இனப்படு கொலையின் ஆரம்பம் ...


 

உலகில் எங்கு இனப்படுகொலை நடந்தாலும் முதலில் நியாயம் கேட்க பக்கத்து நாடுகளை அழைப்பார்கள். அப்பொழுது நியாயம் கிடைக்கவில்லை என்றால் ஐ.நா அல்லது அமெரிக்கா தலையிட வேண்டும் என்பார்கள். அப்படி உலகின் மிக பெரிய நாட்டாமையாக ‘அமெரிக்கா’ என்று எல்லோரையும் நம்ப வைத்திருக்கிறது. ஆபத்தான அணு அயுதங்கள் எல்லாம் தாம் தயாரித்துக்கொண்டு , மற்ற நாடுகள் மட்டும் தயாரிக்கும் போது தீவிரவாதி நாடு என்று போர் தொடுக்கும். உள்ளூர் பிரச்சனைப் பற்றிக் கவலைப்படாது. என்ன நடந்தாலும் தனது ‘நாட்டாமை’ இமேஜ்யில் இருந்து இம்மி அளவுக் கூட இறங்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது. ஆனால், ‘அமெரிக்கா’ என்ற தேசம் தயாரானது ‘செவ்விந்தியர்களின் இனப்படுகொலை’ யில் தான்.


அமெரிக்கா என்ற வல்லரசு உருவானதே ‘செவ்விந்தியர்’ என்று அழைக்கப்படும் பழகுடியினர் உடல்கள் மீது தான். அமெரிக்காப் போல் அடிமையாக இருந்த நாடில்லை. அடிமைகளை வைத்துக் கொண்ட நாடுமில்லை. ஆனால், அமெரிக்க கருப்பின அடிமைகள் வேறு. செவ்விந்தியர்கள் வேறு. செவ்விந்தியர்கள் அடிமைகளாக வாழ்பவர்கள் இல்லை. போராடும் குணம் இவர்கள் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று !


உலகில் வெற்றிக்கரமாக நடத்தப்பட்டு, ஒரு இனத்தை அடக்கி ஒடுக்கி முதல் இனப்படுகொலை அது ‘செவ்விந்தியர் இனப்படுகொலை’ எனலாம். இருபதாம், இருப்பத்தி ஒன்றாம் நூற்றாண்டில் எத்தனையோ இனப்படுகொலை நடந்திருப்பதை படிக்கும் நாம், இப்படி பதிவாகப்படாத இனப்படுகொலை பலருக்கு எப்படி தெரியும். ஏன் அமெரிக்காவே மறந்திருக்கலாம்!

 

அமெரிக்க மண்ணின் உண்மையான சொந்தக்காரர்கள் செவ்விந்தியர்கள் தான். பல்லாயிரம் வருடங்களுக்கு முன் அலாஸ்காவும், ஆசியாக் கண்டமும் ஒரே நிலப்பரப்பாக இருக்கும் போது ஆசியாவிலிருந்து இடம் பெயர்ந்து இந்த மக்கள் அலாஸ்கா வழியாக அமெரிக்கா சென்று இருக்க வேண்டும். அமெரிக்க முழுவதும் பரவி ‘ செவ்விந்தியர்கள்’ இனம் உருவானது என்று ஒரு ஆராய்ச்சி குறிப்பு சொல்கிறது.


இன்னொரு குறிப்பில், மெக்சிகோவில் இருந்த இந்திய வம்சாவளிகள் என்று கூறுகிறார்கள். இந்தியாவை கண்டு பிடிக்க கிளம்பிய கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மண்ணின் சொந்தக்காரர்களிடம் கடுமையாக மோதி, சண்டையிட்டு கொடூரமான தாக்குதல் நடத்தினார். ‘நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்பது போல், தான் கைது செய்த மண்ணின் மைந்தர்களை ‘இந்தியர்கள்’ என்றும், இரத்தக்கரையுடன் காணப்பட்டதால் இவர்களுக்கு ‘செவ்விந்தியர்க:’ என்று பெயர் வைத்தார் என்று வேடிக்கையாக சொல்லப்படுகிறது. எது எப்படியானாலும் இவர்கள் தான் ‘அமெரிக்காவின் பூர்வ குடிமக்கள் ‘ என்பது மாற்று கருத்து இல்லை.

 

இவர்கள் பேசும் மொழிக்கு இன்று வரை பெயரிடப்பட வில்லை. ஆனால், செவ்விந்தியர்கள்  இந்தியர்,இலங்கையர் போன்று வெள்ளைத்தோல்களை  கண்டதும் மயங்கவில்லை, உள் நாட்டுக்காரர்களை காட்டி கொடுக்கவில்லை , பேராசை பிடித்து வெள்ளையனை வணிகம் செய்ய அனுமதித்ததும், அவர்களிடம் சரணடையவும் இல்லை.

 

மண்ணாசை பிடித்து பிரிட்டன் அமெரிக்காவை முற்றுகையிட்ட போது செவ்விந்தியர்கள் அவர்களை எதிர்த்து கடுமையாக தாக்கினார்கள். பிரிட்டன் அவர்களை அடக்கி, ஒடுக்கி நடத்த முடியவில்லை. முரட்டு தனமாக அவர்கள் தாக்குதல் இருந்தது. கல்லும், விஷ அம்பு தாக்குதலை சமாளிக்க பிரிட்டன் எதிர் தாக்குதல் நடத்தியது. கடும் ஆயுத பலம் கொண்ட பிரிட்டனை எதிர்த்து பூர்வ குடியான செவ்விந்தியர்கள் யுத்தம்மிட முடியவில்லை. பிரிட்டனின் துப்பாக்கிக்கு லட்சக் கணக்கான செவ்விந்தியர்களை இரையானார்கள்.

 

ஏராளமான மரணங்கள். ரத்த நிறத்தில் மாறிய இயற்கை வளங்கள். குழந்தைகள், பெண்கள் என்று யாரும் பாகுபடில்லை. பல லட்ச உயிர்களில் மேல் தான் பிரிட்டன் தனது அமெரிக்கா மீது சாம்ராஜ்ஜியத்துக்கான உயில் எழுதியது. பலர் இறந்த பிறகு மிச்சம் மீதி இருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வடப்பகுதியில் கொஞ்சமும், தென் பகுதியில் கொஞ்சமும் பதுங்கி இருந்து வாழ்ந்தார்கள்.


வட அமெரிக்காவின் பூர்வ குடிகளான சொரோக்கி செவ்விந்தியர்களை திடீரென ஒரு நாள் ஜியார்ஜியாவிலிருந்து வெளியேற்றி, ஓக்லோகோமா என்ற மாகாணத்திற்கு நகர்த்தினார்கள். அது ஓர் எலும்பை நொறுங்க செய்யும் பனிக்காலம். நடையோ 2200 மைல்கள். போகும் வழியிலேயே 4000 பேர் மரணித்திருக்கிறார்கள். அந்த நடைக்குப் பெயர் "கண்ணீர்ப் பாதை (Trail of Tears).


பல வருடங்களாக பிரிட்டன் ஆட்சிக்கு அஞ்சி ஒதுங்கி இருந்து தங்கள் வாழ்க்கை நடத்தினர். நகர வாழ்க்கையில் இருந்து தங்களை தாங்களே தனிமைப்படுத்துக் கொண்டனர். சத்திர வீடு முறை எல்லோரும் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்தார்கள். ஆயிரம் பேர் தங்கக்குடிய மிக பெரிய வீட்டில் ஒருவர் மட்டும் சென்று வருவது போல் தங்கள் வாழ்க்கை நடத்தினர். எல்லொரும் ஒரு குடும்பமாக எதிரிகளிடம் பாதுகாத்துக் கொண்டனர்.

 

ஒரு சில செவ்விந்தியர்கள் பழக்க வழக்கங்கள் அமெரிக்க மக்கள் வாழ்க்கையில் கலந்திருக்கிறது. குறிப்பாக ப்ரீ செக்ஸ் !! செவ்விந்தியர்கள் யார் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் என்ற கலாச்சாரத்தில் வாழ்ந்தார்கள்.

 

இன்று, அமெரிக்க மக்கள் அந்த முன்னோடியாக இருக்க காரணம் செவ்விந்தியர்கள். இன்று பல செவ்விந்தியர்கள் நாகரிகமடைந்து நகர்ப்புற வாழ்க்கை வாழ்க்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த இடம் ஒரு நினைவு சின்னமாக இருக்கிறது. அதை சுற்றுலா தளமாக்கி அமெரிக்க அரசு அதிலும் பணம் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், செவ்விந்தியர்களுக்கு சொந்தமாக ஒரு நிலம் கூட இல்லை என்பது தான் வருத்தம். திருட்டு, வழிப்பறி, சட்ட விரோத காரியங்கள் ஈடுப்பட்டு தான் தங்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள்.


இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அமெரிக்க அரசு எவ்வளவோ சலுகை வழங்கியும் அவர்கள் வாழ்க்கை தரம் உயரவில்லை. அதேப் போல் குடித்து விட்டு கலாட்டா, பிரச்சனை என்று எது வந்தாலும் போலீஸ் அவர்களை ஒன்றும் செய்யாது. பூர்வ குடிகள் என்ற சலுகை !!


இது இனப்படுகொலையாக இன்று கருதப்படாததற்கு இரண்டு காரணம். ஒன்று, ஆளும் வர்க்கத்தில் அமெரிக்கா இருப்பது. இன்னொன்று இரண்டு நாடுகளுக்குள் நடந்திருக்கும் யுத்தமாக பார்ப்பது. ஒரு நாடு அடிமையாக்கி இன்னொரு நாடு ஆட்சி செய்வது காலனி ஆதிக்கத்தில் காலம் காலமாக நடப்பது தான்.

 

போரில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துவது வேறு. ஒரு இனம், கலாச்சாரம் இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டு ஆட்சி செய்ய நினைப்பது வேறு. தங்கள் நாடு என்ற சொந்தமறியாமல் செவ்விந்தியர் வாழ்ந்து வருகிறார்கள். இதை இனப்படுகொலை என்று சொல்லாமல் வேறென்ன சொல்லுவது?

பெரும்பாலும் வெள்ளைக்காரர் உட்பட  வந்தேறிகள் ஆளும் ,அமெரிக்கா ,கனடா,அவுஸ்ரேலியா போன்ற பல  நாடுகளில் பூர்வ குடிகள் அழிக்கப்பட்டே வருகிறார்கள். அதிலும் பல நாடுகள் வளர்ந்த நாடுகளாகவே மிளிர்கின்றன. உள்நாட்டில் பூர்வகுடிகளை அழித்துக்கொண்டு வெளியில் வேஷம் போடும் நாடுகளை ,இலங்கைத் தமிழர் இன்னும் நம்பிக் கொண்டிருப்பது சுத்த மடமைத்தனம் ஆகும்.

 

:படித்ததில் தொட்டவை:தொகுப்பு-செமனுவேந்தன்

1 comment:

  1. அமெரிக்காவோ அல்லது வேறு நாடுகளோ தமிழ் ஈழத்திலையோ அல்லது தமிழரிலையோ கரிசனை கொள்ள தமிழரிடமோ அல்லது தமிழர் வாழ் நிலங்களில்லையோ எதுவும் இல்லை. திருமலை தேவையென்றால் அவன் இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அஃது இருக்க பெரும் படையை செலவழித்து உங்களுக்கு ஈழம் தந்து பின் உங்களிடம் கேட்கவேண்டிய அவசியமும் அமெரிக்காவுக்கு இல்லை. சும்மா உம்பா வருகுது,உம்பா வருகுது என்று சின்னவயதில் சூக்காட்டுவதுபோல் செயல்படுவதை விடுத்தது இருக்கும் மொழியையும், பண்பாட்டினையும் காக்க முன்வாருங்கள். முதலில் தமிழரோடு தமிழில் பேசுங்கள்

    ReplyDelete