இவ்வாரம் வர்ண த் திரைக்காக .....

 


📽பின்னணி பாடகர்களில் மிக அதிக சம்பளம் வாங்குபவர், அமெரிக்காவில் வசிக்கும் சித்ஸ்ரீராம். அங்கிருந்தபடியே தமிழ் படங்களில் பாடி  ஒரு பாடலுக்கு இந்திய ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறார்.இப்போது இவர், இ.வி.கணேஷ்பாபு தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘கட்டில்’ படத்துக்காக, “கோவிலிலே...” என்று பாடலை பாடியிருக்கிறார்.  பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

📽11 மணி நேரத்தில் தயாரானது என்ற சாதனையுடன் கணவனை அவமதிக்கும் மனைவி கதையில்   ''தப்பா யோசிக்காதீங்க'' படம்- நடிகர்: பி.சுந்தரபாண்டியராஜா நடிகை: ஜோதிசா, சனிலா டைரக்ஷன்: சுல்தான்ஸ் இசை : ஸ்டெர்லின் நித்யா ஒளிப்பதிவு : எஸ்.ஆர்.வெற்றி கூட்டணியில் வெளிவந்திருக்கிறது.

📽ஆவிகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் 2 பெண்களும், அவர்களின் மூன்று நண்பர்களும் கதையுடன்   "கொம்பு" படம் நடிகர்: ஜீவா நடிகை: திஷா மற்றும் பாண்டியராஜன், சுவாமிநாதன்ஆகியோருடன்  பாண்டே டைரக்ஷன்: E. இப்ராஹிம் இசை : தேவ் குரு ஒளிப்பதிவு : சுதீப் கேமரா கூட்டணியில் வெளிவருகிறது.

📽கருப்பங்காட்டு வலசை நாகரிக கிராமமாக மாற்றும் முயற்சியில் நடுவில்   4 பேரின் மரணத்தின் மர்மத்தினையும் சந்திக்கும் நாயகியாக  -நீலிமா ராணி  நடிப்பில் வெளிவருவது ''கருப்பங்காட்டு வலசு''

📽சின்னத்திரை’யில் முத்திரை பதித்து வரும் நடிகர்களில் விக்னேசும் ஒருவர்.  கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய திரைப் படத்தில், அவருக்கு சித்தப்பா வேடத்தில் விக்னேஷ் நடிக்கிறார்.

📽1998-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற காதலா காதலா படத்தில் கமல்ஹாசனும், பிரபுதேவாவும் சேர்ந்து நடித்து இருந்தனர். 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிக்கும்  ‘விக்ரம்’ பெயரில் தயாராகும் படத்தில்  பிரபுதேவாவும் இணைந்து  நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

📽தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மருத்துவ வசதி வேண்டும் என்று போராடுகிற ஒரு பெண்ணை பற்றிய கதை, வசந்தம் வந்தது’ என்ற பெயரில் தயாராகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில்   கதாநாயகியாக கிருஷ்ணா கவுதம் நடிக்கிறார். இவர், ராம்கோபால் வர்மாவின் ‘12 ஓ கிளாக்’ படத்தில் நடித்தவர்.

📽பிரபல வில்லன் நடிகர் நர்சிங் யாதவ் மரணம். இவர் தமிழில் ரஜினிகாந்தின் பாட்ஷா, விஜய்யுடன் குருவி, விக்ரமின் ராஜபாட்டை, விஷாலுடன் பூஜை, சக்தியின் ஆட்ட நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அனைத்து மொழிகளிலும் 300 படங்களில் நடித்துள்ளார்.

📽தமிழ் பட உலகின் பைனான்சியரும், வேதாளம், பாகுபலி, அரண்மனை, மாயா ஆகிய படங் களின் வினியோகஸ்தரும், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் தயாரிப்பாளருமான ரமேஷ் பி.பிள்ளை, அடுத்து மாறுபட்ட கதையம்சங் களுடன் 5 புதிய படங்களை வழங்குகிறார்.

படம்1].பிளாஷ்பேக்’. இது ஒரு காதல் கதை. ரெஜினா கசன்ட்ரா, இளவரசு, அனுசுயா, உமா ரியாஸ், ஆர்யன் உள்பட பலர் நடிக்கிறார்கள். டான்சேண்டி கதை, ஒரு காதல் கதை.திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார்.

பாடம்2].பிரபுதேவா கதாநாயகனாக  ‘மஞ்சள் பை’, ‘கடம்பன்’ ஆகிய படங்களை இயக்கிய ராகவன் டைரக்டு செய்கிறார்.

படம்3].ரவுடி பேபி’. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். ராஜா சரவணன் டைரக்டராக அறிமுகம் ஆகிறார்.

படம்4].பிரபுதேவா நடிக்கிறார். படத்தின் பெயர், ‘பிளாக் மேஜிக்’. இதில், ஸ்ரீராம் ராமசாமி டைரக்டராக அறிமுகம் ஆகிறார். இது, மேஜிக் கலை பற்றிய திகில் படம்.

படம்5].படம், கோஸ்ட்’. இந்தப் படத்தை இயக்குபவர், தமிழரசன். சகோதரியின் மரணத்தில் சந்தேகம் கொண்ட கதையின் நாயகி உண்மையை கண்டறிய பயணமாவது போன்ற திகில் படம்.

📽நடிகர் உதயா இயக்கி நடித்த ‘செக்யூரிட்டி’ என்ற குறும் படம், தென்னிந்திய திரைப்பட விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த இசையமைப்பாளர் ஆகிய 5 விருதுகளை வென்று இருக்கிறது.இது, இந்திய ராணுவ வீரர்களை பெருமைப்படுத்தும் படம்.

📽தென்னிந்திய கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்கி வரும் நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து, வருமான வரி கணக்கு காட்டுவதற்காக ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற சொந்த பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். வாங்குகிற சம்பளத்தை எல்லாம் புத்திசாலித்தனமாக சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய 3 மாநிலங்களிலும் சொத்துக்களாக வாங்கி குவித்து வருகிறாராம்.

📽நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ பட நிறுவனம் ‘கூழாங்கல்’ என்ற படத்தை  தயாரித்துள்ளது. பி.எஸ்.வினோத்ராஜ் டைரக்டு செய்து இருக்கிறார். ‘கூழாங்கல்’ படம் அடுத்த மாதம் (பிப்ரவரி) நெதர்லாந்தில் நடைபெற இருக்கும், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின்  உயரிய அங்கீகாரமான ‘டைகர்’ விருதுக்கான   போட்டி பிரிவில் திரையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

📽விஜய், அஜித் ஆகிய இரண்டு பேருடனும் வில்லனாக நடித்தவர், ஜெகபதிபாபு. இவர் ஒரு காலத்தில், தெலுங்கு பட உலகின் பிரபல கதாநாயகன். ஆனால் கதாநாயகனாக நடித்து வாங்கியதை விட, வில்லன் வேடங்களுக்கு அதிக சம்பளம் வாங்கி வருகிறார். இப்போது அவருடைய சம்பளம், ரூ.3 கோடி

📽கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான் பீட்சா பேய் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. அஷ்வின் கக்குமானு, காளி வெங்கட், ரவீனா தாஹா, பவித்ரா மாரிமுத்து, கவுரவ் நாராயணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

 

தொகுப்பு: செல்லத்துரை மனுவேந்தன் 

 

 

.

No comments:

Post a Comment