சிரிக்கச் சிலநிமிடம்

01.

கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.

மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணுமே?

02.

கதாசிரியர்:படத்தின் முடிவில் தற்கொலை செய்து கொள்கிறார்...

தயாரிப்பாளர்:யார்..வில்லனா? கதாநாயகனா?..

கதாசிரியர்:...தயாரிப்பாளர்.

தயாரிப்பாளர்:..!!

03.

அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?"

மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்"

அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா"

மகன்: "சரிடா மச்சான், கையெழுத்து போடு"

04.

மாணவன்: சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,

பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,

மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,

நீங்க ஹெட்மாஸ்டர் தானே

ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…

05.

கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்!

மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..

கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!

06.

ஒருவன்:"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!"

மற்றவன்:"பெண் அவ்வளவு அழகா?" 

ஒருவன்: "இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"

07.

காதலன்: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிப் பொய் விடலாம்...

காதலி : எனக்கு தனியா வர பயமா இருக்கு....

காதலன்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா...

காதலி: ?!?....

08.

டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக் குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்"

நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்"

09.

நண்பர் - 1: தொட்டதக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுகுரா...

நண்பர் - 2: அப்படி நீ என்னத்த தொட்ட?

நண்பர் - 1: அவளோட தங்கச்சியைத்தான்....

நண்பர் - 2: ?!?..............

10.

மாணவி: எக்ஸாம் டைம்'ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்...


மாணவன் : இவ்வளவு தானா? நாங்க புத்தகத்தையே தொட மாட்டோம்.

11.

கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால், ஒரு நாள் மிருகமா மாறப் போறேன். ஜாக்கிரதை.

மனைவி: நான் பூனையைப்  பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன் பாருங்கோ!

12.

போலீஸ்: "அந்தத் திருடனைப் பிடிக்க முடியாதுன்னு எப்படிச் சொல்றீங்க?”

உதவிப் போலீஸ்:"அவனோட செல் நெம்பர்ல ட்ரை பண்ணினேன்.not reachableனு வந்தது சார்…!”

13.

பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,நான் வாய் பேச முடியாத ஊமை."

வீட்டுக்காரம்மா: " பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...எனக்கு காது கேட்காது."

14.

திலகன்: "தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?"

அழகன்:"மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!"

15.

தாதி01: டாக்டரும் , பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன் ?

தாதி02:ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம் !.

16.

வேலு:"இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து

வேலை செஞ்சேன்"

பாலு:"அவ்வளவு பிசி ஒர்க்கா?"

வேலு:"இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும்

எழுப்பிவிடலை"

17.

கோவில் திருவிழாவில்,

நபர் : மேடம் ஒரு உதவி.என்னுடைய மனைவியை ரொம்ப நேரமாத் தேடிக்கிட்டுயிருக்கேன். என்கூட கொஞ்ச நேரம் நின்று பேசிக்கிட்டு இருக்க முடியுமா?

பெண் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

நபர் : நான் வேறு பெண்கள்கிட்ட பேசினாலே என் மனைவி எங்கயிருந்தாலும் ஓடி வந்துடுவா.

18.

"அம்மா.. அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்?"

"ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்.. அதுதான்.."

19.

கோபிநாத்  :எனக்கு இப்ப 80 வயதாகிது. இதுவரையில நான் எந்த  டொக்ரரிட்டை  போனதே கிடையாது.

கோபு: நீங்க ஆரோக்கியமா இருக்கிறதப் பார்க்கும்போதே தெரியுது சார்!

20.

கமலா: நேற்று சொன்ன ஒரே ஜோக் கினை உன் மாமியாரிட்டை இன்றைக்கும்  திரும்ப ஏன்  கூறினாய்?

விமலா:நேற்று ஜோக் இனைச் சொன்னபோது ''ஐயோ போதும்,போதும், சிரிச்சு,சிரிச்சு பாதி உயிர் போச்சு என்று சொன்னாங்க. அதுதான் இரண்டாம் முறையும் சொல்லி மீதி உயிரும் போகாதோ என்று பார்த்தன்.

தொகுப்பு :செ.மனுவேந்தன் 


0 comments:

Post a Comment