நெஞ்சம்
மறப்பதில்லை- எஸ்.ஜே.சூர்யா
கொரோனாவால்
சூர்யாவின் சூரரை போற்று, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், விஜய்சேதுபதியின்
க.பெ.ரணசிங்கம்,
கீர்த்தி
சுரேசின் பென்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, அனுஷ்காவின்
நிசப்தம் மற்றும் லாக்கப், மாதவன் நடித்த மாறா உள்ளிட்ட பல படங்கள்
தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டன. அடுத்து ஜெயம் ரவி
நடித்துள்ள பூமி , எஸ்.ஜே.சூர்யா, பாபி
சிம்ஹா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட
பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்ரம்
நடிப்பில் ‘கோப்ரா’
விக்ரம்
நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா. ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி
நடிக்க, இர்ஃபான்
பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான்
விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அதில், கணிதத்தில்
சிறந்து விளங்கி பல விருதுகளை பெறும் விக்ரம், அதனை பயன்படுத்தி ‘கோப்ரா’ என்ற
பெயரில் வெளிநாட்டில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகிறார். அவரை பிடிக்க வரும் காவல்
அதிகாரியாக இர்பான் பதான் தோன்றுகிறார்.
சூது
கவ்வும் 2
2013-ல் வெளியான
சூது கவ்வும் விஜய்சேதுபதிக்கு திருப்பு முனை படமாக அமைந்தது. சூது கவ்வும்
படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதில் முக்கிய
கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கருணாகரன், காளி
வெங்கட் ஆகியோரும் நடிக்கின்றனர். சூது கவ்வும் 2 படத்தை
எம்.எஸ்.அர்ஜுன் இயக்குவதாக கூறப்படுகிறது.
சில
மாதங்களில்….
கொரோனாவால்
பிந்திய திரைப்படங்களாக விஜய்யின் மாஸ்டர், சிம்புவின்
ஈஸ்வரன் ஆகிய படங்கள் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகின்றன. மேலும் ரஜினியின் அண்ணாத்த ,கமலின்
இந்தியன் 2,
அஜித்தின்
வலிமை, யாஷின்
கேஜிஎப் 2,
விக்ரமின்
கோப்ரா, துருவ
நட்சத்திரம் ஆகியவை, தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி
இருக்கும் கர்ணன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே
தந்திரம், ஆனந்த்
எல்.ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே ஆகியவை, விஜய்
சேதுபதியின் லாபம், கடைசி
விவசாயி, இடம்
பொருள் ஏவல்,
மாமனிதன், காத்துவாக்குல
ரெண்டு காதல்,
கொரோனா
குமார், முகிழ் ஆகியவை, கார்த்தி நடித்துள்ள சுல்தான்
சில மாதங்களில் வெளியாகும் என தெரியவருகிறது.
தமிழ்
சினிமா விருது
பன்முகத்தன்மை
வாயந்த நடிகர் -அஜித்குமார், சிறந்த
நடிகர் - தனுஷ் (அசுரன்), சிறந்த நடிகை - ஜோதிகா (ராட்சசி), சிறந்த
இயக்குனர் - ஆர்.பார்த்திபன் (ஒத்தசெருப்பு சைஸ் 7), சிறந்த
படம் - டூ லெட்,
சிறந்த
இசையமைப்பாளர் - அனிருத், ஆகியோர்
2020-ம்
ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய தமிழ் சினிமா விருதுக்கு தேர்வாகி
உள்ளனர்.
'விருமாண்டி'
கமல்
நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான 'விருமாண்டி' திரைப்படம், வரும்
ஜனவரி 14ம்
தேதி முதல் அமேசான் பிரைம் தளத்தில் மீண்டும் திரையிடப்படுகிறது.
‘ஜகமே
தந்திரம்’- தனுஷ்
கார்த்திக்
சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் , ஐஸ்வர்யா லெக்ஷ்மி,கலையரசன் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் வரும்
பிப்ரவரி 12
ஆம் தேதி வெளியாகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சன்
டிவியில் ரிலீசாகும் படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர்
பிரபுவின் மகனும் ஆன விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் னுடன் நடித்துள்ள
படம் ‘புலிக்குத்தி பாண்டி’ ஜனவரி 15ஆம் தேதி மாலை 6.30
மணிக்கு சன் டிவியில் நேரடியாக ரிலீசாகும்
என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்ணத்
திரையிலும் ஹீரோவாக
விஜய்
டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்தி கேயனைத் தொடர்ந்து இனி, விஜய்
டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தேன்மொழி பி ஏ என்ற சீரியலில்
நடித்துக் கொண்டிருக்கும் சித்தார்த் என்பவர் வர்ணத் திரையிலும் ஹீரோவாக களம்
இறங்க உள்ளாராம்.
தியேட்டர்
உரிமையாளர்கள் கொள்ளை
திரைக்கு
வரும் 'மாஸ்டர்' படத்தை
வைத்து வசூல் செய்ய ஜனவரி 13-ஆம்
தேதி முதல் நாள் முதல் காட்சிக்கு ஒரு டிக்கெட் விலை இதுவரை இல்லாத அளவுக்கு 1000
முதல் 2000
வரை விற்கப்படுகிறதாம். இதுவரை
கொரோனாவினால் இழந்தவற்றின் பல மடங்கினை தியேட்டர் உரிமையாளர்கள் கொள்ளையிடத்
தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
தொகுப்பு:-செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment