படம் :'குட்டி ஸ்டோரி'
நடிகர்கள்:விஜய் சேதுபதி, அதிதி பாலன்,கெளதம் மேனன்
அமலா பால், வருண்,சாக்ஷி அகர்வால்,அமிதாஷ் பிரதான்,
மேகா ஆகாஷ், ரோபோ ஷங்கர்
இயக்கம்: வெங்கட் பிரபு
வெளியீடு : 12 பெப்ருவரி 2021
4 குட்டிக் கதைகளின் கரு:
‘எதிர்பாரா
முத்தம்’:ஆணும் பெண்ணும் நண்பர்களாக ஏன் பழக முடியாது என்று
பழகியவர்கள் ,அதுவும் காதல்
தான் என்று முடித்துவிடுகிறார்கள்
‘அவனும் நானும்’:
தன் பெண்மையினை பரிசோதிக்கப் போய் கருவினைச்
சுமந்துவந்த ஒரு அப்பாவிப் பெண் அக்கருவினைப் காப்பாற்றப் போராடும் கதை.
‘லோகம்’: ஒரு வீடியோ
கேம் ஊடாக ஒரு காதல் மலர்வதை அனிமேஷன் படம் மூலம் காட்டியுள்ளார்கள்.
‘ஆடல்-பாடல்’: கணவனின்
கள்ளத்தொடர்பினை தனது கில்லாடித்தனத்தின்
மூலம் சண்டைக்களமாக்கி முடிவினை தமாஷாக்கிய மனைவியின் கதை.
படம்: 'பாரிஸ் ஜெயராஜ்'
நடிகர்கள்: சந்தானம், அனைகா சோட்டி, சஷ்டிகா
ராஜேந்திரன், சந்தோஷ் நாராயணன், சாண்டி மாஸ்டர், ஆர் எஸ் ஷிவாஜி, பிருதிவ் ராஜ், ஜார்ஜ் விஷ்ணு
இயக்கம்: ஜான்சன் கே
கதையின் கரு:காதலும், அதை உடைக்க சதி
செய்யும் காதலியின் தந்தையும் -பல்லாயிரம் முறை அரைத்த மாவு.
வெளியீடு :12 பெப்ருவரி 2021
படம்:நானும் சிங்கள் தான்
நடிகர்கள்: தினேஷ், தீப்தி, மொட்டை
ராஜேந்திரன், மனோபாலா
இயக்கம்: ஆர் கோபி
கதையின் கரு: மற்றவர்கள்
போல் ஒரு காதல் கதையை எடுப்பதாக எண்ணி ,அபத்தமான காட்சிகளும் ,இரட்டை அர்த்தம் உள்ள கொச்சை வசனங்களுடன் உச்சரிக்க தடுமாறும் நாயகனை
வைத்துப் பழகியதுபோல் ஒரு படம்
வெளியீடு :12 பெப்ருவரி 2021
படம்: C/O
காதல்
நடிகர்கள்: தீபன்-சோனியா
கிரி, வெற்றி-மும்தாஸ்
சர்கார், கார்த்திக்
ரத்தினம்-ஆர்யா பாலக், மாஸ்டர்
நிஷ்னேஷ்-பேபி ஸ்வேதா
இயக்கம்: ஹேமம்பர் ஜஸ்டி
கதையின் கரு:நான்கு
காதல்கள்.. நான்கிற்கும் நான்குவிதமான பிரச்சனைகள்.. அப்படி என்ன பிரச்சனைகள், இதில் எந்த காதல்
கைகூடியது என்பதுதான் இந்தப்படத்தின் கதை.
வெளியீடு :12 பெப்ருவரி 2021
படம்: ‘ஏலே’
நடிகர்கள்:சமுத்திரக்கனி, கே. மணிகண்டன், இலங்கை மதுமதி
இயக்கம்:ஹலீதா ஷமீம்
கதையின் கரு:தந்தை, மகன் உறவை
மையப்படுத்தி ,நகைச்சுவை கலந்த
கதை.
வெளியீடு :12 பெப்ருவரி 2021
படம்:ஆட்கள் தேவை
நடிகர்கள்: சக்தி சிவன், மைம் கோபி, ஜீவா
இயக்கம்: சக்தி சிவன்
கதையின் கரு:பெண்களை கடத்தி, போதை மருந்தை
கொடுத்து பாலியல் கொடுமைகள் செய்யும் கும்பலிடம் தனது காதலியை மீட்டெ டுக்கும் [ ஏற்கனவே பலமுறை வந்த] கதையினை மையமாகக் கொண்டது.
வெளியீடு :5பெப்ருவரி 2021
No comments:
Post a Comment