"தேர்ந்தெடுக்கும் நிறம்
குணம் காட்டும்.
தேர்ந்தெடுக்கும் நட்போ உனையே
காட்டும்
தேய்ந்துபோகும் காதலும் நட்பு
இன்றேல்
தேயாமல்என்றும் வாழும் நட்பு
ஒன்றே !"
"இருகண்கள் அழுதால்
கைத்துண்டு துடைக்கும்
இருதயம் அழுதால் நட்பு
துடைக்கும்
இன்பமாய் உலகின் அதிபதியாய்
இருப்பினும்
இருளாகும் நண்பன் ஒருவன்
இல்லாவிடில் !"
"இளமை காலத்தில் காதல்
வரும்
இன்பமாக சில வேளை திருமணமாகும்
இளையோர் பலருக்கு நட்பு
மலரும்
இறுக்கமாக பல வேளை உறவாகும்
!"
"உன்முகம் பார்த்து நட்பு
பழகுவதல்ல
உயர்தகுதி பார்த்து நட்பு
பழகுவதல்ல
உதடு பேசும்
பேச்சுக்களால் நீடிப்பதல்ல
உள்ளத்தின் ஆழவார்த்தைகளால் நீடிப்பது !"
"நல்ல நட்பு வளர்பிறை
போன்றது
நன்றாக நாளுக்கு நாள் வளரும்
நல்ல நட்பை என்றும் நாடுவோம்
நல்ல நட்பையே தினம்
சுவாசிப்போம்"
"வீட்டுக்கும் ஊருக்கும்
எல்லை போடலாம்
நாட்டுக்கும் ஆட்சிக்கும் எல்லை
போடலாம்
போட்டிக்கும் விதிக்கும் எல்லை போடலாம்
நட்புக்கும் உறவுக்கும் எல்லை
போடலாமா ?"
"நட்பு என்பது குறிப்பு
போன்றது
காதல் என்பது காசோலை போன்றது
குறிப்பு புத்தகத்தில் தடைகள்
இல்லை
காசோலையில் தடைகள் பல உண்டு
!"
"உணவை போன்றது ஒரு நட்பு
மருந்தினை போன்றது ஒரு நட்பு
நோயை போன்றது ஒரு நட்பு
தெரிந்து எடுங்கள் சரியான நட்பை"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
No comments:
Post a Comment