். கடலின் ஆழத்தில் மட்டுமே இது இருக்கும்.

 

பாண்டா எறும்பு :

 பாண்டாக்கரடி பார்த்திருப்பீர்கள், பாண்டா பூச்சி கேள்விப்பட்டிருக்கிறீர்களா! சாதரண எறும்பை விட சற்று நீளமான பூச்சி இது. சிலியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூச்சி இனத்தின் முதுகில் நிறைய முடிகள் இருக்கும். இதிலிருக்கும் ஜீன்களால் உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் முடி இருப்பதால் இதற்கு பாண்டா பூச்சி என்று பெயர்.

 

வரிகள் இல்லாத வரிக்குதிரை :

 வரிக்குதிரை என்றாலே அதன் உடலில் இருக்கு கருப்பு வெள்ளை நிற வரிகள் தான் நினைவுக்கு வரும். ஆப்ரிகாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விலங்கினம் கால் பகுதியில் மட்டும் வரிக்குதிரை போன்ற வரிகள் இருக்கும். அதன் செயல்பாடுகள் எல்லா ஒட்டகச்சிவிங்கியைப் போல இருக்கும்.

 

கடல் பன்றி :

 இந்த விலங்கினம் கடலின் ஆழத்தில் மட்டுமே இருக்கும். சுமார் கடலிலிருந்து 1000 மீட்டர் ஆழத்தில் இருக்கும். அங்கே வளர்ந்திருக்கும் செடிகளையே இவை உணவாகக் கொள்ளும்.

 

மஞ்சள் முள் :

 ஆப்ரிகாவில் உள்ள மடாகஸ்கரில் இந்த விலங்கு கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளங்கையில் அடங்கிடும் மிகச்சிறிய உருவமான இதனை அதனின் வித்யாசமான ஓசையை வைத்து தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். பாம்பின் ஒலியைப் போலவும் சில பூச்சிகள் கத்துவது போலவும் இவற்றின் ஓசை இருக்கும்.

தொகுப்பு:செ.மனுவேந்தன் 


 

         

No comments:

Post a Comment