"பிள்ளைகளின் வளர்ப்பு முறையில் ..../ பகுதி 03


ஆண்பிள்ளைகளுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் காட்டும் வேறுபாடுகள்" 

 


குழந்தை வளர்ப்பு என்றவுடன் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டும் அல்ல. அறமும், ஒழுக்கமும் அவர்களுக்கு கற்பிக்கும் உயரிய பொறுப்பு அது என்பதை உணரவேண்டும். அது ஆண்பிள்ளை, பெண்பிள்ளை இருவருக்கும் சமமாக கொடுக்கப்பட வேண்டும். ஆனாலும் இன்னும் நமது சமுதாயத்தில் பெண்பிள்ளைகளை வளர்ப்பதிலும் ஆண்பிள்ளைகளை வளர்ப்பதிலும் காலம் காலமாக ஒரு வேறுபாடு இருந்து வருகிறது. குறிப்பாக பருவ வயதில், அவர்களுக்கு உடல் ரீதியாக மாற்றம் ஏற்படும் பொழுது பெண் பிள்ளைகளை நாம் பேணுவதை போல ஆண் பிள்ளைகளை பேணத் தவறுகிறோம். உதாரணமாக, சமுதாயத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எப்படி உடையணிய வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை பெண் பிள்ளைகளுக்கு அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஆண் பிள்ளைகள் அதே வயதில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு தடுமாறுகிற மனநிலையில் இருக்கும்போது நாம் அவர்களை கண்டுகொள்வதே இல்லை. மேலும், பெண்பிள்ளைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்காமல், அவர்களை தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயது முதலே சொல்லி கொடுக்க வேண்டும். இதன் மூலமே, நம் வீட்டிலிருந்து ஒரு குற்றவாளியை, எதிர்கால சமுதாயத்துக்கு கொடுப்பதை தடுக்கலாம் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.

 

பொதுவாக குழந்தை வளர்ப்பு முறையில் ஆண், பெண் என எந்தப் பேதமும் கிடையாது. ஆண் குழந்தைக்கும் நல்ல வளர்ப்பு கட்டாயம்  தேவைப்படுகிறது.  இன்றைய ஆண் குழந்தைகள் கேட்பர் அற்று சிலவேளை அவர்களாகவே வளர்ந்து கொள்கிறார்கள். ஒழுக்கம் என்பது  ஒரு குறிப்பிடட  வயதில் சொல்லிக்கொடுப்பது அல்ல, குழந்தைப் பருவத்திலேயே சொல்லித்தரப்படுவது. பெரும்பாலான பெற்றோர்கள்  செய்கிற பெரிய தவறு,  ஆண் குழந்தைகளை பல வேளைகளில்  சுதந்திரமாக விட்டு விடுவது; அல்லது அதிக கெடுபிடியுடன் நடந்துகொள்வது. இரண்டுமே தவறு.


நாம் முதலில் பாலியல் வல்லுறவு என்றால் என்ன என்று பார்ப்போம். பாலியல் வல்லுறவு அல்லது பாலியல் வன்கொடுமை (Rape) என்பது ஒருவர் இன்னொருவரை அவரது விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி பாலுறவிற்கு உட்படுத்தும் வன்முறையாகும். இங்கு பெரும்பாலும் பெண்களே வன்புணர்ச்சிக்கு [வன்கலவிக்கு] உட்படுத்தப்படுபவர்களாக உள்ளனர். மற்றது  பொதுவாக உலக அளவில் ஆண்களே பாலியியல் வல்லுறவில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். இவைகளுக்கு முக்கிய காரணம், ஆண் , பெண் உடலமைப்பு ஆகும். ஏனென்றால்  உடலுறவு என்பது ஆண் குறியை பெண் குறிக்குள் ஊடுருவி நுழைப்பதாகும். எனவே ஒரு பெண்ணால் ஒரு ஆணை வன்புணர்ச்சி செய்ய முடியாது [it is physically impossible for a woman to rape a man]. மற்றது வலுக்கட்டாயமாக ஆனால், பெண்குறிக்குள் ஊடுருவி செலுத்த முடியும், னால், பெண்ணால் ஆக்க கூடுதலாக ஒரு ஆணை கட்டாயப்படுத்தி, அவரை இசையை வைத்தே அதை சாதிக்க முடியும். இந்த வேறுபாடை நீங்கள் விளங்கி கொள்ள வேண்டும் [forcibly penetrate someone than to force them to penetrate you]. அடுத்தது வன்புணர்ச்சியால் ஏற்படும் பின் விளைவுகளில் ஒன்றான கருத்தரிப்பு ஆகும். இது பெண்களில் மட்டுமே நடைபெறுகிறது. ஆகவே இவைகளும் பெண்பிள்ளைகளுக்கும்  ஆண்பிள்ளைகளுக்கு கட்டுப்பாடுகளில் சில வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன என்பது இன்றைய சமூக சூழலில் உண்மையே. சமூக சூழலை சரியான வழியில் மாற்றுவது மூலம் இந்த வேறுபாடுகளை குறைக்க முடியும். இது ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து ஆரம்பிக்க வேண்டும். தமது ஆண், பெண் பிள்ளைகளுக்கு சரியான புரிந்துணர்வை ஊட்டுவதுடன், நல்ல சமூக உறுப்பினர்களாக அவர்களை வளர்த்தெடுக்க பாடுபட வேண்டும் என்பதே என் கருத்து. இது நடைமுறை படுத்தப் படாத வரையில், இந்த வேறுபாடுகள் தொடரும் என்பதே உண்மையாகும்  

 

மேலும் பிள்ளைகள் தான் எமது வருங்கால நாட்டின் செல்வங்கள். அவர்களுக்கு சிறப்பான பாடங்களை கற்றுக் கொடுத்து, சீராக வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பார்கள். சிறு வயதிலிருந்தே சிறந்த முறையில் அறிவுகளை அளித்து வளர்த்து வந்தால் தான், அவன் பெரியவனாகி சிறந்த குடிமகனாக வளருவான். வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை செய்பவனாக வளருவான். ஆண்பிள்ளை என்றோ, பெண்பிள்ளை என்றோ இதில் பாகுபாடு ஒன்றும் கிடையாது. இருவரும் தம் தம் பங்கை உணரக் கூடியதாக வளர்க்க வேண்டும்

 

ஆக மொத்தத்தில்.. வெறுமனவே ஆண்களை திட்டுவதாலோ.. பெண்களை வீட்டுக்குள் அடைத்து  வைப்பதாலோ.. இவற்றிற்கு தீர்வு வராது. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு சகஜமாகப் பழகி, தவறுகள் செய்யக் கூடாது என்பதை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின், நிச்சயம் அதுவே, மனித வாழ்கை சிறக்க உதவும் ! 

 

ஆண் பிள்ளைகளின் முன்னுரிமைக்கு அல்லது விருப்பத்திற்கு இன்று கையாளும் உறவினர் அமைப்பு [kinship system] முறையும் ஒரு காரணமாகிறது. எனவே, அந்த அமைப்பு முறையில் தம் பங்கை வலுப்படுத்த, ஆண்பிள்ளை முன்னுரிமை தோற்றம் பெறுகிறது. இதனால் தான் 'பெயர் சொல்ல ஒரு ஆண் பிள்ளை வேண்டும்' என்ற ஒரு நிலைப்பாடும் ஏற்படுகிறது எனலாம். அத்துடன் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். தாய் தந்தைக்கு திதி, திவசம் செய்கிறபோது, மூன்று தலைமுறையின் பெயர் சொல்லி, எள்ளும் தண்ணீரையும் இறைப்பது இந்துக்களின் வழக்கம். அதே போல கல்யாண சடங்கிலும் மூன்று தலைமுறையின் பெயர் சொல்லப்படுகிறது. இங்கு தலைமுறையின் ஆண்களின் பெயர் மட்டுமே சொல்லப் படுகிறது என்பதை கவனிக்க. இதுவும் ஆண் பிள்ளைக்கு முன்னுரிமை கொடுக்க தூண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

இந்த ஆண் பிள்ளை மேல் உள்ள மோகம், அதனால் கடைபிடிக்கும் வழிகளால், குறிப்பாக சீனா, இந்தியா போன்ற நாடுகளில், ஆண் பிள்ளைகளின் தொகை பெண்பிள்ளைகளை விட கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அப்படியான சூழ்நிலை பெருகும் பொழுது, எல்லா ஆண்களுக்கும் திருமணம் செய்ய, காதலிக்க பெண் கிடைக்காமல் போகும். இது ஒரு ஆபத்தான சூழ்நிலை. அப்படியான ஆண்கள் தம் இயலாமையால் ,மாற்று வழியாக பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து இருப்பார்கள் என்பதும் கண்கூடு. இதுவும் அப்படியான நாடுகளில் பெண் பிள்ளைகள் மேல் பாதுகாப்பு கருதி, கட்டுப்பாடு விதிக்க வழிவகுக்கிறது எனலாம். 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

முற்றிற்று 

 

No comments:

Post a Comment