ஸ்வீடனில் இருந்து ஒரு புதிய ஆய்வு-பகலில் இருப்பதை விட இரவில் அதிக இரத்த அழுத்தம் உள்ள வயதான
ஆண்களுக்கு (Alzheimer
disease) அல்சைமர்
நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் என்று கூறுகிறது.
ஆல்சைமர் நோய் எனப்படுவது நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும்- மெதுவாக ஆரம்பித்து நாட்கள் செல்கையில் மோசமான நிலைமைக்கு நகரும் -ஒரு நாட்பட்ட நோயாகும். இது அறிவாற்றல் இழப்பின் அல்லது
மறதிநோயின் மிகப் பொதுவான வடிவம் ஆகும். பொதுவாக
இதன் ஆரம்ப அறிகுறி சமீபத்திய நிகழ்வுகளை மறத்தல் அல்லது குறுகிய கால நினைவு
இழப்பு ஆகும்.
ஆய்வின் தரவுகளை
சேகரிப்பதற்காக சுவீடனில் ஆயிரம் 70 வயது ஆண்களை தெரிவுசெய்து 24 ஆண்டுகள் வரை ஆய்வு செய்த பின்னர் உப்சாலா பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள் உயர் இரத்த அழுத்தம் இதழில் இந்த ஆய்வை வெளியிட்டுள்ளனர்.
““dipping””என்று அழைக்கப்படும் ஒரு செயல்பாட்டில் இரவில் நிகழும்
மிகக் குறைந்த மதிப்புகள் கொண்ட ஆரோக்கியமான நபருக்கு இரத்த அழுத்தம் நாள்
முழுவதும் மாறுபடும். ““dipping”” அதன் பங்கு 10 முதல் 20 சதவீதம்
சாதாரணமாகக் குறைவு எனக் கருதப்படுகிறது. இருப்பினும் சிலரில் இந்த செயல்முறை தலைகீழாக
மாற்றப்படுகிறது. இது
“reverse
dipping”என்று அழைக்கப்படுகிறது. மேலும் அவர்களின் இரவு நேர இரத்த அழுத்தம் பகலில் இருப்பதை
விட அதிகமாக உள்ளது.
“மூளையின் ஆரோக்கியத்திற்கு இரவு ஒரு முக்கியமான காலம்.
எடுத்துக்காட்டாக விலங்குகளில் தூக்கத்தின் போது மூளை கழிவுப்பொருட்களை
வெளியேற்றுகிறது என்பதும் இந்த செயல்பாடு
அசாதாரண இரத்த அழுத்த முறைகளால் சமரசம் செய்யப்படுவதும் முன்பு
நிரூபிக்கப்பட்டுள்ளது ”என்று உப்சாலா பல்கலைக்கழக நரம்பியல் துறையின் இணை பேராசிரியரும்
மூத்த எழுத்தாளருமான கிறிஸ்டியன் பெனடிக்ட் கூறினார். ஆய்வில் "இரவுநேரமானது மனித மூளை
ஆரோக்கியத்திற்கான ஒரு முக்கியமான நேரம்
ஆகையால் “reverse dipping”ஆக இரவில் அதிக
இரத்த அழுத்தம் வயதான ஆண்களில் அதிக முதுமையடையும் அபாயத்துடன் தொடர்புடையதா என்பதை நாங்கள்
ஆராய்ந்தோம்."
சாதாரண டிப்பிங் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது “reverse dipping” ஆன ஆண்களிடையே Dementia (நினைவாற்றல் , சிந்தனை திறன்களை பாதிக்கும் நோய்) நோயினை பெறுவதற்கான நிலை 1.64 மடங்கு அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
“reverse dipping” முக்கியமாக Dementia வின் மிகவும் பொதுவான வடிவமான அல்சைமர் நோயின் அபாயத்தை
அதிகரித்தது" என்று போஸ்ட்டாக்டோரல் சக மற்றும் ஆய்வின் இணை ஆசிரியரான சியாவோ
டான் கூறினார்.
டான் மேலும் கூறுகையில், இந்த ஆய்வு ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது என்றும், பொதுவான முடிவைப் பெறுவதற்கு பெண்களுக்கும் இந்த ஆய்வு மீண்டும் செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.
-Nick
Beare- தமிழாக்கம்:செ
மனுவேந்தன்
No comments:
Post a Comment