சிவவாக்கியம்-131
சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் செய்வேன்
மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே!!
சிவவாக்கியம்-131
சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் செய்வேன்
மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே!!
படம் :'குட்டி ஸ்டோரி'
நடிகர்கள்:விஜய் சேதுபதி, அதிதி பாலன்,கெளதம் மேனன்
அமலா பால், வருண்,சாக்ஷி அகர்வால்,அமிதாஷ் பிரதான்,
மேகா ஆகாஷ், ரோபோ ஷங்கர்
இயக்கம்: வெங்கட் பிரபு
வெளியீடு : 12 பெப்ருவரி 2021
4 குட்டிக் கதைகளின் கரு:
சுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள், பழக்கங்கள், மற்றவரிடம் அணுகும் முறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் என்று பல அதனுள் அடங்கும். இதில் முக்கியமான ஒன்று, உங்கள் குறிக்கோளை நீங்கள் நிர்ணயிப்பதும், உங்கள் நேரத்தை சரியான விதத்தில் திட்டமிடுவதும் தான்.
Death & Its Beliefs of Tamils:
"மதமும் மரணமும்" [கிறிஸ்தவம்]’’
மரணத்தில்
இருந்து எவருமே தப்பமுடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு
பதிலாக நல்ல மாற்று வழியாக மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கையை
கொடுத்துள்ளது. மொழியியலில் எல்லாச் சொற்களுக்கும் எதிர் சொற்கள் இருக்கின்றன.
இரவு - பகல்,
காலை
- மாலை, இன்று
- நாளை
... இது
போன்று 'இம்மை' எனும்
சொல்லுக்கு எதிர்ப்பதம் இந்த 'மறுமை' என்பதாகும். பொதுவாக, இவ்வுலகில்
வாழும் எந்த ஒரு மனிதனாக இருந்தாலும், அவன்
இறைவனால் வழங்கப்பட்ட நற்போதனைகளின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்து கொண்டால், அவனுக்கு வெகுமதியாக சொர்க்கமோ, அப்படி
இல்லாது, தனது
உடல் மற்றும் மனோ [மனதில் எழும்] இச்சையை பின்பற்றி கெடுதியின் பக்கம் செல்வானாயின், அதற்கு
தண்டனையாக நரகமோ, இறப்பிற்கு பின்னுள்ள வாழ்வில், அதாவது
மறுமையில் இறைவனால் வழங்கப்படும் என்பதே சமயங்களின் கோட்பாடாகும். இதன் மூலம்
மக்களிடம்,
பொறுப்புணர்வு, நேர்மை
நற்பண்பு, உளத்தூய்மை, பொறுமை, மனநிறைவு
போன்றவற்றை ஏற்படுத்த சமயம் முயல்கிறது. உதாரணமாக, தன்
செயல்கள் குறித்து மறுமையில் விசாரிக்கப்படும் எனும் உணர்வினால் உலகச்
செயற்பாடுகள் அனைத்தையும் பொறுப்புணர்வுடன் நேர்மையாக நிறைவேற்றவும், நன்னடத்தையை
மேற்கொள்ளவும் இது தூண்டுகிறது எனலாம். அவ்வாறே அனைத்துச் சிரமங்களையும்
இழப்புகளையும் தாங்கிக்கொள்ளும் பொறுமையையும் நிலைகுலையாத பண்பையும் இந்த
நம்பிக்கை ஏற்படுத்துகிறது.
மரணமும்
சமயமும் இயற்கையாகவே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. நாம் இறந்த பின் ஏதாவது ஒன்று
எமக்காக காத்திருக்கிறது என்றால், அண்டம் முழுவதையும் படைத்துக் காக்கும், எல்லாச்
சக்திகளும் பொருந்திய, உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து
நிற்கும், இயற்கை
முறைக்குள் அடங்காத, ஒருவர், அதாவது சமயம் போதிக்கும் கடவுள்
மாதிரியான ஒருவர் [supernatural being like a god] அதில்
ஈடுபடவேண்டும். ஆகவே நாம் சமய விரிவுரையை
/ பாடத்தை [religious
texts] கவனமாக, முழுமையாக, மரணத்தை
பற்றிய, மனிதனின்
நம்பிக்கை தகவல்களை அறிய கட்டாயம் அலச வேண்டும்.
3000-4000
ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்கள் ஒருவித இயற்கை வழிபாட்டையே
பின்பற்றின போதிலும், அதன் பின் பெருங் கற்காலத்தில் [மெகாலிதிக்
காலம் / megalithic
period] தாய் தெய்வ வழிபாட்டுடன், கல்லில்
கடவுளுக்கு புற உருவங்கொடுத்து, இறந்தவர்களின் மற்றும் மூதையார்கள் வழிபாட்டு
மரபுகளுக்கு அதி முக்கியம் கொடுத்த
போதிலும் [attached
great importance to the cult of the dead and ancestors], மெகாலிதிக்
கற்காலத்துக்கு பின்னான சங்க காலத்தில், சேயோன், மாயோன், கொற்றவை, ஐயனார்
போன்ற குலமரபு தெய்வங்கள் [tribal gods] இருந்த போதிலும், அதன்
பின் சிவாவை முழுமுதற் கடவுளாக ஏற்ற சைவர்களாக, பக்தி காலம் வரை தொடர்ந்தார்கள்.
அதன் பின் உலக செல்வாக்கினாலும் மற்றும்
வலுக்கட்டாயமான மத மாற்றங்களாலும் சில தமிழர்கள் இஸ்லாமிய, கிருஸ்துவ
மதங்களுக்கு மாறினார்கள். இப்பொழுது 80% இற்கு கூடியவர்கள் இன்னும்
சைவத்திலும் 20%
யிலும் குறைவானவர்கள் மற்ற மதங்களிலும் பொதுவாக காணப்படுகிறார்கள். உலகளாவிய
ரீதியில், உலகம்
முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே
ஆகும். உலகில் 70
மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9
மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக்
கணக்கிடப்பட்டுள்ளது. சங்க காலத்தின் இறுதி பகுதியில் அல்லது அதற்குப் பின் சைவ, வைஷ்ணவ
சமயங்களும் பிராமண இந்து சமயத்துக்குள் உள்வாங்கப்பட்டது. அதனால் சைவ சமயம் இந்து
மதத்திற்குள் ஒரு பிரிவாக அல்லது ஒரு கலப்பாக காணப்படுகிறது.
ஆகவே
இன்று பல சமயங்களின் வாக்கியங்கள் அல்லது கருத்துக்கள் [பாடங்கள் / texts] எம்மிடையில்
இருக்கின்றன. அங்கு காணப்படும் அனைத்து கொள்கைகளும், மதங்களும்
மரணத்தை ஏற்றுக் கொண்டாலும், அவை எல்லாம் மரணத்தைப் பற்றி ஒரே மாதிரி
சொல்ல வில்லை. மரணத்தைப்பற்றி பல அபிப்பிராயம் அங்கு நிலவுகிறது. மரணத்திற்குப்
பின் உள்ள நிலை சம்பந்தமாக மாறுபட்ட பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன. ஆகவே
எப்படி எங்களுக்கு தெரியும், எந்த நூல், எம்மை
சரியாக, முறையாக
அறிவுபூர்வமாக வழிகாட்டும் என்று ?
கிறிஸ்தவ
மதம் மறுபிறப்பு என்று குறிப்பாகச் சொல்லா விட்டாலும், ஒருவரின்
கடவுள் நம்பிக்கை, கடவுள் நம்பிக்கையின்மை என்பவற்றை பொறுத்தும், அவரின்
இவ்வுலக நடத்தையை பொருத்தும், அவரின் மறுமை சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா
என்பது தீர்மானிக்கப்படும் என உறுதிபடச் சொல்கிறது. அதாவது கிருஸ்துவர்கள் ஒரு
மறுமை இருக்கிறது என்பதை நம்புகிறார்கள். உடம்பு இறந்து அது எரிக்கப்பட்டாலும்
அல்லது புதைக்கப்பட்டாலும், தங்களது
தனித் தன்மை வாய்ந்த ஆன்மா [unique soul / உயிர்] தொடர்ந்து வாழ்கிறது
என்றும், அது
கடவுளினால் புது வாழ்விற்கு உயிரோடு எழுப்பப்படுவர் [raised] எனவும்
நம்புகின்றனர். சிலுவையில் அறையப்பட்டு [crucifixion] மூன்று
நாட்களின் பின்,
இயேசு
இறப்பில் இருந்து எழும்பியவர் என்ற நம்பிக்கை அல்லது புராணம், எல்லா
கிறிஸ்தவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. அதாவது இயேசுவின் போதனையை
பின்பற்றுவதுடன் அவரை இறைவனாகவும் இரட்சகராகவும் [their Lord and Saviour] ஏற்றுக்கொள்ளும்
பட்சத்தில்,
இந்த
புதிய உயிர்த்தெழுதல் [resurrection] தமக்கும் காத்திருக்கிறது என்று
நம்புகிறார்கள்.
இயேசு
அவளை நோக்கி: "நானே
உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன்
மரித்தாலும் பிழைப்பான்;"
என்று
யோவான் 11:25-26
இலும்,
"தம்
ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு
அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்"
என்று
யோவான் 3:16
இலும் கூறப்பட்டுள்ளது. தேவனை நம்புகிறவன் எவனோ, கர்த்தரிடத்தில்
விசுவாசம் காட்டுபவன் எவனோ, தேவகுமரான ஏசுவை தனது ரச்சகனாக
ஏற்றுக்கொண்டவன் எவனோ, அவனுக்கே பரோலோகம் ராஜ்யம் கிடைக்கும்
மற்றவர்கள் நரகத்தின் அக்னி மலையில் தள்ளப்படுவார்கள் என்றும் பைபிள் பயமுறுத்துகிறது.
எனவே, பல கிறிஸ்தவர்கள் தாம் இறந்த பிறகு, ஆண்டவனுக்கு முன்னால் தாம் இருத்தப்பட்டு, அங்கே வாழ்நாளில் அவர்கள் செய்த அல்லது செய்யத் தவறிய செயல்களுக்காக தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்புகிறார்கள். இந்தப் பயம் தான் ஒரு ஒழுங்கு முறையில் அவர்களை வழிபாட்டில் ஈடுபட வைக்கிறது மற்றும் அவர்களை ஒரு கட்டுப் பாட்டிலும் வைக்க உதவுகிறது. சில கிறிஸ்தவர்கள், தாம் இறக்கும் போது தீர்ப்பு வழங்குதல் நடக்கும் என்றும், மேலும் சிலர், காலத்தின் முடிவில் ஒரு தீர்ப்பு நாள் [Day of Judgement] இருக்கும் என்றும், அங்கு எல்லோருக்கும் ஒரே நேரத்தில் தீர்ப்பு வழங்குதல் நடக்கும் என்றும் நம்புகிறார்கள். கடவுள் மனிதர்களுக்கு சுதந்திரமான விருப்பத்தை அளித்துள்ளதால், கடவுளை நிராகரிக்க அங்கு மக்களுக்கு ஒரு வாய்ப்பு உண்டு என்றாலும், தந்திர உபாயமாக [உத்தியாக] புகுத்தப்பட்ட நரகத்தின் [Hell] மேல் உள்ள பயத்தின் காரணமாக, அதை தடுக்கிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இறந்த பிறகு ஆத்மாவைப் புனிதப்படுத்தும் இடம் ஒன்று [Purgatory] மேலே உள்ளதாக நம்புகிறார்கள். பரலோகத்திற்கு போகும் இறந்தவர்கள், தாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்கு சுத்திகரிப்பு தேவைப்பட்டால், முதலில் அங்கு செல்லவேண்டும் என்று நம்புகிறார்கள்.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி:04
/ "மதமும் மரணமும்"
[இஸ்லாம்] தொடரும்
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 👉Theebam.com: [பகுதி:01] இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:-:
இன்று
ஒரு திரையில் பார்ப்பது நம் அன்றாட வாழ்க்கையின் வழக்கமான பகுதியாக மாறிவிட்டது.
இது ஒரு தொலைபேசி, டேப்லெட் அல்லது கணினி என பல்வேறு பாவனையில்
இருப்பதால் , - மேலும் கொரோன வைரஸ்
தொற்றுநோய்களின்காலத்தில் இன்று நம் குழந்தைகள் ஆன்லைன் பள்ளியில் தங்கள்
நாட்களைக் கடக்கும்போதும் , வீட்டிலிருந்து வேலை செய்வதின்போதும் நாங்கள்
முன்பை விட தொழில்நுட்பத்தை பல்வேறு விடயங்களிலும் நம்பியிருக்கிறோம். இந்த
நடவடிக்கைகள் வைரஸின் பரவலைக் குறைப்பதில் அடிப்படையில் நம்மை ஓரளவு பாதுகாப்பாக
வைத்திருக்கின்றன. அதேவேளையில் கண் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பு என்பது எதிர்
காலத்தில் மோசமடையும் என்பது சிந்திக்கவேண்டிய ஒன்று.
சோர்வுற்ற கண்கள்
அதிகப்படியான
திரைப் பாவனை நேரத்தினால் பொதுவான
அறிகுறிகளில் ஒன்று காட்சி சோர்வு. என் கிளினிக்கில், COVID-19
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, கண் கஷ்டம் பற்றிய பல புகார்களை நான்
கவனித்தேன்,
நோயாளிகள்
சோர்வடைந்த கண்கள், “கண்ணில் கூழை மூழ்கும் உணர்வு,” எரியும்
உணர்வுகள் மற்றும் தலைவலி ஆகியவற்றை கொண்டிருந்தனர்.. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
ஒரு
சாதாரண சிமிட்டும் வீதம் நிமிடத்திற்கு 12 முதல் 15
ஒளிரும் என கணக்கிடப் பட்டுள்ளது.. இருப்பினும், வீடியோ
கேம்கள் அல்லது கணினி வேலைகள் போன்ற செயல்பாட்டுக்கு அருகிலுள்ள பணிகளில் நாம்
கவனம் செலுத்தும்போது, எங்கள் சிமிட்டும் வீதம் கணிசமாகக்
குறைகிறது. இது கண்ணுக்கு கண்ணீர் விநியோகத்தை வழங்குவதில் தடங்கல் செய்யலாம் மற்றும் எரிச்சல், சிவத்தல், எரியும்
உணர்வு, உங்கள்
கண்ணில் ஏதோ இருக்கிறது போன்ற உணர்வு
போன்ற உலர் கண் அறிகுறிகளை ஏற்படுத்தும்.
இந்த
செயல்பாட்டுக்கு திரைக்கு அருகிலுள்ள பணிகள் குழந்தைகளிடையே (myopia) கண்ணில்
கிட்டப் பார்வையில் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன - என்பதை பல ஆராய்ச்சி ஆய்வுகளிலிருந்து நாம்
ஏற்கனவே அறிவோம். திரை நேரத்தைப் அதிகம் பயன்படுத்துவதன் மூலம், அதிகமான
மயோபியா நிகழ்வுகளையும், கண்ணாடிகளுக்களுடன் மருந்துகளையும் நாம்
சந்திக்க வேண்டி வரலாம் என்ற கவலை
அதிகரித்து வருகிறது.
கண் சுகாதாரம்
எங்கள்
கண்கள் நீண்ட காலத்திற்கு திரைகளில் கவனம் செலுத்த வடிவமைக்கப்படவில்லை. ஆனால் கண்
பாதிப்பினைத் தடுக்கவும், கண்
ஆரோக்கியத்தை பராமரிக்கவும் வழிகள் உள்ளன. இருப்பினும், இது
எளிதான காரியமாக இருக்காது. இன்னும், உங்கள் கண்களுக்கு கனிவாக
இருக்க வழிகள் உள்ளன.
