தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய்சேதுபதி வில்லன், முதியவர், திருநங்கை கதாபாத்திரங்களில் நடிப்பதுடன் , இந்தியில் ரீமேக் செய்யப்படும் 'மாஸ்டர்' படத்திலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் 'சலார்' படத்திலும் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
‘ஹலோ நான் பேய் பேசுறேன்' பட டைரக்டர் பாஸ்கர், அடுத்ததாகவும் ஒரு பேய் படத்தை இயக்குகிறார். அதில், கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்துள்ளாராம்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் ஷமீம் இயக்கத்தில் வெளியான 'சில்லுக்கருப்பட்டி' படத்தில் முக்கிய கேரக்டர் ரோலில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம் கார்வ் மகா. இவர் இஸ்ரேல் தற்காப்புப் கலையில் பயிற்சி பெற்ற நிபுணர். எனவே இவர் தமிழக போலீஸாருக்கு பயிற்சி வழங்கி வந்தார். இன்று இவர் தனது இல்லத்தில் மாடியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கீழே விழுந்து விபத்தில் உயிரிழந்தார்.
சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள மூன்று திரைப்படங்களும் கிராமத்து கதைக்களத்தைக் கொண்டவையாக அமையவுள்ளன. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் ஒரு படத்திலும் , சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ''வாடிவாசல்'' படத்திலும் நடிக்கவுள்ளார்.
மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ''ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்'' எனும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் வாங்கியுள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் அவருடன் , பிக்பாஸ் தர்ஷன் னும் நடிக்கவிருப்பதாகத் தெரிய வருகிறது.
வடசென்னை பரம்பரைகளின் வரலாற்றை மையமாக வைத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் 'சார்பட்டா'. இந்த படம் மார்ச் அல்லது ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'தர்மபிரபு', 'கூர்கா' படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள யோகி பாபு நாயகனாக நடிக்கும் 'பொம்மை நாயகி' புதிய படத்தை பா.இரஞ்சித்தின் 'நீலம் புரொடக்ஷன்ஸ்' தயாரிக்கவுள்ளது. இதனை புதுமுக இயக்குநர் ஷான் என்பவர் இயக்குகிறார்.
16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள், கடல் வழியாக இந்தியாவுக்கு வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயர் என்ற வீரரின் கதையை மையமாக வைத்து, மோகன்லால் கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உட்பட பலர் நடிபில் உருவாக்கிய ''அரபிக்கடலின் சிங்கம்'' தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸ் ஆக இருக்கிறது.
கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படமும் , சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் படமும் காதலர் தினத்தையொட்டி வருகிற பிப்ரவரி மாதம் 12-ந் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.
தொகுப்பு:செமனுவேந்தன்
No comments:
Post a Comment