01
ரசிகை:அண்ணே
என் குழந்தைக்கு பெயர் வையுங்க ?
விஜய்: என் மனசை தொட்ட பெயர் "ஷோபா" ன்னு வையுமா.
ரசிகை:
இது ஆம்பள புள்ளை சார்
விஜய்: அப்போ நாற்காலி ன்னு வை
02
கருவறையும்
இருட்டு
கல்லறையும்
இருட்டு
நடுவுல
உனக்கு எதுக்கு கரண்ட்டு?
பில்லை
மட்டும் கரெக்டா கட்டு..
இப்படிக்கு
தமிழ்நாடு மின்வாரியம்
03
ஆசிரியன்: எதுக்கு
டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க?
ஆசிரியை: இந்தியாவின்
தேசியப் பறவை எதுன்னு கேட்டா 'கொசு'ங்கிறான் !
04
மூன்று
நண்பர்கள் கோவில் சென்றார்கள்.
சோமு
: கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு
: எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு
: எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு
- ராமு : ?!?!?!?!?!?
05
அப்பா:
மகளே, முன்னாடி
நீ என்னை அப்பானனு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே..
ஏன்
இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற???
மகள்
: அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலங்சுடும் டாடி..
06
ஒருத்தர்:
டாக்டர்.. உங்க சர்ட்பிக்கெட் கொடுங்க..
டாக்டர்
பயந்து போய் : ஏன்??
நம்மாள்
: நான் 1
வீக் ஆபீஸ் லீவு..அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..
டாக்டர்
: !!!
07
வந்தவர்:
ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?
ஹோட்டல்
முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு
கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!
08
கணவன்
:- (மனைவியிடம் ) இன்னிக்கு நீ ஒரு கருப்பு நாய்க்கு சோறு வச்சியா?
மனைவி
:- ஆமாங்க . ஏன் கேட்கிறீங்க ?
கணவன்
:- அதுவா ,
தெரு
ஓரத்தில ஒரு கருப்பு நாய் செத்துபோய் கிடந்தது . அதான் கேட்டேன்
மனைவி
:- ???
09
நண்பன்
1:டேய்
பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா?
நண்பன்
2:நான்
பேஸ்புக்ல இருக்குறதையே பார்த்துட்டு இருக்கியே உனக்கு வேலை இல்லையா?
10
வீட்டுக்காரம்மா:"யாரது, ராத்திரி
2
மணிக்கு ஏழெட்டுப்பேர்வந்துகதவைத்தட்டறாங்க...?"
விருந்தாளியம்மா:"என்வீட்டுக்காரரோடுதூக்கத்துலஎழுந்துநடந்துபோகிறப்ப
'பிரண்ட்ஸ்' ஆனவங்கலாம்...!
கூப்பிடவந்திருக்காங்க...!"
11
இன்ஸ்பெக்டர்:
என்னது... இருபது கான்ஸ்டபிள்கள் சேர்ந்துபோய் வெறும் ஆயிரம்ரூபா பெறுமானமுள்ள கள்ளச்சாராயத்தைத்தான் அழிக்கமுடிஞ்சதா ஏன்...?
கான்ஸ்டபிள்:
இருபதுபேரால்,
அதுக்குமேலேயாசார்
'குடிக்க' முடியும்...?"
12
பாலு:""எங்கவீட்டுல குடியிருக்கிற குடித்தனக்காரருக்கு என்மனைவிதான் தினமும் சமைச்சுப் போடுறா''
பரமு; ""பரவாயில்லையே''
பாலு:""அவரை காலிபண்ணவைக்க இதைவிட்டா வேறவழிதெரியல''
13
காதலன்:""டார்லிங்!
உனக்காக என்னோட உடல், பொருள், ஆவி எல்லாத்தையும் தரநான் தயாரா இருக்கிறேன்''
காதலி:""நீங்க என்ன தர்றது, கல்யாணத்துக்கப்புறம் நானே எடுத்துக்குவேன்''
14
இயக்குனர்:""கதாநாயகி முகத்தை அடிக்கடி க்ளோசப்ல காட்டாதீங்கன்னு சொன்னேன் கேட்டிங்களா?''
புகைப்பட கலைஞர்:""ஏன் சார் என்னாச்சு?''
இயக்குனர்:""பேய்படம்னு சொல்லி குழந்தைகள் வரமாட்டேங்குதே!''
15
டாக்டர்:""இது பண்டிகைக் காலம் கிறதால புது ஆஃபர் போட்டிருக்கோம்.
ஒரு கண் ஆபரேஷன்செஞ்சா இன்னொரு கண் இலவசம்''
16
காதலி:
டியர்! எனக்கு வேறஒருத்தரோட கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருச்சு
காதலன்:
எனக்குத்தெரியும்
காதலி:
எப்படி?
காதலன்:
காலையில குடுகுடுப்பைக்காரன்
"நல்லகாலம் பொறக்குது'ன்னு சொன்னான்!!
17
குப்பை லாரி கிளம்பிவிட்டது அப்போதுதான் என்மனைவி வேகமாகச்சென்றாள், குப்பையைக்கொட்ட.
அந்தடிரைவரிடம் " நான்ரொம்பலேட்டா? என்றுகேட்டாள்.
அவர்சொன்னார்.
"பரவாயில்லை, உள்ளே குதித்துவிடுங்கள்."
18
திருடன்
: (சிறுவனிடம்) தம்பி! உனக்கு மிட்டாய் தருகிறேன். உங்க வீட்ல நகைகளை எங்கே வைப்பாங்க சொல்லு..
சிறுவன்
: அடகுக்கடையிலே!
19
ஜோதிடர்
: உங்க ஜாதகப்படி, இப்பபணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்.
ஒரு மூன்று மாதம் பல்லகடிச்சிக்குங்க…
அப்புறமா உங்களுக்கு கொட்டோகொட்டுன்னு கொட்டும்.
வந்தவர்
: எதுபல்லா?
20
நோயாளி
: என்னடாக்டர்இது, மருந்துசீட்டில்சா-வுக்குமுன், சா-வுக்குபின்அப்படினுபோட்டிருக்கீங்க.
டாக்டர்
: அதுக்குஏன்இப்படிப்பதர்றீங்க! சாப்பாட்டுக்குமுன், சாப்பாட்டுக்குப்பின்அப்படின்னுஎழுதியிருக்கேன்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment