சொல்லாமலே, சுந்தரப்
புருஷன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் லிவிங்ஸ்டன். இவரது மகள் ஜோவிதா.
இவரும் நடிகை அம்பிகாவின் மகனும் ஒரு புதிய படத்தில் நடித்தனர், ஆனால்
அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், 'பூவே உனக்காக' என்ற
தொடரில் நடிக்கத் தொடங்கினார்.ஆனால் சில மாதங்களிலேயே அத்தொடரில் இருந்து
வெளியேறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
மக்கள்
நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அடுத்தவருடம் நடக்கவுள்ள சட்டமன்றத்
தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில்
’’மய்யம் மாதர்;;
என்ற
புதிய பிரிவை பெண்களுக்காக
தொடங்கியுள்ளார்.
மறுபடியும்
நடிகர் வாகை சந்திரசேகர். இப்போது நிறைய பட வாய்ப்புகள் வருவதால் சினிமாவில்
மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.இவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக
சார்பில் வேளச்சேரியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்திய
திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கி வரும் ஸ்டண்ட் மாஸ்டர், பீட்டர்
ஹெய்ன். இவர் ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்குகிறார். தமிழ் படங்களை
விட, தெலுங்கு, இந்தி
படங்களில் பணிபுரிவதில் பீட்டர் ஹெய்ன் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
கார்த்திக்
சுந்தர் இயக்கத்தில் ஹரீஸ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில்
காதலும், நகைச்சுவையும்
கலந்த ''ஓமணப்பெண்ணே’
படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.30 நாட்களில் படப்பிடிப்பு
முழுவதையும் முடித்து விட்டோம். இப்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன” ”
என்கிறார்,
படத்தின்
டைரக்டர் கார்த்திக் சுந்தர்.
தமிழ்
சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா வழியை பின்பற்றி பார்வதி நாயர்
நடிக்கும் - அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் 'ரூபம்' முழுப் படத்தையும்
சென்னையிலேயேபடமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது.
‘வருத்தப்படாத
வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா.பிசியாக
நடித்து வந்த அவர், கடைசியாக 2017ம்
ஆண்டு வெளியான ‛சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படத்தில் நடித்தார். 3
வருடங்களாகளின் பின் தற்போது அவர் பாணா காத்தாடி பட இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்
இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ், தெலுங்கில்
வளர்ந்து வரும் நடிகையான ராஷி கண்ணா, அடுத்ததாக விக்ரமுக்கு
ஜோடியாக இயக்குனர் ஹரி விக்ரமுடன்
கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை
ஜெயசித்ராவின் கணவரும் இசையமைப்பாளர் அம்ரிஷின் தந்தையுமான கணேஷ், திருச்சியில்
நேற்று காலமானார்.
தமிழ்
சினிமாவின் பல படங்களுக்கு வசனம் எழுதி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்த
ஈரோடு சவுந்தர் நேற்றுக் காலமானார்.
தொகுப்பு :செ .மனுவேந்தன் [Manuventhan]
No comments:
Post a Comment