வர்ணத் திரை -இவ்வாரம்..


          

(வழமைக்கு மாறான வித்தியாசமான திரைப்படங்களின் கதையினை நாம் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இன்று இத் திரைப்படக் கதையினை வழங்குகிறோம்.)

Tamil   Cinema : naduvula konjam pakkatha kaanom       

''நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்'' -திரைக்கதை-[2012]

பிரேம்குமாருக்கு (விஜய் சேதுபதி) இரு நாட்களில் தன் காதலியுடன் இரு வீட்டார் அனுமதியுடன் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில்  அவர் தன் நண்பர்களின் அறைக்கு செல்கிறார் அவர்களின் விருப்பப்படி அவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடும் போது கால் தவறி கீழே விழும் அவருக்கு பின் மண்டையில் அடிபட்டு தற்காலிக மறதி ஏற்படுகிறது. அவர் தனக்கு திருமணம் நடைபெற உள்ளது என்பதையும் தன் காதலி தனலட்சுமியையும் (காயத்திரி) மறந்து விடுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் அவருடைய நண்பர்கள் அவருக்கு மீண்டும் நினைவு திரும்ப மருத்துவமனைக்கு கூட்டிச்செல்கிறார்கள். அங்கு மருத்துவர் இவருக்கு எப்போது வேண்டுமானாலும் நினைவு திரும்பி விடும் என்கிறார். பிரேம் குமாரின் திருமணம் இதனால் தடைபடக்கூடாது என்று நினைக்கும் நண்பர்கள் பிரேம் குமாரின் பெற்றோர்களுக்கும் யாருக்கும் அவருடைய வியாதியினை மறைத்து  பிரேமுக்கும் தனலட்சுமிக்கும் திருமணம் நடைபெற மிகவும் சிரமத்தின் மத்தியில்  உதவுகிறார்கள். [காதலியையே யார் என்று தெரியாது என்று கூறும் பிரேம் குமாரை தாலி கட்டிட செய்வதில் அவர்களும் உறவுகளும் படும் அவஸ்தைகள் நகைச்சுவையாக சித்திகரிக்கப்பட்டுள்ளன.] திருமணத்தின்பின் பழைய நிலைக்கு திரும்பும் வேளை நண்பர்களுடன் இருக்கும் பிரேம்குமார் நித்திரையால் எழும்பியவன்போன்று எழுந்து திருமணத்திற்கு நேரம் கடந்துவிட்டதை பார்த்து தன் நண்பர்களோடு கோவிக்கிறான்.அவர்கள் பிரேம்குமாரின் திருமணப் படங்களை கைபேசித் திரையில் அவனுக்குக் காட்டும் போது அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைகிறான்.

குறிப்பு:வழமையான காதல் அலைச்சல்கள், சண்டைகள் வெட்டுக் கொத்துகள், பாடல்கள் இல்லாத வித்தியாசமான ஒரு திரைப்படம்.

 

இவ்வாரம் வெளிவந்த படங்கள்:


‘’கமலி ஃப்ரம் நடுக்காவேரி’’

நடிகர்: ஆனந்தி பயோடேட்டா , இமான் அன்னாச்சி, பிரதாப் போத்தன், அழகப் பெருமாள்.

இயக்குனர்: ராஜசேகர் துரைசாமி

கதையின் கரு:காதலை விட கல்விதான் ஒரு பெண்ணிற்கு பலம், பாதுகாப்பு, பெருமை என்பதை அழுத்தமாகவும் , சாதிக்க நினைத்தால் சாதாரண கிராமத்தில் இருந்து ஐஐடி வரை ஒரு அரசுப்பள்ளி மாணவியால் சென்று சாதிக்க முடியும் என்பதையும் துணிச்சலுடன்  எடுத்துக்காட்டும் படம் [படத்தின் தலைப்புத்தான் ''நடுக்காவேரியிலிருந்து கமலி'' என்றிருந்தால் தலைப்பு எடுப்பாயிருக்கும் என்பது,   ஆங்கில மோகத்தில் அழிந்து ஃப்ரம் (from) என இருப்பது நல்லாயில்லே.]

வெளியான திகதி : 19 பெப். 2021:

மதிப்பெண்:  4/5

 

‘’சக்ரா’’

நடிகர்: விஷால் கிருஷ்ணா, சிரத்தா ஸ்ரீநாத், கே.ஆர்.விஜயா, நீலிமா ராணி, மனோபாலா, ரோபோ சங்கர்

இயக்குனர்: எம் எஸ் ஆனந்தன்

கதையின் கரு: தனிப்பட்ட தகவல்களை பலருக்கும் தெரிவித்தால் வரும் ஆபத்துகளுடன் ,காதலியின் தந்தைக்கு கிடைத்த ''சக்ரா'' விருதினை கொள்ளையடித்தவர்களிடமிருந்து   மீட்டுக் கொடுக்கும் நாயகனின் கதை.பாட்டி கே ஆர் விஜயா போன்றே கதையும் ரொம்ப தள்ளாடுதாம்.

வெளியான திகதி : 19 பெப். 2021

மதிப்பெண்:  2.5/5

 

Tamil   Cinema தொகுப்பு : செ.மனுவேந்தன் 

No comments:

Post a Comment