வயிற்று புண் [அல்சர்- stomach ulcer]
பெரியவர்கள்
முதல் சிறியவர்கள் வரை அவதிப்படும் பிரச்னைகளில் ஒன்று தான் அல்சர் புண். சரியான
நேரத்தில் உணவு உட்கொள்ளாதே இதற்கு காரணமாகும்.
சரியான
நேரத்தில் சாப்பிடாத போது, இரைப்பையில் அமிலம் சுரந்து புண்களை
உண்டாக்குகிறது. இதனால் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். தொடக்கத்திலேயே
கவனிக்கவில்லை என்றால் கடுமையான பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.
இப்பிரச்சனையை
மருந்துகளை உட்கொள்வதை விட மிக எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம்.
தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட்
ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
நெல்லிக்காய்
ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும். தினமும் காலையில்
வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால்
ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்சனை சரியாகும்.
பாக்டீரியா
எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர்
சரியாகும். வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் இதற்கு ஒரு நல்ல தீர்வாகும், குறிப்பாக
அதிகளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
தினமும்
சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்றுப் புண் சரியாகும்.
முட்டைகோஸ்,
பாகற்காய்
மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும்.
நின்று கொண்டு தண்ணீர் அருந்தல்!
அருந்துவதால்
எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நீங்கள் அறிந்தால் கண்டிப்பாக இனி நின்றவாறு
தண்ணீர் பருக மாட்டீர்கள்.
நின்று
கொண்டே தண்ணீர் குடிக்கும் போது, நீர் நேரடியாக வயிற்றில் விழும். இப்படி
வேகமாக விழும் நீரானது உடல் உறுப்புகள் மீது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக
சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை பாதிப்படைய செய்கிறது. மேலும் உடலின் சமநிலையை
பாதிக்கிறது. இதனால் மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் எதிர்காலத்தில் வரக்கூடும்.
அதுமட்டுமின்றி,
செரிமான
சிக்கலை ஏற்படுத்தி, உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் ஏற்படவும் ஒரு
காரணியாக அமைந்து விடுகிறது.
நின்று
கொண்டே தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் இந்த தாக்கங்கள் உடனடியாக நமக்கு தெரியாத
காரணத்தால் நாமும் இதனை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இப்படி இது போன்ற பிரச்சனைகள்
எதிர்காலத்தில் எழுந்தாலும் நின்று கொண்டு அல்லது அண்ணாந்து தண்ணீர் குடிப்பதால்
தான் இந்த பிரச்சனைகள் வந்திருக்கலாம் என்பதை கூட சிந்திக்க மாட்டோம்.
ஆயுர்வேத
முறைப்படி நீரை வாயில் வைத்து மெல்ல மெல்ல விழுங்க வேண்டும் என்கிறார்கள். அவசர
அவசரமாக அருந்துவதையும் தவிர்க்க சொல்கிறார்கள். அண்ணாந்து தண்ணீர் பருகுகையில், நீரானது
நுரையிரலுக்குள் நுழைய வாய்ப்புகள் அதிகம். சிலர் குழந்தைகளை, எச்சில்
பட்டுவிடும் அண்ணாந்து குடி என்பார்கள். சிறுவயது முதலே இப்படி
பழக்கப்படுத்துவார்கள். இந்த முறை நாகரீகமாக பார்க்கப்பட்டாலும் இது ஆரோக்கியமான
முறையாக பார்க்கப்படுவதில்லை.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment