01
மனைவி: ஏங்க! உங்க மண்டையில களிமண்தான் இருக்கு!
கணவன்: ஆமாண்டி! நிச்சயமா! அதனாலதான் உன்னைபோய் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே!
02
மனைவி :“என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த
நாம, இனிமே மூணு
பேரா ஆகப் போறோம்”
கணவன் :“அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை
மாசம் ?”
மனைவி :“அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில்
ஆகப் போறாங்க”
03
சோமு: என்னங்க உங்க வீட்டுல
எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக் கிட்டே இருக்குது?
ராமு : எம் பொண்டாட்டி எம் மேல
ஏதாவது பாத்திரத்த தூக்கி வீசுவா ...எம் மேல பட்டா அவ சிரிப்பா... படாட்டா நான்
சிரிப்பேன் .... ஒரே டமாசுதான் போங்க...
04
கமலா: "உன் கலயாணத்தைப் பத்தி
விவசாய ஆராய்ச்சி மையத்துல
போயி விசாரிச்சியாமே, ஏன்டி?"
விமலா: "கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர் இல்லயா, அதனாலதான்டி."
05
மாப்பிள்ளை வீட்டார் :"என்னங்க இது மணப்பெண்ணுக்கு கை, கழுத்து, நெற்றியிலலாம் பூவாலேயே அலங்காரம் பண்ணியிருக்கீங்க?"
பெண் வீட்டார் :"பொன் வைக்கிற இடத்துல பூ வைக்கச்சொல்லி நீங்கதானே சொன்னீங்க?"
06
வேலு :"உங்க வீட்ல இன்னைக்கு ஒரே சிரிப்புச்
சத்தமாயிருக்கே, ஏன்?"
பாலு :"எங்க வீட்டு டிவி
ரிப்பேர், அதுதான்!"
07
கணவன் :"இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து வேலை செஞ்சேன்"
மனைவி :"அவ்வளவு பிசி ஒர்க்கா?"
கணவன் :"இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும் எழுப்பிவிடலை"
08
வந்தவர்: "வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?"
கடைக்காரர் :"ஒரு பழம் ரெண்டு
ரூபாய்ங்க"
வந்தவர்: "ஒன்னரை ரூபாய்க்கு
கொடுங்களேன்"
கடைக்காரர்: "ஒன்னரை ரூபாய்க்கு தோல்
மட்டும்தான் கிடைக்கும்"
வந்தவர்: "அப்படின்னா ஐம்பது
பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க"
09
கலா: "சுவரில் எழுதாதே'ன்னு இருந்தது. நான் போயி..."
மாலா: "என்ன செய்தே?"
கலா: "சரி எழுதலை'ன்னு எழுதிட்டு வந்திட்டேன்"
10
ஆசிரியை :
"ஒரு ரூபாய்க்கு ஒரு ஆப்பிள், அப்படின்னா பத்து ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள்?"
மாணவன்:
"ஒரு ரூபாய்க்கு எந்த கடையில ஆப்பிள் விற்குதுன்னு சொல்லுங்க, நான் போய் வாங்கி வறேன்"
11
கணவன்:
"என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக்
காசா
கிடக்குது?"
மனைவி:
"நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம்
சேஞ்ச்
வேணும்னு சொன்னீங்க!"
12
திருடன் 1: "ஒரு வீட்டுல
திருடும்போது தூங்கிட்டு இருந்தவர் காலை தெரியாமல் மிதிச்சிட்டேன்"
திருடன் 2: ''திருடன்-னு
அலறியிருப்பாரே?''
திருடன் 1: " 'கால் வலிக்கு
இதமா இருக்கு; ஒரு
அரை மணி
நேரம் மிதிச்சிட்டு அப்புறம் திருடு'ன்னு சொல்லிட்டார்"
13
திருமண
விருந்தில்...
பந்தி
பரிமறுபவர்: "ஏம்ப்பா, நீ போன பந்தியிலயும் சாப்பிட்டியே! இந்த பந்தியில் மறுபடியும்
சாப்பிடறியே?"
சாப்பிடுபவர்:
"ஆமாங்க, உங்களுக்கு ஞாபக சக்தி
அதிகமுங்க. எனக்கு ஜீரண சக்தி அதிகமுங்க"
14 |
விமலா:
"ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு
வரமுடியலடி.
அந்த ஆண்கள் பக்கத்தில்
உட்கர்ந்திருக்கிறாங்கள்ல
அவங்கள்ல
உன் கணவர்
யாருன்னு காட்டேன்"
கலா:
"அந்த மூணாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு வெள்ளை சட்டையை இன்
பண்ணிக்கிட்டு..."
விமலா:
"ஆமாம்"
கலா:
"கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு..."
விமலா:
"ஆமாம்"
கலா:
"நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிட்டு..."
விமலா:
"ஆமாம்"
கலா:
"தலையில் சுருள் முடியோட..."
விமலா:
"ஆமாம்"
கலா:
"கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு..."
விமலா:
"ஆமாம்"
கலா:"ஷூ
போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே..."
விமலா:
"ஆமாம்"
கலா:
"நல்லா நடிகர் அஜீத் கலர்ல..."
விமலா:
"ஆமாம்"
கலா:
"அவருக்கு வலப்பக்கம் உட்கார்ந்திருக்கிறவருதான் என் கணவர்!!!"
15
பாலு: நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!
வேலு: நிஜமாவா, எப்படி?
பாலு: அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய்
ஒளிஞ்சிகிட்டேன்!’
16 |
ஒரு கணவன் ரொம்பத் தாமதமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
மனைவி ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னாள்:
“”ரொம்ப சாரிங்க… உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி வச்சேன். அதை நம்ம நாய் தின்னுட்டுப் போயிட்டுது”
கணவன் நிதானமாகச் சொன்னான்: “”கவலைப்படாதே… வேறு நாய் வாங்கிக்கலாம்”
17 |
அப்பா: படிக்கற வயசுலே உனக்கு எதுக்கடா செல்போன் வாங்கித் தரணும்?
மகன்: சரி, அப்ப நான்
படிக்கலை! செல்போன் வாங்கிக் கொடுங்க!
18
மனைவி:நம்மவீட்டை விக்கிற வரைக்கும் உங்க அம்மாவை உங்க அண்ணன் வீட்டில் இருந்து கொள்ளச் சொல்லுங்க?
கணவன்:வீட்டை விக்கிறதுக்கும் அம்மாவிற்கும் என்ன சம்பந்தம்?
மனைவி:வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே!
தொகுப்பு : செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment