திரைக்கு இவ்வாரம் ...


 

ரீ-என்ட்ரி

நீண்ட நாட்களாக சீரியல் ஹீரோவாக இருந்த ராஜ்கமல். வெளியான பச்சைக் குதிரைசரோஜா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தபின் சினிமாவில்   ஹீரோ ஆசையில் நடித்த திரைப்படம் ‘மேல்நாட்டு மருமகன்’ படுதோல்வியை சந்தித்தது. எனவே தற்போது மீண்டும் சன் டிவியில்  ஒளிபரப்பாகும் 'அபியும் நானும்' சீரியல் மூலம் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்து  உள்ளாராம்.


'துக்ளக் தர்பார்'

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'துக்ளக் தர்பார்படத்தில் நடிக்க சம்யுக்தா கார்த்திக் இணைந்திருக்கிறார்.  அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் 'துக்ளக் தர்பார்அரசியல் நையாண்டி பாணியில் உருவாகி வருகிறது. லலித் குமார் இப்படத்தை தயாரித்து வருகிறார்.


விருது

கோவாவில் நடக்க உள்ள 2020-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் சர்வதேச பனோரமா திரைப்பட விருதுக்கு இரண்டு தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமும்கணேஷ் விநாயகனின் ‘தேன்’ திரைப்படமும் விழாவில் திரையிட தகுதி பெற்றுள்ளது.


''பாட்டு''

நடிகை நயன்தாரா. தற்போது அவர் ரஜினிகாந்த்துடன் ''அண்ணாத்த'' பட ஷூட்டிங்கில் நடிப்பதற்காக ஐதராபாத் சென்றுள்ளார். இந்நிலையில்பிரபல மலையாள நடிகர் பகத்ஃபாசில் ''பாட்டு'' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.


ஈஸ்வரன்’

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தளபதி 65

மாஸ்டர் படத்திற்கு பின் தற்போது தளபதி விஜய் நடிக்கவிற்கும் படம் தளபதி 65. சர்கார் படத்திற்கு பிறகு தளபதி 65யை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. நெல்சன் திலீப்குமார் தளபதி 65 படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனாவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடித்தி வருகிறார்களாம்.


‘’பாம்பாட்டம்’’

2002ஆம் ஆண்டு  யுனிவர்சிட்டி என்ற படத்தில்  தொடங்கிய ஜீவன்.  2003 இல்  சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து ஹீரோவாக நான் அவனில்லை வெற்றியை கொடுத்தது. தற்போது மூன்று வேடங்களில் ஜீவன் நடிக்கும் ‘’பாம்பாட்டம்’’ படம் ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. ஜீவாவுக்கு ஜோடியாக சந்தானத்தின் டகால்டி பட நடிகை ரித்திகா சென் மற்றும் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளனர்.


மாஸ்டர்’’

பொங்கல் விருந்தாக வரும் விஜயின் “மாஸ்டர்’’ படம் ‘ரிலீஸ்’ ஆகும் நாளில் இருந்து 5 நாட்களுக்கு வேறு படங்களை திரையிடக்கூடாது” என்ற தயாரிப்பாளர்களின் நிபந்தனையை தியேட்டர் அதிபர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.


சில்க் ஸ்மிதா வாழ்க்கை

நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகைமர்மமான முறையில் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் பிணமாக கிடந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


கொட்டேசன் கேங்’

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற பிரியாமணி ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் நடிக்கிறார். ‘கொட்டேசன் கேங்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இவருடன் பேபி சாரா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். விவேக் டைரக்டு செய்கிறார்.


'எக்கோ'

அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'எக்கோ'. நடிகர் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை வித்யா பிரதீப் நடித்திருக்கிறார்.


தொகுப்பு:செ.மனுவேந்தன் 


No comments:

Post a Comment