20/20/20 விதி
20/20/20
விதி என்னவென்றால், ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு கணினி
அல்லது தொலைபேசியைப் பார்த்தால், 20 விநாடி இடைவெளி எடுத்து, உங்கள்
பார்வையை 20
அடி தூரத்தில் எறிந்து, சில முறை சிமிட்டுங்கள். ஒவ்வொரு 20
நிமிடங்களுக்கும் உங்கள் திரைகளில் இருந்து கவனத்தை மாற்றுவது மற்றும் தொலைதூர
பொருள்களைப் பார்ப்பது கண்கள் ஓய்வெடுக்க உதவுகிறது. வறண்ட ஒளிரும் பார்வைத்
வீச்சினை நிரப்ப உதவுகிறது, மற்றும் வறட்சியைத் தடுக்கிறது. சில
பாதுகாப்பற்ற செயற்கை கண்ணீரைப் பயன்படுத்துவது கண்பார்வை வீச்சுக்குத் துணைபுரியும், மேலும்
கண்ணீர் பட உறுதிப்பாட்டிற்கும் உதவும்.
ஒளி மற்றும் தோரணை
கண்
திரிபு மற்றும் கழுத்து வலியைத் தடுக்க கணினிகளுடன் பணிபுரியும் போது ஒரு நல்ல
வேலை தோரணை மற்றும் விளக்குகளை பராமரிப்பது முக்கியம். கணினி திரையில் இருந்து ஒரு
கையின் நீள தூரத்தை (தோராயமாக 25 அங்குலங்கள்) உங்கள் மானிட்டருடன் கண்
மட்டத்தில் அல்லது சற்று கீழே பராமரிக்க முயற்சிக்கவும். அறையில் போதுமான
விளக்குகள் இருப்பதை உறுதிசெய்து, அறையில் சுற்றுப்புற விளக்குகளுடன்
பொருந்தக்கூடியதாக உங்கள் டிஜிட்டல்
சாதனங்களின் பிரகாசத்தை சரிசெய்யவும்.
ஒரு நல்ல உதவிக்குறிப்பு: ஒரு நல்ல
தூக்கத்தினை உங்களுக்கு உறுதிப்படுத்த, படுக்கைக்கு
30
நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதைத்
தவிர்த்துக் கொள்ளுங்கள்..
குழந்தைகள் பள்ளிப்பாடம் முடிந்தபின், குறைந்த அளவு திரை நேரத்தை அவர்கள் கொண்டிருக்க வேண்டும், மேலும் டிஜிட்டல் சாதனங்களிலிருந்து ஓய்வு பெற வெளிப்புற செயல்பாடுகளை இணைக்க வேண்டும். வெளியில் நேரத்தை செலவிடுவதும், திரையில் குறைந்த நேரமும் செலவழிப்பது கண் பாதிப்பினைக் குறைக்க உதவும், மேலும் அவை கிட்டப் பார்வை நோயின் நெருங்குதலை மெதுவாக்கும்.
ஆங்கில மொழிமூலம் DR.மண்வீன் பேடி [கண் வைத்தியர்-கனடா]தமிழ் மொழிபெயர்ப்பு-THEEBAM
நீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும், விரைவாகவும் கொண்டு சேர்ப்பதில் ரயில்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த நிலையில், ஒரே நேரத்தில் அதிக பயணிகள் செல்வதற்கு வசதியான ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்வதற்காக ரயில்களில் பயன்படுத்தப்படும்
நீராவி எஞ்சின்கள் மூலமாக ரயில்கள் இயக்கப்பட்ட காலம் மலையேறிவிட்டது. வெண்புகையை தள்ளிக் கொண்டு பயணிகளை கொண்டு சேர்த்துக் கொண்டிருந்த நீராவி ரயில் எஞ்சின்கள் போக்குவரத்தில் புதிய அத்தியாயம் படைத்தன.
இந்த நிலையில், ஒரு நீராவி ரயில் எஞ்சினை 45 நிமிடங்கள் இயக்குவதற்கு அரை டன் நிலக்கரி தேவைப்படுமாம். நிலக்கரியை ரயில் எஞ்சின் உலையில் எடுத்து எடுத்து போடுவதற்காக கூடுதல் பணியாளர்களும் தேவைப்பட்டனர்.
தற்போது டீசல் எஞ்சின்களும், மின்சார ரயில் எஞ்சின்களும் பயன்படுத்தப்படுகின்றன. பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான டீசல் எஞ்சின்கள் டீசல்- எலக்ட்ரிக் என்ற முறையில்தான் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. அதாவது, டீசல் ரயில் எஞ்சின்களில் உண்மையிலேயை ரயிலை இயக்குவது மின் மோட்டார்கள்தான்.
ஆம், டீசல் எஞ்சின் ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அவை மின் மோட்டார்கள் மூலமாக சக்கரங்களை இயக்குகின்றன. எனவே, இவற்றை டீசல்- எலக்ட்ரிக் எஞ்சின் என்று குறிப்பிடுகின்றன. அதாவது, சொந்தமாக மின் உற்பத்தி நிலையத்தின் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்து இயங்கும் திறன் பெற்றவை.
டீசல் எஞ்சின்களின் சக்தி வெளிப்படுத்தும் திறனைவிட நேரடியாக மின்சாரத்தில் இயங்கும் ரயில் எஞ்சின்களின் சக்தியை வெளிப்படுத்தும் திறன் மிக அதிகம். எனவே, அதிவேக ரயில்களில் மின்சார ரயில் எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உலகின் மிகப்பெரிய நீராவி ரயில் எஞ்சின் பிக் பாய் 4014 என்பதே. 345 டன் எடை கொண்ட இந்த ரயில் எஞ்சின் அதிகபட்சமாக 6,000 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும். உலகின் மிகவும் சக்திவாய்ந்த ரயில் எஞ்சின் ரஷ்யாவிடம் உள்ளது. அந்த மின்சார ரயில் எஞ்சின் அதிகபட்சமாக 18,000 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும்.
பொதுவாக ரயில் எஞ்சின்கள் மிக அதிக எடை கொண்டதாக தயாரிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம், தண்டவாளங்களில் சக்கரங்கள் வழுக்காமல் பெட்டிகளை இழுத்துச் செல்வதற்காகவே இவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன.
அதேபோன்று, ரயில் எஞ்சின்கள் அதிகபட்சமான வேகத்தில் திறன் கொண்டவையாக இருந்தாலும், தண்டவாளத்தின் தன்மையை பொறுத்து குறிப்பிட்ட வேகத்திற்கு மிகாமல் இயக்கப்படுகின்றன. மேலும், அதிவேகத்தில் ரயில் எஞ்சின்களை கட்டுப்படுத்துவதும் சிரமம் என்பதால் இடத்தை பொறுத்தும், தண்டவாளத்தின் உறுதித்தன்மையை பொறுத்தும் ரயில் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது.
மலைப்பாங்கான
இடங்கள், சரிவான
நில அமைப்பு கொண்ட பகுதிகள், அதிக பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில்களை
முன்னால் ஒரு எஞ்சினும், பின்னால் இருந்து உந்தித் தள்ளுவதற்கு
மற்றொரு எஞ்சினும் பயன்படுத்தப்படும்.
Saravana Rajan
ஆரம்பம் : ஐப்பசி ,2010
நோக்கம் :இணைந்த வளர்ச்சி
தேடல் : வளரும் வாசகர்கள்
போடல் : பயனுள்ள தகவல்கள்
நாடல்: நல்லதோர் சமுதாயம்
ஆக்குவோர்:
தில்லை விநாயக லிங்கம்[u.k]
செல்வதுரை சந்திரகாசன்[aus.]
செல்லத்துரை மனுவேந்தன்[can.]
காலையடி அகிலன் [can.]
அகிலா, பரந்தாமன்[S.L]
தொடர்பு:
s.manuventhan@hotmail.com